🏏 விஜய் ஹசாரே ட்ராபி 2026

நியூசிலாந்துக்கு முன்னாடி ‘ரியல்ஆட்டம்
“எங்க ஏரியா உள்ள வராத” இல்ல…
“எல்லாரும் வாங்க” Vijay Hazare Trophy Mass Update 🏏 🎬🔥

புது வருஷம் பொறக்க போகுது… கூடவே விஜய் ஹசாரே ட்ராபியும் “பத்த வச்சுட்டீயே பரட்டை” ரேஞ்சுக்கு பத்திக்கிட்டு எரிய போகுது! 💥 நியூசிலாந்து தொடருக்கு முன்னாடி நம்ம பசங்க எல்லாரும் “டொமஸ்டிக் மேட்ச் ஆடிட்டு வாங்கப்பா”னு பிசிசிஐ  ஆர்டர் போட்டுட்டாங்க.

⚖️ பிசிசிஐ  உத்தரவு:

“சட்டம் தன் கடமையை செய்யும்!” 😎

🎶 “வானம் இடி இடிக்க… மேகம் மடை திறக்க…
நட்சத்திரங்கள் எல்லாம் கீழே இறங்கி வர…” 🎶

🦁 சுப்மன் கில்: பஞ்சாப் சிங்கம் களமிறங்குது!

நம்ம இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், பஞ்சாப் அணிக்காக ஜனவரி 3 மற்றும் 6-ம் தேதி ஜெய்ப்பூர்ல ஆடுறாரு. சிக்கிம் மற்றும் கோவா அணிகள் தான் எதிரி. ⚔️

📊 டீம் நிலவரம்: பஞ்சாப் ஏற்கனவே பாயிண்ட்ஸ் டேபிள்ல 4-வது இடத்துல இருக்கு. கில் வந்தா புள்ளிப்பட்டியல் பறக்கும்!

🎶 “நடை போடு ராஜா… நீ தான் இனி ராஜா…”


“பேர் கேட்டாலே சும்மா அதிருதுல்ல?” 👊

(எதிரணிகள்: “ஐயோ ஆள விடுங்க சாமி!” 🏃‍♂️)

⚔️ ஜடேஜா: “வாத்தி ரைடு” இன் சௌராஷ்டிரா!

ஜடேஜா பாய் சும்மாவே கெத்து… இப்போ சௌராஷ்டிரா அணிக்காக ஜனவரி 6 மற்றும் 8-ம் தேதி சர்வீசஸ் மற்றும் குஜராத் அணிகளை எதிர்கொள்ள போறாரு.

📊 டீம் நிலவரம்: சௌராஷ்டிரா டீம் கொஞ்சம் தடுமாறுது (6-வது இடம்). ஆனா நம்ம ‘சர்’ ஜடேஜா வந்தா அப்புறம் என்ன? கேம் சேஞ்ச் தான்! 🔄

 🗡️“கத்தி இருக்கு… ரத்தம் இருக்கு…

ஆனா நான் வந்தா விக்கெட் மட்டும் தான் இருக்கும்!”


“நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்!” 😎

🔥 ஜனவரி 7: பரோடா பாஸ்!

கில்லும், ஜடேஜாவும் லோக்கல் மேட்ச் முடிச்சுட்டு ஜனவரி 7-ம் தேதி பரோடாவுல இந்திய டீம் கூட சேர போறாங்க. அதுவரைக்கும் இங்கே ருத்ர தாண்டவம் தான்! 🏟️

🏏 கே.எல். ராகுல்: கிளாஸ் & மாஸ்! 🔥

கர்நாடகா டீம் ஏற்கனவே குரூப் A-ல கெத்தா ஜெயிச்சுட்டு வராங்க. இதுல கே.எல். ராகுல் வேற ஜனவரி 3 மற்றும் 6-ம் தேதி இணைய போறாருன்னா? 🏟️

🤫 அமைதிப்படை:

🎶 “அமைதி… அமைதி… அமைதியோ அமைதி…” 🎶

– னு அவர் அமைதியா வந்தாலும், பேட் பேசும்!

“சைலன்ட்டா இருப்பேன்… ஆனா வயலன்ட்டா அடிப்பேன்!” 🏏💥

(அகமதாபாத்ல திரிபுரா, ராஜஸ்தான் பவுலர்கள் உஷார்! ⚠️)

🦁 யஷஸ்வி ஜெய்ஸ்வால்: மும்பையின் நெருப்பு!

கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருந்த நம்ம ஜெய்ஸ்வால், இப்போ “ஐ ஆம் பேக்” னு ஜெய்ப்பூர் வந்து இறங்கிட்டாரு. டிசம்பர் 31 (இன்னைக்கு!) கோவா கூட மேட்ச்! 🎆 

🔥“நெருப்பு டா… நெருங்கு டா… பார்ப்போம்!” 🎶

“சிங்கம் சிங்கிளா தான் வரும்… ஆனா வந்தா வேட்டை உறுதி!” 🦁🏹

👑 விராட் & ரிஷப்: டெல்லியின் டபுள் டமாக்கா! 🎸

  • 🧢 கேப்டன்: ரிஷப் பந்த்
  • 👑 கிங் என்ட்ரி: விராட் கோலி (ஜனவரி 6)

🎶“எங்க ஏரியா… உள்ள வராத…” 😎

“டெல்லிக்கு ராஜான்னாலும்… கிரவுண்ட்ல இறங்கிட்டா ஆட்டநாயகன் தான்!”

💣 பும்ரா: “லீவு பாஸ்!”

ரோஹித், கோலி, பந்த்னு எல்லாரும் ஆடுறாங்க. ஆனா நம்ம பும்ராவுக்கு மட்டும் லீவ்.

“அவர் மட்டும் ஸ்பெஷல்… ஏன்னா அவர் யாரு?
நம்ம டீமோட பிரம்மாஸ்திரம்!” 🚀

நியூசிலாந்து சீரிஸ் வரப்போகுது… அதுக்கு முன்னாடி இந்த விஜய் ஹசாரே ட்ராபி ஒரு மெகா ட்ரெய்லர். 🎥

“இனிமே தான் ஆட்டமே ஆரம்பம்…
வெயிட் பண்ணி பாருங்க!” 🍿✨

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.