டிரம்ப்–எக்ஸான்–வெனிசுலா முக்கோண அரசியல்

வெனிசுலா கேட் திறக்குமா

🛢️ “வெனிசுலா கேட் ஓபன் ஆகுமா?” 🔓

டிரம்ப் முன்னாடி எக்ஸான் சிஇஓ போட்ட ஸ்கெட்ச்! ✍️
ஆயில் பாலிடிக்ஸ் அலசல்! 🇺🇸🇻🇪💼

“வணக்கம் மச்சிஸ்!” 👋

அமெரிக்காவுல ஒரு பக்கம் அரசியல் அனல் பறக்குதுன்னா, இன்னொரு பக்கம் பிசினஸ் டீலிங் சத்தமில்லாம நடக்குது. 🤫 அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆயில் மற்றும் கேஸ் துறையின் ஜாம்பவான்களைக் கூப்பிட்டு ஒரு மீட்டிங் போட்டாரு. 🤝

அதுல எக்ஸான் மொபில்  சேர்மன் டாரன் வூட்ஸ் வெனிசுலாவைப் பத்திப் பேசின பேச்சு இருக்கே… சும்மா “நச்”னு இருந்துச்சு! 👌

விஷயம் சிம்பிள்: வெனிசுலாவுல எண்ணெய் இருக்கு, ஆனா அங்க போய் பிசினஸ் பண்ண முடியுமா? 🤔

வாங்க, வூட்ஸ் சொன்ன பாயிண்டுகளை சீன் பை சீனா பார்ப்போம்! 👇

🌍 “எங்களுக்குத் தேவை சரக்கு !” ⛏️

டாரன் வூட்ஸ் ஓப்பனா பேசினாரு. 🗣️ “சார், நாங்க எண்ணெய் பிசினஸ்ல இருக்கோம். உலகத்துக்கு எண்ணெய் தேவை ரொம்ப வருஷத்துக்கு இருக்கும்”.

  • 🎯 பெரிய சவால்: “எங்களுக்கு இருக்கிற பெரிய சவாலே வளங்களைக் (Resources) கண்டுபிடிக்கிறது தான்.”
  • 🇻🇪 வெனிசுலா மேட்டர்: “ஆனா வெனிசுலாவுல அந்தப் பிரச்சனை இல்ல. அங்க வளங்கள் கொட்டிக் கிடக்கு. அதைத் தோண்டி எடுக்குறது தான் சேலஞ்ச்”னு சொல்லிட்டாரு.
🎥 “எனக்கு இடம் முக்கியம் இல்ல… 🗺️
அந்த இடத்துல இருக்கிற தங்கம் (எண்ணெய்) 🛢️
தான் முக்கியம்!” 🔥😎

🤝 வின்-வின்-வின் ஃபார்முலா 📈

பிசினஸ் பண்ணனும்னா சும்மா லாபம் மட்டும் போதாது. வூட்ஸ் ஒரு தத்துவத்தைச் சொல்றாரு. “நாங்க நீண்ட காலத் திட்டத்தோட தான் வருவோம். இது ஒரு ‘வின்-வின்-வின்’ டீலா இருக்கணும்”. 🌟

  • 🏢 கம்பெனிக்கு லாபம் வேணும்.
  • 🏛️ அரசாங்கத்துக்கு வருமானம் வேணும்.
  • 👨‍👩‍👧‍👦 அங்க இருக்கிற மக்களுக்கு நல்லது நடக்கணும்.
🎥

“பிசினஸ்ல செண்டிமெண்ட் இருக்கக் கூடாது…
ஆனா ஸ்ட்ராட்டஜி இருக்கணும்! 🧠
எல்லாருக்கும் லாபம் வந்தா தான் ஆட்டம் நிலைக்கும்!” 😎♟️

🔙ஃப்ளாஷ்பேக் – 1940s 🎞️

“ஏற்கனவே ரெண்டு முறை அடி வாங்கியிருக்கோம்!” 🤕

இங்கதான் ஒரு ட்விஸ்ட். எக்ஸான் மொபில் புதுசா வெனிசுலாவுக்குப் போகல. 1940-ல இருந்தே அங்க இருந்தாங்களாம். 🕰️

“எங்க சொத்துக்களை ரெண்டு முறை அவங்க பறிமுதல் பண்ணிட்டாங்க” 🔒

– னு சோகமா சொல்றாரு வூட்ஸ். அதனால, மூணாவது முறையா உள்ள போறதுக்கு முன்னாடி, நிறைய விஷயங்கள் மாறணும்னு கண்டிஷன் போடுறாரு. 📝

🎥

“நான் ஒரு தடவ ஏமாந்தா…
நூறு தடவ யோசிப்பேன்! 🤔
இனிமே ஏமாற மாட்டேன்!” 🛑✋

🚫”இப்போதைக்கு நோ என்ட்ரி!” 🚧

தற்போதைய நிலவரப்படி, வெனிசுலா “முதலீடு செய்யத் தகுதியற்றது” அப்படின்னு பட்டவர்த்தனமா சொல்லிட்டாரு. ❌

சட்டம் மாறணும், வர்த்தகப் பாதுகாப்பு வேணும், ஹைட்ரோகார்பன் சட்டங்களை மாத்தணும். அப்பதான் நாங்க வருவோம். 📜🔐

🚀  ஷார்ட் டர்ம் பிளான் 📋

எல்லாம் சரி ஆனா இப்போ என்ன செய்யப் போறோம்? 🤔 “கிட்டத்தட்ட 20 வருஷமா நாங்க அங்க இல்ல. முதல்ல ஒரு டெக்னிக்கல் டீமை அனுப்பி என்ன நிலவரம்னு பார்க்கணும்”. 🕵️‍♂️

🛡️ கண்டிஷன்:

“வெனிசுலா அரசு அழைப்பு விடுத்து, பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுத்தா, டீமை அனுப்ப ரெடினு சொல்லிட்டாரு.”

எண்ணெயைச் சுத்திகரிச்சு, மார்க்கெட்டுக்குக் கொண்டு வந்து, வெனிசுலா பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த எங்களால முடியும்னு வாக்குறுதி கொடுக்கிறாரு. 📈💰

“சிஸ்டம் சரியில்ல… 📉
அதைச் சரி பண்ணத் தான் நான் வரேன்! 😎
(ஆனா செக்யூரிட்டி முக்கியம்!) 👮‍♂️

📜 எண்ணெய் அரசியல் 🛢️

“பூமிக்கு அடியில் கறுப்புத் தங்கம், ⚫
அதை எடுப்பதில் இவர்களுக்குப் பெரும்ங்கம்! 💪
இரண்டு முறை இழந்தோம் சொத்துக்களை,
மீண்டும் நுழைய தேடுகிறோம் வித்துக்களை! 🌱

சட்டம் மாறினால் சம்மதம் சொல்வோம், ✅
பாதுகாப்பு தந்தால் படையாய் வெல்வோம்! 🚀
டிரம்ப் போடும் கணக்கு, 🇺🇸
வெனிசுலாவில் ஏறுமா விளக்கு?” 🇻🇪💡

🏁 Business is War! ⚖️

டிரம்ப் ஒரு பக்கம், எக்ஸான் மொபில் மறுபக்கம். வெனிசுலா அதிபர் என்ன செய்யப் போறாரு? ஆயில் பாலிடிக்ஸ்ல அடுத்து என்ன நடக்கும்? 🤯

“பிசினஸ் இஸ் வார்  மச்சிஸ்…
பொறுத்திருந்து பார்ப்போம்!” ⚔️

“அமெரிக்கா – வெனிசுலா டீலிங்…
லோடிங்! ⏳🔄”

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.