பொதுப் பிரிவினருக்குப் பாகுபாடா?

UGC Regulations 2026

⚖️  உச்சநீதிமன்றத்தில் வெடித்த UGC விவகாரம்! 📜🔥

🏛️ களம்: உச்சநீதிமன்றம்.

📜 வழக்கு: UGC விதிமுறைகள் 2026-க்கு எதிர்ப்பு.

👨‍⚖️ வாதி: ராகுல் திவான் மற்றும் வினீத் ஜிண்டால் தரப்பு.

🎯 மையக்கரு: “சாதிப் பாகுபாடு” என்பதன் வரையறை.

பல்கலைக்கழக மானியக் குழு  கொண்டு வந்திருக்கும் 2026-ம் ஆண்டிற்கான புதிய விதிமுறைகள், அரசியல் சாசனத்தையே மீறுவதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் ஒரு புயல் கிளம்பியுள்ளது. “எல்லாருக்கும் சமம்னு சொல்லிட்டு, பொதுப் பிரிவினரை  மட்டும் ஓரங்கட்டுவது என்ன நியாயம்?” என்ற கேள்வி தான் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

🏛️ “அவசரம் மை லார்ட்!”

வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் எழுந்து, இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் முறையிட்டார்.

🗣️ வழக்கறிஞர் வாதம்: “மை லார்ட்… இந்த விதிமுறைகளில் சில ஆபத்தான பிரிவுகள் உள்ளன. இவை பொதுப் பிரிவினருக்கு எதிரான பாகுபாட்டைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. இதை உடனே விசாரிக்க வேண்டும்!”.

👁️ நீதிபதியின் நச்சு பதில்

தலைமை நீதிபதி சூர்யா காந்த், வழக்கறிஞரின் வாதத்தைக் கேட்டதும் சொன்ன பதில் சுருக்கமாகவும், ஆழமாகவும் இருந்தது.

நீதிபதி: “வெளியே என்ன நடக்கிறது என்று எங்களுக்கும் தெரியும்”.

மனுவில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று கிரீன் சிக்னல் காட்டினார்.

📜 என்னதான் பிரச்னை? (Regulation 3(c))

சர்ச்சைக்கு முக்கியக் காரணமே அந்த ‘விதிமுறை 3(c)’ தான். UGC விதிகளின்படி, “சாதி ரீதியான பாகுபாடு”  என்றால் என்ன?

🚫 “SC, ST மற்றும் OBC பிரிவினருக்கு எதிராக நடக்கும் பாகுபாடு மட்டுமே சாதிப் பாகுபாடாகும்” என்று அது வரையறுக்கிறது.

மனுதாரர்களின் கேள்வி: “அப்போ பொதுப் பிரிவினரை சாதி ரீதியாகத் துன்புறுத்தினால் அது பாகுபாடு இல்லையா?” வினீத் ஜிண்டால் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில், “சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதாக  இருக்க வேண்டும்” என்று போர்க்கொடி தூக்கியுள்ளார்.

🕯️ முன்கதை சுருக்கம்

இந்த விதிமுறைகள் திடீரென உருவானவை அல்ல. ரோஹித் வெமுலா மற்றும் பாயல் தத்வி ஆகிய மாணவர்களின் தற்கொலைக்குப் பிறகு, அவர்களின் அம்மாக்கள் (ராதிகா வெமுலா, அபேதா சலீம் தத்வி) நீதிமன்றத்தில் கதறி அழுததன் விளைவு இது.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் ஒரு வலுவான பாதுகாப்பு அமைப்பை உருவாக்கச் சொன்னது. ஆனால், இப்போது வந்திருக்கும் விதிமுறைகள் ஒரு சாராரை மட்டும் பாதுகாப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

✍️ நீதிமன்றக் கவிதை

நீதி தேவதையின் கண்கள் மூடியிருக்கலாம்,
ஆனால் சட்டம் ஒருக்கண்ணாய் இருக்கலாமா?
பாதிக்கப்பட்டவன் எவனாயினும் காப்பதே தர்மம்,
சாதி பார்த்து நீதி சொல்வது என்ன மர்மம்? ⚖️

தாயின் கண்ணீரில் உருவான சட்டம்,
தறிகெட்டுப் பாயுது இன்னொரு பக்கம்!
பொதுப் பிரிவா? இட ஒதுக்கீடா?
பாகுபாடு என்று வந்தால் எல்லோரும் மனிதர்கடா! 🏛️

🔥 “பாதிக்கப்பட்டவங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறது சரிதான்… ஆனா அதுக்காக இன்னொரு தரப்பை பாதுகாப்பே இல்லாம நிக்க வைக்கிறது எந்த ஊர் நியாயம்? உச்சநீதிமன்றம் என்ன சொல்லப்போகுது? வெயிட் அண்ட் சீ!” 👁️

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.