அமெரிக்க மிரட்டலுக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒருமித்த எதிர்ப்பு

Donald Trump Greenland issue

“ஐரோப்பாவை மிரட்ட முடியாது!” – ட்ரம்ப் வீசிய ‘வரி’ அஸ்திரம்… ஐரோப்பிய நாடுகளின் பதிலடி!

உலக அரசியல் எனும் சதுரங்க ஆட்டத்தில், இப்போது “செக் மேட்” வைக்கத் துடிப்பது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். ஆனால், எதிரே நிற்பது சாதாரண காய்கள் அல்ல, ஐரோப்பா எனும் கோட்டை!

“கிரீன்லாந்து எனக்கு வேணும்… தரலைனா நடக்குறதே வேற!” என்று ட்ரம்ப் ஒரு பக்கம் கர்ஜிக்க, “எங்களை மிரட்ட முடியாது மிஸ்டர் பிரசிடெண்ட்!” என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெட்ரிக்சன்  கெத்தாக பதிலடி கொடுத்திருக்கிறார். இது வெறும் நிலப் பிரச்சனை இல்லை… இது கௌரவப் பிரச்சனை!


ட்ரம்ப் – தி பிசினஸ் மேக்னட்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எப்போதுமே ஒரு “டீல் மேக்கர்”. அவருக்கு ஒரு பொருள் பிடிச்சு போச்சுன்னா, அதை எப்படியாவது வாங்கிடணும்னு நினைப்பாரு. இப்போ அவர் கண்ணுல பட்டிருக்கிறது “கிரீன்லாந்து” (Greenland).

ட்ரம்ப் பாணியில் ஒரு டயலாக்:

“கேட்டா கொடுங்க… இல்லனா தடுத்தா தடுங்க… ஆனா நான் வர்றத யாராலும் தடுக்க முடியாது!”

கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுக்கு வித்துடுங்கனு டென்மார்க்கை கேட்டாரு. அவங்க முடியாதுனு சொல்லவும், ட்ரம்ப் எடுத்த ஆயுதம் தான் “வரி” (Tariff). “என் பேச்சைக் கேட்கலனா, உங்க நாட்டுப் பொருட்கள் மேல 10% வரி போடுவேன். ஜூன் மாசத்துக்குள்ள 25% ஆக்குவேன்!” அப்படின்னு ஒரு மிரட்டல் விடுத்திருக்காரு.

இது டென்மார்க்கிற்கு மட்டும் இல்ல, அவங்களுக்கு சப்போர்ட் பண்ற பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்வீடன் உள்ளிட்ட 8 நாடுகளுக்கும் சேர்த்து விடுத்த சவால்!

📱 ட்ரூத் சோஷியல்  பஞ்ச்:

“கிரீன்லாந்து பாதுகாப்புக்கு அமெரிக்கா தான் முக்கியம். டென்மார்க் அதை செய்ய தவறிடுச்சு. இப்போ நேரம் வந்தாச்சு… முடிச்சே தீருவேன்!”

– சமூக வலைதளத்தில் ட்ரம்ப் அதிரடி

 ஐரோப்பாவின் இரும்புத்திரை

ட்ரம்ப் இப்படி ஒரு குண்டை தூக்கிப் போட, ஐரோப்பிய தலைவர்கள் சும்மா இருப்பாங்களா? டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெட்ரிக்சன் தலைமையில், 8 நாட்டு தலைவர்களும் ஒண்ணு கூடி ஒரு அறிக்கை விட்டாங்க.

அவங்க சொன்னது ஒரே வார்த்தை தான்:

“வியாபாரம் பேசலாம்… ஆனா இறையாண்மையை  விக்க முடியாது!”

டென்மார்க் பிரதமர் ஃபேஸ்புக்ல போட்ட பதிவு ஒரு சாட்டையடி: “நாங்க சண்டையை விரும்பல, ஆனா ஐரோப்பாவை யாராலும் பிளாக்மெயில் பண்ண முடியாது. எங்க கொள்கையில நாங்க உறுதியா இருக்கோம்.”

இங்கிலாந்து பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் , ட்ரம்ப் கூட நல்ல நட்புல இருந்தாலும், “இது முற்றிலும் தவறு”னு சொல்லிட்டாரு. “நட்பு வேற… நாட்டு நலன் வேற”னு நிரூபிச்சிட்டாரு.


❄️ The Soul of Greenland ❄️

பனிக்கட்டி தேசமிது பரம்பரை சொத்து,
விலைபேச நினைப்பவன் போடுவான் கணக்கு!
எங்கள் மண்… எங்கள் உரிமை…
வல்லரசு வந்தாலும் வளைந்து கொடோம் –
இது சுயமரியாதை காக்கும் பனிமலைச் செருக்கு!

“மிரட்டல்கள் வரலாம் மேகம் போல,
கலைந்து போகும் அது காற்றைப் போல!”

ஏன் இந்த கிரீன்லாந்து மோகம்?

எதுக்கு ட்ரம்ப் இந்த பனிப்பிரதேசத்து மேல இவ்ளோ குறியா இருக்காரு? அது சும்மா ஐஸ் கட்டி இல்ல, “ரிசோர்ஸ் பேங்க்” !

💎 பொக்கிஷம்: அங்க பூமிக்கு அடியில ஏகப்பட்ட கனிம வளங்கள் இருக்கு.

🎯 லொகேஷன்: அமெரிக்காவுக்கும் ஆர்க்டிக்கும் நடுவுல இருக்கிறதால, ராணுவ ரீதியா இது ரொம்ப முக்கியம். எதிரிகளோட ஏவுகணை வந்தா கண்டுபிடிக்கிறதுக்கு இது ஒரு “வாட்ச் டவர்” மாதிரி.

அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட்  சொல்றாரு:

“கிரீன்லாந்து அமெரிக்கா கூட இருந்தா தான் அதுக்கு பாதுகாப்பு. இது ஐரோப்பாவுக்கும் நல்லது, எங்களுக்கும் நல்லது”

ஆனா, நார்வே வெளியுறவுத்துறை அமைச்சரோ, அதற்கு நெத்தியடி பதில் கொடுத்திருக்காரு:

“மத்தவங்களோட இறையாண்மையை மதிக்கிறது தான் அமைதிக்கு வழி!”

🔥 டாவோஸில் நடக்கப்போகும் யுத்தம்?

சுவிட்சர்லாந்துல நடக்குற டாவோஸ்  மாநாட்டுல ட்ரம்ப் பேச போறாரு. அங்க தலைப்பு என்ன தெரியுமா? “சிக்கலான உலகத்துல எப்படி ஒத்துழைக்கிறது?”. ஆனா ட்ரம்ப் பண்றத பார்த்தா ஒத்துழைக்கிற மாதிரி தெரியல, ஒடுக்குற மாதிரி இருக்கு!

🇨🇦 கனடா பிரதமர் மார்க் கார்னி: “நாங்க ஆர்க்டிக் பாதுகாப்பை பலப்படுத்துவோம், நேட்டோ  கூட சேர்ந்து வேலை செய்வோம்.”

📊 மக்கள் மனநிலை :

  • 📢 போராட்டம்: கிரீன்லாந்து தலைநகர் நூக் மற்றும் டென்மார்க் நகரங்கள்ல மக்கள் “எங்களை யாரும் வாங்க முடியாது”னு கோஷம் போடுறாங்க.
  • கருத்துக்கணிப்பு: 85% கிரீன்லாந்து மக்கள் அமெரிக்கா கூட சேர விரும்பல.
  • 📉 அமெரிக்க நிலவரம்: அமெரிக்காவுலேயே வெறும் 17% மக்கள் தான் ட்ரம்போட இந்த திட்டத்தை ஆதரிக்கிறாங்க.

பிப்ரவரி 1-ம் தேதி ட்ரம்ப் சொன்ன அந்த 10% வரி அமலுக்கு வருமா? இல்ல ஐரோப்பிய தலைவர்களின் ஒற்றுமை ட்ரம்பை யோசிக்க வைக்குமா?

🎬 “பாகுபலி” படத்துல சொல்ற மாதிரி…

“எதிரி எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும்,
நியாயம் நம்ம பக்கம் இருந்தா…
ஜெயிக்கிறது நாம தான்!” ⚔️

ஐரோப்பா இப்போ அந்த மனநிலையில தான் இருக்கு. டாவோஸ் மாநாட்டுல என்ன நடக்குதுனு பொறுத்திருந்து பார்ப்போம். இந்த அரசியல் ஆட்டம் இப்போ தான் சூடு பிடிச்சிருக்கு!

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.