குகேஷ் அவுட்… ஆனா ஆனந்த் இன்!

😲 “குகேஷ் அவுட்… ஆனா ‘தலைவன்’ இன்!”

கொல்கத்தா செஸ் களத்தில் வெடித்த புது ட்விஸ்ட்! 🇮🇳🔥

“வணக்கம் மச்சிஸ்!” 👋

வாழ்க்கை ஒரு செஸ் விளையாட்டு மாதிரிதான். நாம ஒன்னு நினைச்சா, அங்க வேற ஒன்னு நடக்கும். “ராஜா வருவாரு… ராணி வருவாங்க”னு வெயிட் பண்ணிட்டு இருந்தா, திடீர்னு போர்டுல இருந்த காய்களையே மாத்திப் போட்டுட்டாங்க பாஸ்! 🔄

கொல்கத்தாவுல ஜனவரி 7 முதல் 11 வரை நடக்கப்போற டாடா ஸ்டீல் செஸ் இந்தியா 2026 போட்டிக்கு செஸ் ரசிகர்கள் எல்லாரும் “ஆவலோட” காத்துக்கிட்டு இருந்தாங்க. குறிப்பா, நம்ம உலக சாம்பியன் டி. குகேஷ் ஆட்டத்தைப் பார்க்க ஒரு கூட்டமே ரெடியா இருந்துச்சு. ♟️👀

🥤 ஆனா, இப்ப வந்திருக்க நியூஸ், செஸ் ரசிகர்களுக்கு ஒரு “ஜிகர்தண்டா” குடிச்ச மாதிரி கூலிங்காவும், அதே சமயம் ஒரு “ஷாக்”காவும் இருக்கு.

🚫 குகேஷின் திடீர் விலகல்!

எல்லாரும் “குகேஷ்… குகேஷ்…”னு கோஷம் போட ரெடியா இருந்தப்ப, ஏற்பாட்டாளர்கள் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க. 💣

📢 அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

“தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வருஷம் குகேஷ் போட்டியில கலந்துக்க மாட்டாரு.” 😔

இது நம்ம ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான். உலக சாம்பியனான பிறகு, சொந்த மண்ல அவர் ஆடுறத பார்க்க முடியாம போச்சேங்கிற வருத்தம் எல்லாருக்கும் இருக்கு. 💔

🎥 

“என்னங்கடா நடக்குது இங்க? 😭
எப்போ வருவாருனு எதிர்பார்த்தா…
வரமாட்டாருனு சொல்லிட்டீங்களே!
மனசு வலிக்குதுடா!” 💔🤕

🎶

“போகாதே… போகாதே…
நீ இருந்தால் நான் இருப்பேன்! 🎼
நீ போகும் பாதையில்…
என் கண்கள் வாடுமே!” 😢

⚡குட்டிப் புலி நிஹால் சரின் என்ட்ரி!

“சரி, குகேஷ் போனா என்ன? அந்த இடத்த நிரப்ப யாரு வருவா?” னு கேட்டா, அங்க வந்து நிக்கிறாரு நம்ம நிஹால் சரின்.

🏎️ ஸ்பீட் மாஸ்டர்:

நிஹால் ஒன்னும் சாதாரண ஆளு இல்ல. இவரு ஒரு “ஸ்பீட் மாஸ்டர்” . ரேபிட் அண்ட் பிளிட்ஸ் ஆட்டத்துல இவரு காயை நகத்துற வேகத்தைப் பார்த்தா, நமக்கே கண்ணு ஆடும். 👀⚡

✅ குகேஷ் இடத்துக்கு இவரு சரியான மாற்று வீரர் தான்.

🎥“எவன் வந்தா எனக்கென்ன…

நான் என் வேலைய பாத்துட்டு போயிட்டே இருப்பேன்!” 😎🔥

(இதுதான் நிஹால் சரின் ஆட்டிட்யூட்! ♟️)

🦁தி ரியல் “மாஸ்” – விஸ்வநாதன் ஆனந்த் ரீ-என்ட்ரி! 🔥

இங்கதான் பாஸ் ஒரு பெரிய “ட்விஸ்ட்” இருக்கு! 🌪️

கடந்த சில வருஷமா டாடா ஸ்டீல் போட்டியில சும்மா “அம்பாசிடரா” வந்து கைய காட்டிட்டு போன நம்ம விஸ்வநாதன் ஆனந்த், இந்த முறை “பிளேயரா” களமிறங்குறாரு! 👑

  • 🏆 ஐந்து முறை உலக சாம்பியன்
  • 🇮🇳 இந்திய செஸ்ஸின் பிதாமகன்
  • 🐅 நம்ம “விஷி” ஆனந்த் மீண்டும் காய்களை நகர்த்தப் போறாரு!

சிங்கத்தோட ஆட்டத்தைப் பார்க்க காட்டுல இருக்க விலங்குகள் எல்லாம் எப்படி நடுங்கி நிக்குமோ, அப்படி எதிரணிகள் இப்போ நடுங்க ஆரம்பிச்சுட்டாங்க. 😨

🎥“இன்னும் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
நான் வந்துட்டேன்னு சொல்லு…
திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!” 🔥🕶️
🎶“நெருப்புடா… நெருங்குடா… 🔥
பாப்போம்… நெருங்குடா…
பயமா… விலகுடா!” 🎵🏃‍♂️

ஆனந்த் மீண்டும் ஆடுறது, இளம் வீரர்களுக்கு ஒரு பெரிய சவால் மற்றும் பாடம்! 📚♟️

⚔️இந்தியப் படை vs உலகப் படை!

🇮🇳 ஆனந்த் படை :

  • 🤫 ஆர். பிரக்ஞானந்தா: இவரைப் பத்தி சொல்லவே வேணாம். சைலன்ட் கில்லர்.
  • 🦁 அர்ஜுன் எரிகைசி: இப்போ ஃபார்ம்ல இருக்கிற வெறித்தனமான பிளேயர்.
  • 😎 விதித் குஜராத்தி: ஸ்டைலிஷ் அண்ட் ஸ்மார்ட்.
  • 🧘‍♂️ அரவிந்த் சிதம்பரம்: அமைதியான ஆட்டக்காரர்.
🌍 உலகப் படை :

எதிரணியில யாரு இருக்கா? சும்மா சாதாரண ஆளுங்க இல்ல.

  • 🇺🇸 வெஸ்லி சோ: அமெரிக்காவின் அசுரன்.
  • 🇨🇳 வெய் யி: சீனாவின் டிராகன்.
  • 🎭 ஹான்ஸ் நீமன்: சர்ச்சைகளின் நாயகன். (இவரு இருக்காருன்னாலே அங்க பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது! 🔥)
🎥“ஆரம்பிக்கலாங்களா?” 😎🔥

👸சிங்கப்பெண்கள்!

ஆண்கள் பிரிவுல மட்டும் இல்ல, பெண்கள் பிரிவுலயும் அனல் பறக்கப் போகுது. உலகக் கோப்பை வின்னர் திவ்யா தேஷ்முக் மேல தான் எல்லார் கண்ணும் இருக்கு.

  • 🔸 ஆர். வைஷாலி
  • 🔸 டி. ஹாரிகா
  • 🔸 வந்திகா அகர்வால்

🆚 ரஷ்யாவின் அலெக்ஸாண்ட்ரா கோர்யாச்சினா vs நம்ம ஊரு பொண்ணுங்க. இது ஒரு “இந்தியா – பாகிஸ்தான்” கிரிக்கெட் மேட்ச் மாதிரி பரபரப்பா இருக்கும்! 🏏⚡

📜“ராஜா விலகினாலும் மந்திரிகள் உண்டு,
போர்க்களம் காண ஒரு சிங்கம் உண்டு! 🦁

குகேஷ் இல்லாதது சிறு சோகம்தான்,
ஆனால் ஆனந்த் வருகை பெரும் வேகம்தான்! 🚀
கருப்பு வெள்ளை கட்டங்களில் யுத்தம்,
இது மூளைகள் மோதும் மாபெரும் சத்தம்!” ♟️🇮🇳

🏁 கொல்கத்தா அதிரப்போகுது!

குகேஷ் இல்லைங்கறது ஒரு குறைதான். ஆனா அதை ஈடுகட்ட “தல” ஆனந்த் வந்திருக்காரு. கூடவே நிஹால் சரின் மாதிரி இளம் ரத்தம் பாயுது.

🗓️ ஜனவரி 7 – 11 | 📍 கொல்கத்தா | 🧠 மூளைகளின் திருவிழா!

“ஆட்டம் க்ளோஸ்… ஆனா கணக்கு இப்பதான் ஆரம்பம்!”
ஆல் தி பெஸ்ட் டீம் இந்தியா! 🇮🇳✨

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.