🎬 டாட்டா ஸ்டீல் செஸ் களத்தில் ஒரு அதிர்ச்சித் திருப்பம்! ♟️🔥
📍 களம்: விஜ்க் ஆன் ஜீ (Wijk aan Zee), நெதர்லாந்து.
👑 ஹீரோ/வில்லன்: மத்தியாஸ் ப்ளூபாம் (Matthias Bluebaum).
🤕 பாதிக்கப்பட்டவர்: உலக சாம்பியன் குகேஷ் டி (Gukesh D).
🔢 சுற்று: 9-வது ரவுண்டு.
திங்கட்கிழமை… அது டோர்னமென்ட்டின் ஓய்வு நாள். ஜெர்மன் கிராண்ட்மாஸ்டர் மத்தியாஸ் ப்ளூபாம் அறைக்குள் அமர்ந்து தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தார். “இனிமே நான் ஒரு கேம் கூட ஜெயிக்க மாட்டேனோ?” என்ற விரக்தி அவருக்குள். ஏன்னா, தொடர்ந்து நான்கு போட்டிகள் ‘டிரா’ ஆகியிருந்தது. எட்டு கேம்ல ஒரே ஒரு வெற்றிதான். ஆனா, செவ்வாய்க்கிழமை விடிஞ்சதும் கதை தலைகீழா மாறுச்சு!.
எதிரில் உட்கார்ந்திருந்தது சாதாரண ஆள் இல்ல… உலக சாம்பியன் பட்டத்தை டிஃபெண்ட் பண்ணக் காத்திருக்கும் இந்தியாவின் இளம் புயல் குகேஷ்!
⚔️ வியூகம் மாறியது!
குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். ப்ளூபாம் வழக்கமா ஆடுற ‘பெட்ரோவ்’ தடுப்பு ஆட்டத்தைத் தவிர்க்க, குகேஷ் ‘பிஷப் ஓப்பனிங்’ முறையைக் கையிலெடுத்தார்.
📉 சறுக்கிய ராஜா!
ஆட்டம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலேயே குகேஷின் நிலைமை மோசமாச்சு . குகேஷ் எவ்வளவோ போராடினார், ஆனா இழந்த இடத்தைப் பிடிக்க முடியல.
“அவரோட பெரிய பிரச்சனையே என்ன தெரியுமா? நிலைமை கைமீறிப் போனாலும், எப்படியாவது ஜெயிச்சே ஆகணும்னு வெறிகொண்டு ஆடினார். அதுதான் எனக்குச் சாதகமா முடிஞ்சது!”.
கடைசியா, வெறும் 37-வது நகர்த்தலில் குகேஷ் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு ஆட்டத்தை முடித்துக்கொண்டார் . இது இந்தத் தொடரில் அவருக்கு மூன்றாவது தோல்வி!.
🎯 இந்தியப் புலிகளின் வேட்டைக்காரன்!
இந்த ப்ளூபாம் இருக்காரே… இவர் சாதாரண ஆள் இல்ல. இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர்களை வீழ்த்துறது இவருக்கு அல்வா சாப்பிடுற மாதிரி. ஏற்கனவே பிரக்ஞானந்தா மற்றும் அர்ஜுன் எரிகைசி ஆகியோரை வீழ்த்தித் தான் இவர் கேண்டிடேட்ஸ் தொடருக்கே தேர்வானார். இப்போ அந்த லிஸ்ட்ல நம்ம உலக சாம்பியன் குகேஷும் சேர்ந்துட்டாரு!.
✍️ சதுரங்கக் கவிதை
வெள்ளை நிறக் காய்கள் இருந்தும், வெற்றி என்னவோ ஜெர்மன் பக்கம்!
வெல்லத் துடித்த வேகம், குகேஷுக்குத் தந்தது சோகம்!
மூன்று புலிகளை வீழ்த்திய வீரன், ப்ளூபாம் இன்று ஆட்டத்தின் நாயகன்!
சறுக்குவது இயல்பு தான் ராஜா, மீண்டும் எழுந்து மகுடம் சூடு! ♟️
🔥 “சதுரங்கத்துல ராஜாவுக்குத் தான் மதிப்பு அதிகம்… ஆனா வியூகம் தப்பா இருந்தா, அந்த ராஜாவையும் சிப்பாய் வீழ்த்திடும்! குகேஷ் மீண்டு வருவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!” 🤔