போர் முடிவுக்கு வருமா? | ரஷ்யா–உக்ரைன் பேச்சுவார்த்தை

🎬 ரஷ்யா vs உக்ரைன்
“ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்!” 🌍🔥
(சமாதானமா? சவாலா?)

நான்கு வருஷம்… ரத்தம், கண்ணீர், இழப்பு. இப்போ அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் என்ட்ரி கொடுத்து, “தம்பிகளா சண்டையை நிறுத்துங்க… பஞ்சாயத்தை பண்ணுவோம்”னு ஒரு பிளானை இறக்கியிருக்காரு. 🇺🇸

📅 ஜனவரி 6 அப்டேட்: ஜெலன்ஸ்கி பிரான்ஸ் போய் ஐரோப்பிய தலைவர்களை மீட் பண்ண போறாரு. எல்லாம் சுபமா முடியுற ஸ்டேஜ்ல தான், சில “கடினமான முடிச்சுகள்” குறுக்க நிக்குது. 🔗

🚧 டான்பாஸ்: “மண்ணு வேணுமா? மனுஷன் வேணுமா?”

 புடின் ஸ்ட்ரிக்ட்:

“லுகான்ஸ்க் & டொனெட்ஸ்க் முழுக்க எனக்கு வேணும்.”
(லுகான்ஸ்க் காலி… டொனெட்ஸ்க் 75% கட்டுப்பாட்டில்).

“மிச்சம் இருக்குற இடத்தையும் கொடுத்துடுங்க… அது எங்க சட்டம்!” 😤

 ஜெலன்ஸ்கி செண்டிமெண்ட்:

“வெறுமனே இடத்தை விட்டுட்டு போக முடியாது பாஸ்… அங்க 3 லட்சம் மக்கள் இருக்காங்க.”

💡 ஐடியா: “நாங்க பின்வாங்குறோம்… ஆனா அது ‘Demilitarised Zone’ ஆகணும். சர்வதேச படைகள் கண்காணிக்கணும்.” 🕊️
😈 Russian Generals:

“தலைவரே, நாம தான் ஜெயிச்சுட்டு இருக்கோம்…
எதுக்கு பின்வாங்கணும்?”

– புடினை உசுப்பேற்றி விடுறாங்க! 💣

📊 ISW REPORT ANALYSIS:

> Russia capture rate: SLOW
> Full Donetsk capture estimate: AUGUST 2027
> Conclusion: Military victory takes too long.

🤔 கேள்விக்குறி?

“மண்ணை விட்டுக்கொடுப்பதா?
இல்லை மானத்தை விட்டுக்கொடுப்பதா?”

(பொறுத்திருந்து பார்ப்போம்… ஜனவரி 6 என்ன நடக்குதுன்னு!)

☢️ அணுமின் நிலையம்: “பவர் பாண்டி?”

(“யாரு கிட்ட இருக்க போகுது அந்த ‘பவர்’?”) 🔌

⚠️ ZAPORIZHZHIA STATUS:
> Controlled by: Russia (Since Mar 2022)
> Reactors: 6 (Cold Shutdown ❄️)
> Power Source: Ukraine Grid (To prevent explosion 💥)

அடுத்த பெரிய பஞ்சாயத்து – ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா. இதை எப்படி சரி பண்றது? அமெரிக்கா ஒரு ஐடியா சொல்லுது.

🤝 அமெரிக்கா & உக்ரைன் பிளான்: “ஒரு ஜாயின்ட் வென்ச்சர் ஆரம்பிக்கலாம். 50-50 பார்ட்னர்ஷிப். ஆனா கரண்ட் யாருக்குனு நாங்க முடிவு பண்ணுவோம்.”
🛑 ரஷ்யா பதில்: “அதெல்லாம் முடியாது தம்பி… இது எங்க கண்ட்ரோல்ல தான் இருக்கணும்.”
“சாவி என் இடுப்புல தான் இருக்கும்…
நீ வேணும்னா வண்டி ஓட்டிக்கோ!” 🗝️🏍️

🤝நம்பியார் கூட சேரலாம்…

(…ஆனா இவன் கூட சேர முடியாது!)

 டிரம்ப் (Ice Boy):
“புடின் நல்லவர்… உக்ரைனுக்கு கம்மி விலையில எரிசக்தி தருவார்.” (ஐஸ் வைக்கிறாரு 🧊)
 ஜெலன்ஸ்கி:
“வாய்ப்பே இல்ல ராஜா! அவங்க கூட வச்சுக்கிட்டே குழி பறிக்கிற கூட்டம்.” ⛏️
🚨 பிரேக்கிங் நியூஸ் (குற்றச்சாட்டு):

ரஷ்யா: “புடின் தங்கியிருக்குற இடத்துல உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சி பண்ணாங்க!” 🛸💣

உக்ரைன்: “பொய்! சுத்த பொய்! எங்களை அடிக்கிறதுக்கு நீங்களே போடுற டிராமா இது .” 🎭

இப்படி “நீ திருடன்”னு அவன் சொல்ல… “நீ தான் கொள்ளைக்காரன்”னு இவன் சொல்ல…
நம்பிக்கைங்குறது கானல் நீரா போச்சு! 🏜️

💰 கணக்கு வழக்கு!

(“உடைச்சது நீ… ஒட்ட வைக்க வேண்டியதும் நீ தான்!”)

போர்னால உக்ரைனுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு தெரியுமா?
💸 $800 பில்லியன்!

(இந்திய மதிப்புல எண்ணி பார்க்கவே தலை சுத்தும்! 😵)

⚖️ உக்ரைன் வாதம்: “ரஷ்யா தான் போர் இழப்பீடு  கொடுக்கணும்.”
🏦 பிளான்: ஐரோப்பாவுல முடக்கப்பட்டு இருக்குற ரஷ்யாவின் €210 பில்லியன் சொத்துக்களை எடுத்து செலவு பண்ணலாம்.
🚫 ரஷ்யா: “நோ வே !”

🛡️ பாதுகாப்பு: “வேலி தாண்டுவாரா?”

😨 உக்ரைன் பயம்:

“நாளைக்கு மறுபடியும் ரஷ்யா படை எடுத்து வந்தா என்ன பண்றது?” – அதுக்கு நேட்டோ  மாதிரி பாதுகாப்பு வேணும்.

🛑 ரஷ்யா ரெட் லைன்:

“உக்ரைன் மண்ணுல ஐரோப்பிய படைகள் காலடி வைக்கவே கூடாது!” 🚫🥾


🗳️ மக்கள் தீர்ப்பு: “கிளைமாக்ஸ் ட்விஸ்ட்!”

87%
“அமைதி வேணும்” 🕊️
85%
“இடம் கொடுக்க கூடாது” 🗺️

(அமைதியும் வேணும்… இடமும் போகக்கூடாதுனா எப்படி? 🤔)

 ஜெலன்ஸ்கி பிளான்:

“இது மக்களோட தேசம். தனி ஆளா முடிவு எடுக்க முடியாது.
1. 60 நாள் போர் நிறுத்தம் .
2. பொது வாக்கெடுப்பு . 🗳️
மக்கள் என்ன சொல்றாங்களோ அதுதான் முடிவு!”

புடின் & டிரம்ப் ரியாக்ஷன்:

“போர் நிறுத்தம்லாம் பண்ணா, நீங்க மறுபடியும் ஆயுதத்தை ரெடி பண்ணிடுவீங்க…
அதெல்லாம் வேலைக்கு ஆகாது!” 😒

வாக்கெடுப்பு இல்லாம கையெழுத்து போட்டா, அது செல்லாதுனு ஜெலன்ஸ்கி சொல்றாரு.
முடிவு மக்கள் கையில்!

🎬 சுபமா? சோகமா? 💔

ஆக மொத்தம், கதை இப்போ ஒரு பரபரப்பான கட்டத்துல நிக்குது. 🌪️

  • 🗺️ மண்: விட்டுக்கொடுத்தா மக்கள் கோபப்படுவாங்க. 😡
  • 🔫 போர்: விட்டுக்கொடுக்கலைனா சண்டை முடியாது. ♾️
  • ☢️ பவர்: அணுமின் நிலையம் கைவிட்டு போனா இருட்டு தான். 🔌
🌵 “முள்ளின் மேல் நடப்பது”

– போல தான் இந்த பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு.

📅 ஜனவரி 6: தீர்ப்பு நாள்!

(ஐரோப்பிய தலைவர்கள் மீட்டிங்… ஒரு தெளிவு கிடைக்குமா? 🤔)

🕊️
சமாதானம்?
🩸
ரத்தக் கறை?
 🎥“பொறுத்திருந்து பார்ப்போம்…

திரையில் மட்டுமல்ல,
தரையிலும் ட்விஸ்டுகள் காத்திருக்கு!” 🌍⚔️

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.