🇺🇸🤝🇨🇳 “கேட் திறந்தாச்சு…” 🔓
சிங்கம் களத்துல இறங்க போகுது! 🦁
“வணக்கம் மச்சிஸ்!” 👋
கொஞ்ச நாளா “நீ பெரியவனா? நான் பெரியவனா?”னு அமெரிக்காவும் சீனாவும் முட்டிக்கிட்டு இருந்தாங்க. 🥊 அதுல மாட்டிக்கிட்டு முழிச்சது நம்ம சிப் ராஜாவான Nvidia தான். 👑
🚫 பிளாஷ்பேக்: “உங்க சிப்பை சீனாவுக்கு விக்கக்கூடாது”னு அமெரிக்கா தடை போட்டிருந்தது.
ஆனா இப்போ, ஒரு பெரிய “ட்விஸ்ட்” நடந்திருக்கு! 🔄 அமெரிக்க வர்த்தகத் துறை , “சரி போனா போகுது… வித்துக்கோங்க”னு என்விடியாவுக்குப் பச்சைக் கொடி காட்டிடுச்சு! 🟢🚦
🔓H200 சிப் – இது சாதாரண ஆளு இல்ல! 🤖
என்விடியாவோட H200 பிராசஸர் இருக்கே, அது சும்மா “தெறி” ரகம். 🔥
இது சீனாவோட கையில் கிடைச்சா, அவங்க மிலிட்டரிக்கும், டெக்னாலஜிக்கும் பெரிய பவர் கிடைச்சிரும்னு தான் அமெரிக்கா பயந்து தடை போட்டிருந்தது. 🛡️
🇺🇸 ட்ரம்ப் கண்டிஷன்:
“விற்றுக்கொள்ளலாம்… ஆனா, அமெரிக்காவுல இந்த சிப் தாராளமா கிடைச்ச பிறகுதான் சீனாவுக்கு அனுப்பணும்!” 📦✈️
(அதாவது, America First பாலிசி ஸ்ட்ராங்கா இருக்கு! 💪)
நான் சொல்றப்பதான்…
நீ விக்கணும்!” 😎⚡
💰ட்ரம்ப் போட்ட “மாஸ்” கண்டிஷன்! 🤑
சும்மாலாம் விக்க முடியாது பாஸ். ட்ரம்ப் ஒரு பிசினஸ்மேன் மூளையோட யோசிச்சிருக்காரு. 🧠
“சீனாவுக்கு விக்கிற ஒவ்வொரு சிப்புக்கும்…
எனக்கு 25% கமிஷன் கட்டணும்!” 💸
அதுவும் சும்மா எல்லாருக்கும் இல்ல, “அப்ரூவ் செய்யப்பட்ட கஸ்டமர்களுக்கு” மட்டும்தான் விக்கணும். ✔️
🗣️ என்விடியா வாய்ஸ்: “எங்களுக்கு ஓகே பாஸ்! இதுனால அமெரிக்காவுல வேலைவாய்ப்பு கூடும்”னு ஜாலியா ஒத்துக்கிட்டாங்க. 👍
🛡️ பிளாக்வெல் இன்னும் ஜெயில்ல தான்! 🔒
சீனாவுக்கு H200 கிடைச்சாலும், என்விடியாவோட லேட்டஸ்ட் அசுரனான “பிளாக்வெல்” சிப்பை இன்னும் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க. 🙅♂️
⚠️ கண்டிஷன்:
H200 சிப்பை மிலிட்டரி யூஸூக்கு பயன்படுத்தக் கூடாதுனு சத்தியம் வாங்கிக்கிட்டு தான் கொடுக்குறாங்க. 🔫❌
🇨🇳 சீனா என்ன சொல்லுது? 🐉
சீனா தூதரக அதிகாரி லியு பெங்யு கொஞ்சம் காட்டமாத் தான் பதில் சொல்லிருக்காரு.
“வியாபாரத்துல அரசியலையும், ஆயுதத்தையும் கலக்காதீங்க பாஸ்! ✋
இது யாருக்கும் நல்லது இல்ல.”
(சீனா ஏற்கனவே “நம்ம ஊரு சிப்பை வாங்குங்க”னு சொன்னாலும், அவங்க ஊரு சரக்கு இன்னும் அமெரிக்கா லெவலுக்கு வரலையே! 🤷♂️)
🏁 டீல் முடிஞ்சாச்சு⚖️
என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் ரொம்ப நாளா இதுக்காகத் தான் லாபி பண்ணிட்டு இருந்தாரு. வெற்றி கிடைச்சிருக்கு. 🎉
🗣️ ஆஸ்டின் லியோன்ஸ் : “லாபம் கொஞ்சம் குறைஞ்சாலும் பரவாயில்ல, சீனா மார்க்கெட் கிடைச்சதே என்விடியாவுக்குப் பெரிய விஷயம் தான்.” 📈
🎥 “மணி … மணி… மணி! 💰
காசு இருந்தா தான் எல்லாமே! 🤑
வின்-வின் சிச்சுவேஷன் பாஸ்!” 🤝😎