🎬 நியூ இயர் பார்ட்டிக்கு ‘சங்கு’? 🐚
ஸ்விக்கி, ஸொமாட்டோ பாய்ஸ் காட்டிய ‘ரெட் சிக்னல்’! 🛵🚫
“ஹேப்பி நியூ இயர்” கொண்டாடலாம்னு பிரியாணி ஆர்டர் பண்ண போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்! இன்னைக்கு நைட்டு உங்க வீட்டு பெல் அடிக்குமான்னு சந்தேகம் தான். 🤔
🚨 1.5 லட்சம் பேர் ஸ்டிரைக்!
இன்னைக்கு (டிசம்பர் 31) இந்தியா முழுக்க டெலிவரி பார்ட்னர்ஸ் வேலை நிறுத்தத்துல இறங்க போறாங்க. அதுவும் கரெக்ட்டா நீங்க ஆர்டர் போடுற அந்த ‘பீக் ஹவர்ஸ்’ டைம்ல! 📉
🎶“காசு பணம் துட்டு மணி மணி…
கணக்கு பண்ணி பார்த்தா ஒன்னுமில்ல…
பெட்ரோல் விக்கிற விலையில, வண்டி ஓட்ட முடியல!” 💸🏍️
🔥 எதுக்குப்பா இந்த ஸ்ட்ரைக்?
- 💰 சம்பளம்: மாசம் குறைஞ்சது ரூ.40,000 கேரண்டி வேணும்.
- ⛽ ரேட்: ஒரு கிலோமீட்டருக்கு 20 ரூபாய் வேணும்.
- ⏱️ நோ 10 மினிட்ஸ்: “10 நிமிஷத்துல டெலிவரி”னு உயிர வாங்குற ரேஸ் வேண்டாம். 🛑
- 👩🦰 பெண்கள் பாதுகாப்பு: அவங்க வீட்டுல இருந்து 7 கி.மீ சுற்றளவுக்குள்ள மட்டும் வேலை கொடுங்க.
ஆனா அதை அனுபவிக்கிறவன் சொகுசா இருக்கான்!
எங்களுக்கும் ஒரு நியாயம் வேணும்ல?” 🔥
🏢 கம்பெனிகளின் நிலைமை:
“மாப்பு… வச்சிட்டான்டா ஆப்பு!” 😱
ஸ்விக்கி, ஸொமாட்டோ, ஜெப்டோ எல்லாம் இப்போ ஆடிப்போய் கிடக்கு. “நியூ இயர் அன்னைக்கு கல்லா கட்டலாம்னு பார்த்தா, இவங்க கடைய சாத்த சொல்றாங்களே”னு அதிர்ச்சி! 📉
🥺 வலி மிகுந்த வரிகள்:
“வெயிலிலும் மழையிலும் வண்டி ஓட்டி,
உங்கள் பசியை ஆற்றினோம்…
இன்று எங்கள் வயிற்றில் ஈரத் துணி,
நியாயம் கேட்க வீதியில் நின்றோம்!” 🌧️🛑
📢 கள நிலவரம்:
மெட்ரோ சிட்டிஸ் முதல் டயர்-2 சிட்டி வரைக்கும் ஸ்ட்ரைக். ஆர்டர் போட்டா “Delivery Partner Not Available” மெசேஜ் வரலாம்.
🔥“நாங்க பசியோட இருந்தாலும் பரவாயில்ல…
ஆனா எங்க உழைப்பை சுரண்டாதீங்க!
We are not just delivery boys… We are human beings!” 😠✊
😅 மக்களே உஷார்:
இன்னைக்கு நைட்டு ஆல்ட்டர்னேட்டிவ் ஏற்பாடு பண்ணிக்கோங்க. இல்லனா நம்ம வடிவேலு சொல்ற மாதிரி…
“மொத்தமா… சோலி முடிஞ்சுது!” 🤣
(வீட்ல ரசம் சோறு சாப்பிட வேண்டியது தான்! 🍚)
அவனே பசியில இருந்தா, நான் தோத்து போயிடுவேன்!”
(அவங்க போராட்டமும் நியாயம் தானே பாஸ்? ❤️)