🥚 முட்டையா? இல்ல டைமண்ட் கல்லா?

நாமக்கல் வரலாற்றில் ஒரு “மாஸ்” சம்பவம்! தங்கத்தை முந்துமா முட்டை?

😲 விலைவாசி “பீஸ்ட்” மோட்!

“அண்ணே, ஒரு ஆம்லெட் போடுங்க…”னு கடைக்காரர்கிட்ட கேட்டா, அவரு நம்மள பார்க்குற பார்வை இருக்கே… “சொத்து பத்திரம் எதனா கொண்டு வந்துருக்கியா தம்பி?”னு கேக்குற மாதிரி இருக்கு! அந்த அளவுக்கு கிர்ருன்னு ஏறியிருக்கு முட்டை விலை.

நேத்து வரைக்கும் 5 ரூபாய்க்கு வித்த முட்டை, இன்னைக்கு சில்லறை கடையில ரூ.7.50 வரைக்கும் போயிடுச்சு. நாமக்கல் மண்டலத்துல கொள்முதல் விலையே ரூ.6.40 ஆனா, அது நம்ம கைக்கு வரும்போது “டாக்ஸ் இல்லாத தங்கம்” மாதிரி ஜொலிக்குது.

🎵 “எங்கேயோ பார்த்த மயக்கம்…
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்…”

*மைண்ட் வாய்ஸ்: குறைந்த விலையில் முட்டையை பார்த்த ஞாபகம் லேசா வருதே!*

🏆 55 வருஷ ரெக்கார்டு க்ளோஸ்!

சும்மா சொல்லக்கூடாது பாஸ், நாமக்கல் கோழிப்பண்ணை வரலாறுல கடந்த 55 வருஷமா நடக்காத ஒரு அதிசயம் இப்போ நடந்திருக்கு. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) வரலாற்றிலேயே இதுதான் “ஆல் டைம் ஹை” (All Time High).

நாமக்கல்னா சும்மாவா? இது “முட்டை நகரம்” . இங்க மட்டும் 1000-க்கும் மேற்பட்ட பண்ணைகள் இருக்கு. தினசரி உற்பத்தி எவ்ளோ தெரியுமா?

🥚 ஒரு நாளைக்கு 6 கோடி முட்டைகள்!
(6,00,00,000 Eggs per day)

இதுல 40% முட்டைகள் கேரளாவுக்கு போகுது. “சேட்டா”க்கள் முட்டை இல்லாம இருக்க மாட்டாங்க. மீதி 30 லட்சம் முட்டைகள் கத்தார், மஸ்கட்னு வெளிநாட்டுக்கு ஃபிளைட் ஏறுது. மீதிதான் நம்ம தமிழ்நாட்டு சத்துணவுக்கும், லோக்கல் மார்க்கெட்டுக்கும் வருது. இப்போ சப்ளை கம்மி, டிமாண்ட் ஜாஸ்தி… அதான் மேட்டர்!

🔍 ஏன் இந்த திடீர் “பில்டப்”?

விலை ஏறுனதுக்கு சும்மா வாய்க்கு வந்த காரணத்தை சொல்லல. இதுக்குப் பின்னாடி ஒரு பெரிய “எகனாமிக்ஸ்”  இருக்கு. உற்பத்தியாளர்கள் சொல்ற காரணங்களைப் பார்த்தா நியாயமாத்தான் இருக்கு.

  • 🥶 டெல்லி குளிர் : வடமாநிலங்கள்ல குளிர் இப்ப “கொலநடுங்க” வைக்குது. உடம்பை சூடா வெச்சுக்க மக்கள் முட்டையை அவிச்சு தள்ளுறாங்க. காய்கறி விலை வேற அங்க அதிகம், சோ முட்டைதான் அவங்களுக்கு ஈஸி புரோட்டீன். அங்கிருந்து வர்ற டிமாண்ட் தான் இங்க விலையை ஏத்துது.
  • 🎂 கிறிஸ்துமஸ் கேக் : கிறிஸ்மஸ், நியூ இயர் வருதுல்ல? கேக் செய்ய முட்டை இல்லாம முடியுமா? பேக்கரி காரங்க லாரி லாரியா முட்டையை அள்ளிட்டு போறாங்க. இந்த சீசன்ல கேக் தேவை பல மடங்கு அதிகம்.
  • 🌽 தீவன விலை : இதுதான் விவசாயியோட பெரிய வலி. கோழிக்கு போடுற மக்காச்சோளம், சோயா புண்ணாக்கு விலை எல்லாம் ராக்கெட் வேகத்துல ஏறிடுச்சு. உற்பத்தி செலவே ஒரு முட்டைக்கு 5 ரூபாய்க்கு மேல ஆகுதாம்.

😭 பாவம்யா இந்த பேச்சுலர்ஸ்!

இந்த விலை உயர்வுல அதிகம் பாதிக்கப்படுறது யாருன்னு பார்த்தா, நம்ம பேச்சுலர்ஸும், ஜிம் பாய்ஸும் தான்.
“மச்சான், இன்னைக்கு நைட்டு சோறு வேணாம், ரெண்டு ஆஃப்-பாயில்  போட்டு படுத்துக்கலாம்”னு நினைக்குற காலமெல்லாம் மலையேறி போச்சு.

ஹோட்டல்ல சாப்பிட போனா, “முட்டை தோசை” ரேட்ட பாத்துட்டு, சத்தமில்லாம “சாதா தோசை” ஆர்டர் பண்ற நிலைமை வந்துருச்சு. கலக்கி விலை 30 ரூபாய்க்கு மேல போகுது.

🎵 பேச்சுலர்ஸ் சோகம் :

“சோதனைகள் மேல் சோதனை…
போதுமடா சாமி…”

👨‍🌾விவசாயி ஹேப்பி அண்ணாச்சி!

நமக்கு கஷ்டமா இருந்தாலும், நாணயத்துக்கு இன்னொரு பக்கம் இருக்கு. கடந்த சில வருஷமா நாமக்கல் பண்ணையாளர்கள் பெரிய நஷ்டத்தை சந்திச்சாங்க. கொரோனா டைம்ல எல்லாம் முட்டையை டம்ப் பண்ண வேண்டிய நிலைமை.

இப்போதான் அவங்களுக்கு தீவன செலவு போக, கையில நாலு காசு நிக்குது. “எங்களுக்கும் காலம் வரும்”னு அவங்க காத்திருந்த நாளு இது. சோ, அவங்க முகத்துல இருக்கற சிரிப்பு நியாயமானதுதான்.

🎵 : “சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு…” 

🔮 அடுத்து என்ன நடக்கும்?

“சரி பாஸ், இந்த விலை எப்ப குறையும்?”னு கேட்டீங்கன்னா, இப்போதைக்கு சான்ஸ் கம்மி.

ஜனவரி பாதியில பொங்கல் பண்டிகை முடியுற வரைக்கும் குளிர் இருக்கும். அதுவரைக்கும் வடமாநிலத்துல முட்டை தேவை குறையாது. அதுமட்டுமில்லாம சபரிமலை சீசன் முடியுறப்போ, விரதம் இருந்தவங்களும் சாப்பிட ஆரம்பிப்பாங்க. சோ, ஜனவரி மாசம் கடைசி வரைக்கும் விலை “ஏறுமுகமா” தான் இருக்கும்னு மார்க்கெட் நிபுணர்கள் சொல்றாங்க.

🎬 சுபம்

மொத்தத்துல, நாமக்கல் முட்டை இப்போ “விஐபி” ஆகிடுச்சு. விலை அதிகமானாலும், உடம்புக்கு சத்து முக்கியம் பாஸ். பீட்சா, பர்கருக்கு 500 ரூபாய் செலவு பண்றோம், விவசாயி கஷ்டப்பட்டு வளர்த்த முட்டைக்கு 7 ரூபாய் கொடுக்குறதுல தப்பில்லைன்னு மனசை தேத்திக்க வேண்டியதுதான்.

கடைசியா ஒரு பஞ்ச் டயலாக்:
“காசு போனாலும் பரவால்ல… நமக்கு புரோட்டீன் தான் முக்கியம் பிகிலு!” 🐓💪

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.