நாமக்கல் துயரம்: பள்ளத்தில் விழுந்த 4 வயது குழந்தை மரணம்

🎬 நாமக்கல் துயரம்: “சாக வரல… விளையாட வந்தேன்!”

எமன் ரூபத்தில் காத்திருந்த பள்ளம்! 😢🚧

“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்… தந்தை அன்பின் முன்னே!
ஆனா இங்க அரசாங்கத்தின் அலட்சியத்தின் முன்னே…
அந்த தெய்வமே கண்ணீர் விடுதே!” 🎶💔

புத்தாண்டு அன்னைக்கு எல்லாரும் “ஹேப்பி நியூ இயர்” கொண்டாடிட்டு இருந்தப்போ, நாமக்கல் மாவட்டம் சின்னமுதலைப்பட்டி தெருவுல மட்டும் மரண ஓலம் கேட்டுச்சு. 4 வயசு பிஞ்சு குழந்தை ரோகித், விளையாட போன இடத்துல சடலமா மீட்கப்பட்டான். இது விபத்தா? இல்ல நிர்வாகம் செஞ்ச கொலையா? னு ஊரே கொந்தளிச்சு போய் கிடக்கு.

🧸 விளையாட்டு வினையான சோகம்

நாமக்கல் வார்டு நம்பர் 4, கடக்கல் தெரு. மணிகண்டன் – ரதிப்பிரியா தம்பதியோட செல்ல மகன் ரோகித். புதன்கிழமை சாயங்காலம் தாத்தா வீரன் வீட்டு வாசல்ல ஜாலியா விளையாடிட்டு இருந்தான்.

“உன் சிரிப்பில் என் கவலை மறந்தேன்…
இன்று உன் நினைவில் நான் கரைந்தேன்!” 😭

திடீர்னு குழந்தைய காணோம். பெத்தவங்க பதறி அடிச்சு தேடுறாங்க. அரை மணி நேரம் கழிச்சு பார்த்தா, பாதாள சாக்கடைக்காக தோண்டி வச்சிருந்த பள்ளத்துல, தேங்கி நின்ன சாக்கடை தண்ணில அந்த பிஞ்சு உடல் மிதக்குது.


😭 குழந்தையோட அம்மா ரதிப்பிரியாவின் கதறல்:

“நான் 3 மணி வரைக்கும் அங்க தான் சார் இருந்தேன்… என் புள்ள அங்க தான் விளையாடிட்டு இருந்தான்.

மண்ணுக்குள்ள சொருவி கிடந்தான் சார்… அவனை தூக்க முடியாம தூக்கிட்டு ஓடுனோம்!”

😡 நிர்வாகத்தின் அலட்சியமா? ஆணவமா?

அந்தக் குழி சும்மா இல்ல, சுமார் 5 அடி முதல் 7 அடி ஆழம். பாதாள சாக்கடைக்காக தோண்டினவங்க, “இன்னைக்கு நியூ இயர் லீவு”னு வேலையை பாதியில விட்டுட்டு போயிட்டாங்க. சரி, போனது தான் போனீங்க… அந்த பள்ளத்தை சுத்தி ஒரு தடுப்பு வேலியாச்சும் (Barricade) வைக்க கூடாதா? 🚧 

🎬“மன்னிப்பு… தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை!” ✋


ஆமா, இப்படி ஒரு அலட்சியத்த காட்டிட்டு, கடைசில “தெரியாம நடந்துருச்சு”னு சொல்றத எப்படி ஏத்துக்க முடியும்?

அதுல கொடுமை என்னன்னா, குழந்தை செத்ததுக்கு அப்புறம் அதிகாரிகள் வந்து, “பெத்தவங்க கவனக்குறைவு தான் காரணம்” னு பலி போட்டிருக்காங்க.

“குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்… ஆனா இங்க அதிகாரிங்க நெஞ்சு கல்லா இருக்கு!” 🗿

💸 ரூ.20 லட்சம்: உயிருக்கு விலையா?

சம்பவம் நடந்த வேகத்துல, அதிகாரிகள் அந்த பள்ளத்தை மண்ண போட்டு மூடிட்டாங்க. தடயத்தை அழிக்கவா? 🤔 அப்புறம் மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் வந்து 20 லட்சம் ரூபாய் செக் கொடுக்குறாரு.

📜 

“பணம் கொடுத்தால் போன உயிர் திரும்புமா?
தாயின் கதறல் உங்கள் காதில் கேட்குமா? 👂
குழி தோண்டி புதைத்தது சாக்கடை குழாய் அல்ல,
ஒரு வம்சத்தின் எதிர்காலம்! 👶⚰️
இருபது லட்சம் உங்கள் பாவக் கணக்கை தீர்க்குமா?
இல்லை இதுதான் ஏழையின் உயிருக்கு விலையா?” 💔

🚩 தமிழக வெற்றிக் கழகத்தின்  கேள்வி:

அருண்ராஜ் கேட்குற கேள்வி நச்சுனு இருக்கு:

“கண் மஞ்சளா இருந்தா அது காமாலை அறிகுறி. அதே மாதிரி தான் இந்த தொடர் விபத்துகள் நிர்வாக சீர்கேட்டின் அறிகுறி!”

திருச்சியில ஸ்கூல் சுவர்… திருவள்ளூர்ல மாணவன்… இப்போ நாமக்கல்…
இது எல்லாம் தனித்தனி விபத்து இல்ல, இது ஒரு “சிஸ்டம் ஃபெயிலியர்”! 🚨⚠️

🔥 அரசியல் அனல்: “என்னாச்சு நம்ம நாட்டுக்கு?”

🗣️ எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி :

“ட்விட்டர்ல கொதிச்சுருக்காரு: ‘பச்சிலம் குழந்தையை இழந்து வாடும் பெற்றோருக்கு இந்த அரசு என்ன பதில் சொல்ல போகுது? சாரி கேட்க போறாரா முதலமைச்சர்?'”


ஒரு கான்ட்ராக்ட் விடுறதுல இருக்கற ஆர்வம், அந்த வேலையை உருப்படியா முடிக்கிறதுல இல்ல. “கமிஷன்” வாங்குறதுல காட்டுற வேகத்தை, “சேஃப்டி” பாக்குறதுல காட்டலையே பாஸ்! 💸

“காசு பணத்துக்காக அலையுற கூட்டம்…
இங்கே உயிரை விடுவது ஏழை பாட்டாளி வர்க்கம்!” 🏗️🛑

🎬 “எங்களுக்கு அடிப்படை வசதி கூட வேணாம்…

ஆனா உசுரோட இருக்கறதுக்காவது கேரண்டி கொடுங்க!” 🙏

இப்போ அந்த தெருவே சோகத்துல முழ்கி இருக்கு. ரோகித் இனி வரப்போறதில்ல. ஆனா இனியாவது திருந்துங்க அதிகாரிகளே.

  • 🚧 பள்ளம் தோண்டினா தடுப்பு வைங்க.
  • ⏳ வேலை முடிஞ்சா உடனே மூடுங்க.
“எல்லாத்துக்கும் மேல, மனுஷன் உசுரு முக்கியம் பிகிலு!” ⚽❤️

இழப்பீடு கொடுத்து வாயை அடைக்கலாம்… ஆனா மனசாட்சி உங்களை சும்மா விடாது.

🕯️ இறுதி கவிதை:

“விளையாட்டு பொம்மை கையில் இருக்க,
விதி எனும் பள்ளம் உயிரை குடிக்க…
அன்னை மடியில் தூங்க வேண்டியவன்,
மண்ணை தின்று மடிந்தானே! 👶⚰️
இது விபத்தல்ல… படுகொலை!
நீதி எங்கே? விடை தேடும் கண்கள்!” 😭⚖️

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.