🎬 மீன ராசி 2026
“உலக லெவல் ஃபேமஸ்!”
– கதை ஆரம்பம்-
“வாழ்க்கை ஒரு வட்டம்… ஜெயிச்சவன் தோற்பான், தோத்தவன் ஜெயிப்பான்!”
மீன ராசி அன்பர்களே! 2026-ம் ஆண்டு உங்களுக்கு ஒரு சாதாரண வருஷம் இல்ல… இது ஒரு “ட்ரெண்டிங் வருடம்”!
உங்க வாழ்க்கையில இதுவரைக்கும் பார்க்காத திருப்பங்களை இந்த வருஷம் பார்க்கப் போறீங்க. ஒரு பக்கம் சனி பகவான் “வச்சு செய்ய” காத்துக்கிட்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் குரு பகவான் “நான் பார்த்துக்கிறேன் டா!”னு உங்களுக்கு 10x (பத்து மடங்கு) வளர்ச்சியைக் கொடுக்கப் போறாரு.
வாங்க, முதல் பாதியில் என்ன நடக்கும்னு பார்ப்போம்! 👇
🎥 ஜென்ம சனியின் ஆட்டம்
தற்போது சனி பகவான் உங்க ராசியிலேயே (முதல் வீட்டில்) ஜம்முனு உட்கார்ந்திருக்கார். இதுக்கு பேரு தான் “ஜென்ம சனி”. இவர் வக்ர நிவர்த்தி அடைந்து ஸ்ட்ராங்கா இருக்கார்.
கையில கிடைச்ச லட்டு, வாய்க்கு எட்டாத கதைதான். ஒரு வேலை கன்ஃபார்ம் ஆகி ஆர்டர் காப்பி வாங்குற நேரத்துல, “அந்த கம்பெனியே மூடிட்டாங்கப்பா”னு சொல்லுவாங்க. பிசினஸ் டீல் ஓகே ஆகி, கையெழுத்து போடுற நேரத்துல சின்ன காரணத்துக்காக கேன்சல் ஆகும். இதைத்தான் “கொடுத்துக் கெடுப்பார்”னு சொல்வாங்க.
🏥 ஆரோக்கியம்
“எந்திரிக்கவே இவ்வளவு கஷ்டமா இருக்கே… கை வலிக்குது, கால் வலிக்குது, கேஸ் ட்ரபிள் வேற… ஆஹா இப்பவே கண்ணை கட்டுதே!”
சனி பகவான் உங்க உடம்புல இருக்குற காற்று உறுப்பை (Air Element) டிஸ்டர்ப் பண்ணுவாரு. இதனால “வாத தோஷம்” ஏற்பட வாய்ப்பு இருக்கு. வாயு தொல்லை, மலச்சிக்கல், கடும் சோம்பேறித்தனம் உங்களைப் பாடா படுத்தும். சின்ன சின்ன காயங்கள் ஏற்படலாம், வண்டி ஓட்டும்போது கவனம் மச்சி!
🌟 தி ட்விஸ்ட்
“என்ன பாஸ்… ஆரம்பமே இப்படியா?”னு சோகமாகாதீங்க. இங்க தான் சனி பகவான் ஒரு ட்விஸ்ட் வைக்கிறாரு. அவர் 3, 7, 10-ம் இடங்களைப் பாக்குறார்.
“நம்மள டம்மினு நினைச்சியா… இனிமே தான் கச்சேரியே இருக்கு!”
சனி பகவான் எவ்வளவுக்கு எவ்வளவு கஷ்டத்தைக் கொடுக்குறாரோ, அந்த அளவுக்கு உங்களை “உலகப் புகழ்” அடைய வைப்பார். சாதாரண ஆளா இருந்த நீங்க, இந்த வருஷம் நாலு பேருக்குத் தெரிஞ்ச விஐபி ஆவீங்க. சமூகம் உங்களை அண்ணாந்து பார்க்கும்!
🎬 ராகுவின் திரில்லர் மோட்
ஜூன் மாசம் வரைக்கும் 12-ம் வீட்டுல ராகு இருக்கார். இது கொஞ்சம் “சைக்கோ திரில்லர்” படம் மாதிரி இருக்கும்.
பின்னாடியே ஒரு பாம்பு படம் எடுத்து ஆடுவது போல, ஒரு இனம் புரியாத பயம் உங்களுக்குள்ள இருந்துகிட்டே இருக்கும். “யாரோ நம்மள நோட்டம் விடுறாங்களோ?”னு தோணும்.
முடிஞ்சு போன பழைய பஞ்சாயத்து, கோர்ட் கேஸ் எல்லாம் திரும்ப தூசி தட்டி எழுப்பப்படும்.
💡 டிப்ஸ்: எதுவா இருந்தாலும் “கட்டப்பஞ்சாயத்து” பண்ணி அதாவது பேசித் தீர்த்துடுங்க. கோர்ட்டுக்கு போனா இழுத்துரும்!
⚠️ முக்கியமான எச்சரிக்கை
சோஷியல் மீடியால கெத்து காட்டுறேன்னு போட்டோ, வீடியோ போடாதீங்க. உங்க ரகசியங்களை யார்கிட்டயும் சொல்லாதீங்க. ராகு உங்களை வேடிக்கை பார்க்குறார், உஷார்!
🍿 இடைவேளை
“அப்போ நல்லதே நடக்காதா?”னு நீங்க கேட்குறது புரியுது.
படம் இன்னும் முடியல பாஸ்! ஜூன் 02-க்கு அப்புறம் குரு பகவான் என்ட்ரி கொடுக்குறாரு. அவர் வந்து “உச்சம்” பெறப்போறாரு. உங்க வருமானம் 10 மடங்கு எகிறப் போகுது.
“இன்னும் பார்க்க வேண்டியது நிறைய இருக்கு பாஸ்!”
முதல் பாதியில சனி பகவானும், ராகுவும் கொஞ்சம் ஆட்டம் காட்டினாலும், இரண்டாம் பாதியில குரு பகவான் வந்து மொத்த ஆட்டத்தையும் மாத்தப் போறாரு.
🌟 ஹீரோ என்ட்ரி
📅 ஜூன் 02, 2026. தேதியை குறிச்சு வச்சுக்கோங்க! அதுவரைக்கும் 4-ம் வீட்டுல இருந்த குரு, இப்போ 5-ம் வீட்டுக்கு வராரு. அங்க அவர் சும்மா வரல, “உச்சம்” பெற்று வராரு.
🕶️ பாட்ஷா ரஜினி டயலாக்:
குரு பகவான் உச்சம் பெற்று, உங்க ராசியை (1-ம் இடம்), பாக்கிய ஸ்தானத்தை (9-ம் இடம்), லாப ஸ்தானத்தை (11-ம் இடம்) பார்க்குறாரு.
நீங்க இப்ப 10,000 சம்பாதிச்சா, அது 1 லட்சமா மாறும். உங்க வளர்ச்சி 10 மடங்கு (10x) இருக்கும்.
“எனக்கு அது வேணும், இது வேணும்”னு நீங்க கேட்கவே தேவையில்லை. வீடு, கார், பணம்னு எல்லாம் உங்களை தேடி வரும். நீங்க ராஜாவா வாழ்ற காலம் இது!
💰 தங்கம் & பொருளாதாரம்
இந்த வருஷம் மீன ராசிக்காரர்களுக்கு ஒரு “கோல்டன் டிப்ஸ்” இருக்கு.
“இனிமே அந்த தங்கம் தான் நம்ம டார்கெட்!”
குரு பகவான் உச்சம் பெறும்போது “பொன்னார் மேனியன்” ஆக ஜொலிப்பார். அதனால், கையில் காசு கிடைச்சா வேற எதுலையும் போடாதீங்க, தங்கம் வாங்குங்க. அது உங்களுக்கு பெரிய அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
வாத்தியார்கள் , மாஸ்டர்கள் , டாக்டர்கள், கவுன்சிலிங் கொடுக்குறவங்க… இவங்களுக்கெல்லாம் இது கல்லா கட்டுற நேரம்.
💖 படிப்பு & காதல்
📚 மாணவர்கள்: ஜூன் மாசத்துக்கு அப்புறம் நீங்க தான் கிளாஸ் லீடர். போட்டித் தேர்வுல ஈஸியா ஜெயிப்பீங்க.
🎵 “கண்ணான கண்ணே…” 🎵
(ஜூன் 02 முதல் அக்டோபர் 31 வரை கிரீன் சிக்னல்!)
சனியின் பார்வை 7-ம் இடத்துல இருக்கறதால, கணவன்-மனைவிக்குள்ள சின்ன ஈகோ கிளாஷ் வரலாம். “ஸாரி” சொல்ல கத்துக்கிட்டா வாழ்க்கை ஜாலி!
🏁 கிளைமாக்ஸ்
எல்லாமே நல்லா இருந்தாலும், சின்ன சின்ன ஸ்பீட் பிரேக்கர் இருக்குல்ல? அதுக்கு ஒரு முடிவு கட்டுவோம்.
🛕 ஃபினிஷிங் டச்:
- 🐍 ராகு பகவான் வழிபாடு: ஜூன் வரைக்கும் ராகு 12-ல் இருக்கறதால, அவரை கூல் பண்ணனும்.
- 🌳 ஆலமரம்: ஆலமரத்து வேருக்கு இனிப்பு பால் ஊத்துங்க.
- 😴 தூக்கம் வரலையா?: தலைக்கு அடியில பெருஞ்சீரகம் மற்றும் கல்கண்டு வச்சு தூங்குங்க. நிம்மதியா தூக்கம் வரும்.
🎬 ஆரம்பத்துல கொஞ்சம் சறுக்கினாலும், 2026 முடிவுல மீன ராசிக்காரங்க “உலக லெவல் ஃபேமஸ்” ஆகி, சொத்து சுகத்தோட ராஜாவா வலம் வருவீங்க!
மீன ராசிக்காரர்களே… என்ஜாய் பண்ணுங்க! 🐟✨