நரை முடியை விரட்டும் கறுப்பு வைரம் – சித்த மருத்துவ ரகசியம் 💎🧘‍♂️

Karisalankanni Keerai

🌿 “கீரைகளின் ராணி கரிசலாங்கண்ணி! நரை முடியை விரட்டும் கருப்பு வைரம்!” 💎🧘‍♂️

“வணக்கம் மச்சிஸ்!”

நம்ம ஊருல ஒரு பழமொழி சொல்லுவாங்க, “மூர்த்தி சிறிதுன்னாலும் கீர்த்தி பெரிது” னு. அது யாருக்குப் பொருந்துதோ இல்லையோ, நம்ம காலடி மண்ணுல, வயல் வரப்புகள்ல சும்மா களைச்செடி மாதிரி வளர்ந்து கிடக்கிற “கரிசலாங்கண்ணி”க்கு நூறு சதவீதம் பொருந்தும்.

இன்னைக்கு முடி கொட்டுதுனு ஆயிரக்கணக்குல செலவு பண்ணி ஷாம்பு, ஆயில்னு தேடுறோம். கல்லீரல் பிரச்சனைக்கு ஆஸ்பத்திரி படியேறி டானிக் குடிக்கிறோம். ஆனா, “ஏங்க… இதெல்லாம் சரி பண்ண எங்க கிட்ட ஒரு ‘தங்கச் சுரங்கமே’ இருக்கு!” அப்படின்னு நம்ம முன்னோர்கள் விட்டுட்டுப் போன பொக்கிஷம் தான் இந்த கரிசலாங்கண்ணி.

இதைச் சாதாரண கீரைனு நெனைக்காதீங்க. இது “கீரைகளின் ராணி” !

👑 பெயரும் பெருமையும்!

கரிசலாங்கண்ணிக்கு நம்ம ஊரு சித்த வைத்தியத்துல ஏகப்பட்ட பெயர்கள் இருக்கு. ஒவ்வொரு பேரும் ஒவ்வொரு காரணத்தோட வச்சிருக்காங்க.

  • கையந்தகரை
  • பிருங்கராஜம் (வடமொழியில் இதான் கெத்து!)
  • தேகராஜம் (தேகத்தை ராஜாவைப் போல வைக்குமாம்!)
  • கரிக்கேசி (கேசம் என்றால் முடி, முடியைக் கருப்பாக்கும் மூலிகை)
  • பொற்றலைக்கையான் (பொன் போன்ற மேனியைத் தரும்).

🎥”பேரை கேட்டாலே சும்மா அதிருதுல?” 😎 ஆமாம் பாஸ், இதன் மருத்துவ குணங்கள் சும்மா அதிர வைக்கும் ரகம்.

இந்தக் கீரையில ரெண்டு முக்கியமான வகை இருக்கு. இதுல தான் நிறைய பேருக்குக் குழப்பம் வரும்.

வெள்ளைக் கரிசலாங்கண்ணி: இதுல பூ வெள்ளை கலர்ல இருக்கும். இதைத்தான் நம்ம தலைமுடிக்குத் தைலம் காய்ச்சவும், வெளிப்புற பூச்சுக்கும் அதிகமா பயன்படுத்துறோம்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி: இதுல பூ மஞ்சள் கலர்ல, பாக்கவே தங்கத் தட்டு மாதிரி இருக்கும். இதை “பொற்றலை கரிசாலை” னு சொல்லுவாங்க. இதைச் சமைச்சுச் சாப்பிடுறதுக்கு ரொம்ப உகந்தது.

🧘‍♂️சித்தர்களின் ரகசியம் & வள்ளலார் வாக்கு!

நம்ம சித்தர்கள் சும்மா எதையும் சொல்லிட்டுப் போகல. கரிசலாங்கண்ணியை அவங்க “காயகல்ப மூலிகை” னு கொண்டாடுறாங்க. காயகல்பம்னா என்ன தெரியுமா? “நரை, திரை, மூப்பு நீக்கி உடலை என்றும் இளமையாக வைப்பது!”

மகான் வள்ளலார் இந்த மூலிகையைத் தலையில் தூக்கி வச்சுக் கொண்டாடி இருக்காரு. அவர் இதை இரண்டு பெயர்கள்ல அழைக்கிறார்:

  • தெய்வீக மூலிகை: கடவுளுக்கு நிகரான சக்தி கொண்டது.
  • ஞான பச்சிலை: இதைச் சாப்பிட்டா புத்தி கூர்மையாகும், அறிவு வளரும், ஞானம் பிறக்கும்!

📜 சித்தர் பாடல் குறிப்பு: தேரையர் சித்தர் தனது பாடலில் கரிசலாங்கண்ணியின் பெருமையை இப்படிச் சொல்கிறார்:

“காணவே கரிசாலை கையாந்த கரை பூணவே நால் நாழிச் சாற்றினுள்ளே…”

இதன் அர்த்தம், கரிசலாங்கண்ணிச் சாற்றை முறையாக உட்கொண்டால், உடல் இரும்பு போல உறுதியாகும், எமன் கூட நெருங்க பயப்படுவான் என்பதுதான் சித்தர்களின் வாக்கு.

🧬  சத்துக்களின் சுரங்கம்

“சரி பாஸ், இதுல அப்படி என்னதான் இருக்கு?” னு கேட்டீங்கன்னா, ஒரு மெடிக்கல் ஷாப்பையே இதுக்குள்ள அடக்கி வச்சிருக்காங்க. இதுல இருக்கிற சத்துக்கள்:

  • தங்கச் சத்து: ஆமாங்க, இதுல இயற்கையாவே தங்க பஸ்பம் இருக்குனு சொல்றாங்க.
  • இரும்புச் சத்து: ரத்த சோகையை விரட்டும்.
  • கால்சியம் & பாஸ்பரஸ்: எலும்புக்கும் பல்லுக்கும் கியாரண்டி.
  • வைட்டமின் ஏ: கண்ணுக்கு ஒளி தரும்.
  • புரதம்: உடல் வளர்ச்சிக்கு.

🎥 அயன் சூர்யா மாதிரி சொல்லணும்னா: “இதுல இல்லாத ஐட்டமே இல்ல… பக்கா ஆல்-ரவுண்டர்!” 🔥

🖌️சோதனையும் உண்மையும்!

இந்தக் கீரை உண்மையாவே கறுப்பு நிறத்தைக் கொடுக்குமான்னு சந்தேகம் இருக்கா? ஒரு சின்ன டெஸ்ட் பண்ணிப் பாருங்க. கரிசலாங்கண்ணி இலையை லேசா கசக்கி, உங்க கைல தேய்ச்சுப் பாருங்க. கொஞ்ச நேரத்துல அந்த இடம் “கருப்பா” மாறிடும். அதனால தான் இதை, “இயற்கை டை” னு சொல்றாங்க.

ருசி எப்படி இருக்கும்? கொஞ்சம் கசப்புச் சுவை இருக்கும். “கசப்பு மருந்து தான் நோயைக் கொல்லும்”னு சும்மாவா சொன்னாங்க? இந்த கசப்பு தான் நம்ம உடம்புல இருக்கிற நச்சுக் கிருமிகளைஅடிச்சு விரட்டுது.

📜 “கருமைக்கு அரசி”

“வாய்க்கால் வரப்பினில் வளர்ந்திருக்கும், தங்கம் என ஜொலிக்கும் பூவிருக்கும்! நரை முடிதனை நீக்கிடவே, இயற்கை அளித்த வரமிருக்கும்!

ஈரலை காக்கும் இரும்புச் சுவர், இதை உண்பவர் எவரோ அவரே அவர்! கரிசாலை என்னும் தாயமடி, நோய்கள் யாவும் மாயமடி!” 🌿✨

🥣 சாப்பிடும் முறை

இதை எப்படிச் சாப்பிடலாம்?

  • பச்சையாக: தைரியம் இருந்தா, வாயில போட்டு மென்று முழுங்கலாம். இதுல தான் முழுச் சத்து கிடைக்கும்.
  • சமையல்: பருப்பு கூட சேர்த்து சாம்பார், கூட்டு, பொரியல் அல்லது துவையல் செஞ்சு சாப்பிடலாம்.
  • பொடி (சூரணம்): நிழல்ல உலர்த்தி, பொடி பண்ணி வச்சுக்கிட்டு, தினமும் தேன் அல்லது வெந்நீர்ல கலந்து சாப்பிடலாம்.

இப்படிச் சாப்பிட்டா என்ன நடக்கும்? “உடல் இளமை மிடுக்குடன் இருக்கும்!” 16 வயசு மார்க்கண்டேயனா வாழலாம்!

💛கல்லீரலின் பாதுகாவலன்

நம்ம உடம்புல இன்ஜின் எது? இதயம். ஆனா அந்த இன்ஜினுக்கு ஆயில் சர்வீஸ் பண்ணி, பில்டர் மாத்தி, சுத்தமா வச்சிருக்கிற மெக்கானிக் யாரு? “கல்லீரல்” . இன்னைக்கு நாம சாப்பிடுற பாஸ்ட் ஃபுட், குடிக்கிற கண்ட தண்ணி, சிலருக்கு இருக்கிற மதுப் பழக்கம்… இதெல்லாம் சேர்ந்து கல்லீரலை பாடாப் படுத்துது.

கரிசலாங்கண்ணி (குறிப்பா மஞ்சள் கரிசலாங்கண்ணி) கல்லீரலுக்கு ஒரு “இரும்புக்கவசம்” மாதிரி.

  • மஞ்சள் காமாலை: காமாலை நோய் வந்தா கண்ணு மஞ்சளாகும், உடம்பு சோர்வாகும். இந்த நோய்க்கு “ராஜ மருந்து” கரிசலாங்கண்ணி தான். இதை அரைச்சு, மோர்ல அல்லது பால்ல கலந்து சாப்பிட்டா, காமாலை இருந்த இடம் தெரியாம ஓடிடும்.
  • கல்லீரல் வீக்கம் & கொழுப்பு: ஃபேட்டி லிவர் பிரச்சனைக்கும், மண்ணீரல் வீக்கத்துக்கும் இது சூப்பர் மருந்து.
  • பித்தம்: உடம்புல பித்தம் அதிகமானா கிறுகிறுப்பு வரும், வாந்தி வரும். கரிசலாங்கண்ணி பித்த நீரை சமன்படுத்தி, உடம்பை கூல் (Cool) பண்ணிடும்.

🎥கல்லீரல் நோயைப் பார்த்து கரிசலாங்கண்ணி சொல்ற மாதிரி,  “நீ என்ன பெரிய டானா? நான் கல்லீரலோட டான் டா! உள்ள வந்தா வெட்டிச் சாயாய்ச்சுடுவேன்!” 🔥

👁️கழுகுப் பார்வை வேண்டுமா?

இன்னைக்கு சின்ன பசங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லார் கண்ணுலயும் கண்ணாடி. கம்ப்யூட்டர், மொபைல்னு பார்த்துப் பார்த்து கண்ணு வறண்டு போச்சு. கரிசலாங்கண்ணிக்கு இன்னொரு பேர் “கண்சாகை” னு சொல்வாங்க. அதாவது கண்ணுக்கு ஒளி தரக்கூடியது.

  • கண் வறட்சி: இதுல இருக்கிற பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ, கண் நரம்புகளைப் பலப்படுத்தும்.
  • பார்வை தெளிவு: தூரப் பார்வை, கிட்டப் பார்வை பிரச்சனைகள் குறையும். கண்கள்ல ஏற்படுற எரிச்சல், சிவப்புத் தன்மை நீங்கும்.
  • டிப்ஸ்: கரிசலாங்கண்ணி தைலத்தைத் தலைக்குத் தேய்ச்சுக் குளிச்சா, கண்ணுல இருக்கிற சூடு குறைஞ்சு, பார்வை ஜொலிக்கும்!

🎶”கண்ணுக்குள்ளே… கரிசலாங்கண்ணி… பார்வை இப்போ… பளபளக்குது!” ✨

🌬️சளியை விரட்டும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்!

கரிசலாங்கண்ணி வெறும் கல்லீரலுக்கு மட்டும் இல்ல, நுரையீரலுக்கும் நண்பன். குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, இருமல், மூக்கடைப்பு வரும். அவங்களுக்கு இங்கிலீஷ் மருந்து கொடுக்க பயமா இருந்தா, கரிசலாங்கண்ணி சாறு தான் பெஸ்ட் சாய்ஸ்.

  • சாறு மருத்துவம்: இதன் இலைச்சாறு 2 சொட்டு எடுத்து, அதுல கொஞ்சம் தேன் கலந்து நாக்குல தடவினா போதும். சளி, இருமல் எல்லாம் “எஸ்” ஆகிடும்.
  • பெரியவர்களுக்கு: ஒரு ஸ்பூன் சாறு குடிக்கலாம். இது சுவாசப் பாதையைச் சுத்தம் பண்ணி, ஈஸியா மூச்சுவிட உதவும். ஆஸ்துமா பிரச்சனை இருக்கிறவங்களுக்கும் இது கைக்கண்ட மருந்து.

🎥 சளியைப் பார்த்து, “ஐ யாம் வெயிட்டிங்!  வா பாத்துக்கலாம்!” 😎

🦷பற்களும் ஈறுகளும்

“பல்லு போனா சொல்லு போச்சு” னு சொல்வாங்க. கரிசலாங்கண்ணி பற்களுக்கு ஒரு நேச்சுரல் டூத் பேஸ்ட்.

  • ஈறுகள் பலம்: இதன் இலையை மென்று சாப்பிட்டா, ஈறுகள் பலமாகும். ரத்தம் கசிவது நிக்கும்.
  • பளபளப்பு: பற்கள் மஞ்சளா இருக்கா? கரிசலாங்கண்ணி இலையை வச்சு தேய்ச்சா, பற்கள் முத்து மாதிரி வெண்மையாகும்.
  • வாய் துர்நாற்றம்: வயிற்றுப் புண் அல்லது வாய்ல இருக்கிற கிருமிகளால வாய் நாறும். இந்தக் கீரை அந்தக் கிருமிகளைக் கொன்னு, ஃப்ரெஷ் (Fresh) ஆக்கிடும்.

📜 சித்த மருத்துவக் குறிப்பு:

“கரிசாலை உண்டால்… காலம் தாழ்த்துவான் எமன்!” அதாவது, கரிசலாங்கண்ணியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தா, ஆயுள் நீடிக்கும். நோய்கள் அண்டாது.

விஷக்கடிக்கு மருந்து: தேள், பூரான் கடிச்சா, உடனே ஆஸ்பத்திரிக்கு போறதுக்கு முன்னாடி, கரிசலாங்கண்ணி இலையை அரைச்சு, கடிபட்ட இடத்துல வச்சுக் கட்டினா விஷம் முறியும். எரிச்சல் குறையும்.

📜 “உடலின் காவலன்”

“கல்லீரல் காக்கும் மஞ்சள் பூவே, கண் ஒளி தரும் விடிவெள்ளியே! சளியை விரட்டும் சஞ்சீவியே, சாவைத் தள்ளி வைக்கும் சாவியே!

பித்தம் தணிக்கும் பெருமருந்தே, பல் வலி போக்கும் நல்விருந்தே! கரிசாலை உன்னைத் தொழுதாலே, நோய்கள் ஓடும் பயத்தாலே!” 🌿🙏

💇‍♂️ கேசத்தைக் காக்கும் கறுப்பு வைரம்!

கரிசலாங்கண்ணிக்கு வடமொழியில “பிருங்கராஜ்” னு பேரு. அதாவது “கேசத்தின் அரசன்” . இன்னைக்கு மார்க்கெட்ல விக்கிற அத்தனை ஹெர்பல் ஹேர் ஆயில்லையும்  இதுதான் ஹீரோ.

  • இளநரைக்கு எமன்: சின்ன வயசுலேயே நரை முடி வருதா? கரிசலாங்கண்ணி சாற்றைத் தொடர்ந்து தலையில தேய்ச்சு வந்தா, நரை முடி கறுப்பாக மாறும். இது ஒரு “நேச்சுரல் டை”. கெமிக்கல் டை அடிச்சு முடியைக் கெடுத்துக்காதீங்க.
  • வழுக்கை நீங்கும்: முடி கொட்டி வழுக்கை விழுந்த இடத்துல, இந்தக் கீரையை அரைச்சுப் பூசிட்டு வந்தா, மயிர்க்கால்கள் தூண்டப்பட்டுப் புதிய முடி வளரும்னு சித்தர்கள் சொல்றாங்க.
  • பொடுகுத் தொல்லை: தலையில அரிப்பு, பொடுகு இருக்கா? கரிசலாங்கண்ணி ஆன்டி-பாக்டீரியல் சக்தி கொண்டது. இது ஸ்கால்ப்  இன்பெக்ஷனைச் சரி பண்ணி, பொடுகை விரட்டிடும்.

🎥நரை முடியைப் பார்த்து,”ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் பார்க்கறியா? கரிசலாங்கண்ணி பட்டா… உன் வெள்ளை முடி எல்லாம் கறுப்பா மாறும் பார்க்கறியா?” 😎🔥

🛡️ சருமப் பாதுகாப்பு

அழகு நிலையத்துக்குப் போய் ஃபேஷியல் பண்றதுக்கு முன்னாடி இதைக் கேளுங்க. கரிசலாங்கண்ணி ஒரு சிறந்த கிருமி நாசினி.

  • சொறி, சிரங்கு: தோல் நோய்கள், அரிப்பு, தேமல் இருக்கிற இடத்துல இதன் இலையை அரைச்சுப் பூசினா, பட்டுப்போன தோல் கூட பளபளப்பா மாறும்.
  • காயங்கள்: வெட்டுக் காயம், புண் ஆறலனா, இதன் சாற்றை விட்டா உடனே ஆறிடும்.

🥗சமையல் குறிப்புகள்

இதை மருந்தா மட்டும் பார்க்காம, உணவாவும் சாப்பிடலாம்.

  • கூட்டு/பொரியல்: பாசிப்பருப்பு கூட சேர்த்து கூட்டு வச்சா அமிர்தமா இருக்கும். சின்ன வெங்காயம், சீரகம் போட்டுப் பொரியல் பண்ணலாம்.
  • சூப்: கீரையைத் தண்ணியில போட்டு, மிளகு, சீரகம், பூண்டு தட்டிப் போட்டு சூப் வச்சுக் குடிச்சா, சளி பறந்துடும். ரத்தம் சுத்தம் ஆகும்.

முக்கிய குறிப்பு: இந்தக் கீரையைச் சமைக்கும் போது புளி சேர்க்கக் கூடாது. அப்போ தான் முழு பலன் கிடைக்கும்.

📜 “இயற்கை அன்னையின் பரிசு”

“நரை திரை போக்கும் நல்விருந்தே, நலிந்த உடலுக்கு நீ மருந்தே! கருமேகம் போல கூந்தல் வளர, கரிசாலை தைலம் ஒன்றே போதுமே!

வயல் வரப்பில் நீ சிரிப்பாய், வறியவர் நோயை நீ துடைப்பாய்! பொற்றலைக்கையான் உன் புகழை, போற்றிப் பாடவே மொழி போதாதே!” 🌿❤️

🏁வயல் வரப்பில் வளர்ந்த வரம்…

நண்பர்களே, “கரிசலாங்கண்ணி”ங்கறது வெறும் கீரை இல்ல, அது நம்ம மண்ணின் அடையாளம். நம்ம முன்னோர்கள் 100 வயசு வரைக்கும் கண்ணாடி போடாம, நரை முடி இல்லாம, கோல் ஊன்றாம வாழ்ந்ததுக்கு இதுதான் சீக்ரெட்.

இன்னைக்கு நம்ம காலடியில இது வளர்ந்து கிடந்தாலும், அதை நாம களைச்செடினு நினைச்சுப் பிடுங்கிப் போடுறோம். இனிமே அதைப் பார்த்தா, மரியாதையா எடுத்துட்டு வந்து, சமைச்சுச் சாப்பிடுங்க. இல்லனா தைலம் காய்ச்சுங்க.

🎥 “ஆரோக்கியம்ங்கறது நம்ம உரிமை… அதை விட்டுக் கொடுக்கக் கூடாது! கரிசலாங்கண்ணிய யூஸ் பண்ணுங்க… சிறப்பான, தரமான வாழ்க்கைய வாழுங்க!” 😎✨

“இயற்கையோடு இணைவோம்! நோயின்றி வாழ்வோம்!”

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.