♍ 2026 கன்னி ராசி பலன்
“தாறுமாறு தக்காளி சோறு!” 🍅🍚
(அஸ்தம் உஷார்… சித்திரை ஜோர்!)
🤣 “எதையும் பிளான் பண்ணி செய்யணும்…
பிளான் பண்ணாம பண்ணா இப்படித்தான்!”
வணக்கம் கன்னி ராசி நண்பர்களே! 👋
எப்பவுமே “பர்ஃபெக்ஷன்” பார்க்கும் கன்னி ராசி நேயர்களுக்கு, பிறக்கப்போகும் 2026-ம் ஆண்டு ஒரு “ரோலர் கோஸ்டர் ரைடு” மாதிரி இருக்கப் போகுது. 🎢
போன வருஷம் (2025) நம்புனவங்க கழுத்த அறுத்துருப்பாங்க. நண்பனுக்கு கடன் வாங்கி கொடுத்து நீங்க கடன்காரனா ஆகியிருப்பீங்க. “நண்பேன்டா!” னு சொல்லி முதுவுல குத்துன கதை எல்லாம் முடிஞ்சு போச்சு. 🔪💔
இப்போ 2026-ல நீங்க எப்படி இருக்கணும்? கிரகங்கள் என்ன சொல்லுது? வாங்க ஒரு ரவுண்டு போவோம். 👇
😴 1. களம் எப்படி இருக்கு?
(“தூக்கம் வருமா…?”)
இந்த வருஷம் உங்க ராசிக்கு 12-ம் வீட்ல ஞானகாரகன் கேது உட்கார்ந்து இருக்கார். 6-ம் வீட்ல ராகு இருக்கார். 7-ம் வீட்ல (களத்திர ஸ்தானம்) சனி பகவான் ஆட்சி பண்ணிட்டு இருக்கார்.
🎶“தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே…”
🛑 ஆனா ரியாலிட்டி என்ன?
உங்களுக்கு அந்த பாட்டு செட் ஆகாது. ராத்திரி 2 மணி வரைக்கும் கண்ணு முழிச்சுக்கிட்டு, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Reels) தள்ளிக்கிட்டே இருப்பீங்க. 📱
🧘 கேதுவின் பிளான்:
கேது மோட்ச காரகன். அவன் தூக்கத்தை கெடுத்து, உங்களை தியானம், யோகா, ஆன்மீகம் பக்கம் திருப்ப பார்ப்பான்.
- நீங்க போனை நோண்டுனீங்கன்னா 👉 உடம்பு கெட்டுப்போகும்.
- கண்ணை மூடி தியானம் பண்ணுனீங்கன்னா 👉 ஞானி ஆகிடுவீங்க.
சாய்ஸ் உங்களோடது! ✨
⭐ 2. நட்சத்திர பலன்கள்
(“யாரு அந்த தாறுமாறு?”)
2026-ல கன்னி ராசிக்குள்ள இருக்கிற மூணு நட்சத்திரங்களுக்கும் ஒரே பலன் கிடையாது. இதுல ஒருத்தர் மட்டும் ரொம்ப உஷாரா இருக்கணும். 🧐
✅ உத்திரம் & சித்திரை:
நீங்க தப்பிச்சிட்டீங்க! உங்களுக்கு “கேட் திறந்திருக்கு”. நினைச்சதை சாதிக்கலாம். வண்டி, வாகனம், வீடு வாங்குற யோகம் உண்டு. 🚗🏠
⚠️ அஸ்தம் நட்சத்திரம்:
இந்த வருஷத்தோட “தாறுமாறு” நீங்க தான். சந்திர திசை நடக்கும் அஸ்த நட்சத்திரக்காரர்கள் ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்.
“வேணாம்… வலிக்குது… அழுதுருவேன்!”
எந்த ரிஸ்க்கும் எடுக்காதீங்க. புதுசா எதையும் ட்ரை பண்ணாதீங்க. யாராச்சும் உதவி கேட்டா கூட, செய்ய போய் நீங்க மாட்டிக்காதீங்க. ஒரு பள்ளம் இருக்கு, அதுல விழுந்துராம ஓரமா போங்கன்னு சொல்றது பயமுறுத்துறதுக்காக இல்ல, பாதுகாப்புக்காக! 🛡️
💏 3. காதல் & குடும்பம்
(“வெள்ளைக் கொடி பறக்கட்டும்!”)
ஏழாம் இடத்துல சனி. இதுக்கு பேரு கண்டக சனி. சனி பகவான் களத்திர ஸ்தானத்துல உட்கார்ந்து என்ன செய்வார்? புருஷன்-பொண்டாட்டிக்குள்ள சும்மா “டாம் அண்ட் ஜெர்ரி” மாதிரி சண்டை மூட்டி விடுவார். 🐭🐱
🏳️ 2026 ஸ்ட்ராட்டஜி: “வெள்ளைக் கொடி”
- துணைவியார் என்ன சொன்னாலும் “சரிங்க, ஓகேங்க” னு சொல்லுங்க.
- எதிர்த்து பேசினீங்க… வக்கீல் நோட்டீஸ் தான் மிச்சம். ⚖️
- காதல்ல கூட ஈகோ பார்க்காதீங்க. “மௌனம் சம்மதம்” மட்டும் இல்ல, மௌனம் தான் இப்ப உங்க ஆயுதம். 🤫
🏥 4. ஆரோக்கியம்
(“உடலும் உள்ளமும்!”)
6-ம் வீட்ல ராகு. தோல் நோய் , ஹார்மோன் பிரச்சனை ,காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள் வரலாம். 🤧
📜“சுவர் இருந்தால் தான் சித்திரம்…
சுகம் இருந்தால் தான் சரித்திரம்!”
குறிப்பா, மன அழுத்தம் (Stress) அதிகமாகும். வெளியில சிரிக்கிற மாதிரி இருப்பீங்க, ஆனா உள்ளுக்குள்ள எரிமலை வெடிச்சுக்கிட்டு இருக்கும். 🌋
😎“பாக்கத்தான் நான் சாது…
மிரண்டு எழுந்தா நான் பூதம்!”
அப்படின்னு கத்தத் தோணும். ஆனா கத்தாதீங்க. யோகா பண்ணுங்க. மனசை ரிலாக்ஸா வச்சுக்கோங்க. 🧘♂️
💼 5. வேலை & தொழில்
(“இடம் மாறினால் யோகம்!”)
கன்னி ராசிக்காரங்க எப்பவுமே பர்பெக்ஷன் பார்ப்பீங்க. வேலையை நேசிப்பீங்க. “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” னு சொல்றது உங்களுக்கு தான் பொருந்தும். 👔
🚀 கெரியர் ஹைலைட்ஸ் (2026):
- வேலை மாற்றம், இட மாற்றம், தொழில் மாற்றம் உறுதியா நடக்கும்.
- ✈️ வெளிநாடு போற யோகம் பிரகாசமா இருக்கு.
- 💻 ஐடி (IT) ஃபீல்டுல இருக்கிறவங்களுக்கு ரெஃபரன்ஸ் மூலமா நல்ல வேலை கிடைக்கும்.
⚠️ கடன் எச்சரிக்கை:
தொழில்ல யாரையும் நம்பி கடன் கொடுக்காதீங்க. 6-ம் இடத்து ராகு “கடன் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது”. கொடுத்தா திரும்பாது, வாங்கினா கட்ட முடியாது. 🚫
🤫 6. வெற்றி ரகசியம்
இந்த வருஷம் நீங்க ஜெயிக்கணும்னா ஒரு ரகசியம் இருக்கு. எதையும் வெளில சொல்லாதீங்க.
“யாரிடமும் சொல்லாதே… எவரிடமும் சொல்லாதே…”பாட்டு மாதிரி, உங்க பிளானை மனசுக்குள்ளயே வைங்க. 🔒
💡 கோல்டன் டிப்ஸ்:
“எந்த விஷயத்தை நீங்க சீக்ரெட்டா வச்சிருக்கீங்களோ, அது ஜெயிக்கும். எதை ஊருக்கெல்லாம் டண்டோரா போடுறீங்களோ, அது புஸ்ஸுனு போயிடும்.” 🤐
🎓 7. மாணவர்களுக்கு
(“கவனம் சிதறல்!”)
படிப்புல கன்னி ராசி பசங்க கெட்டி. ஆனா இந்த வருஷம் சனி பகவான் 3-ம் பார்வையா 4-ம் இடத்தைப் பார்க்கிறார். படிப்புல பிரேக் விழலாம். 📉
👨🏫 அட்வைஸ்:
“கனவு காணுங்கள்” னு கலாம் ஐயா சொன்னாரு. ஆனா நீங்க கனவு மட்டும் கண்டுட்டு இருக்காம, புத்தகத்தை திறந்து வச்சு படிங்க.
🙏 8. பரிகாரம்
(“சரணம் சரணம்!”)
பிரச்சனைகள் இருந்தாலும் சமாளிக்க கடவுள் இருக்கார். கன்னி ராசிக்கு இந்த வருஷம் கை கொடுக்கப் போற தெய்வம் மீனாட்சி அம்மன் மற்றும் பெருமாள்.
- 🕉️ பெருமாள் சரணாகதி: தினமும் காலையில “விஷ்ணு சகஸ்ரநாமம்” கேளுங்க. அல்லது “கோவிந்தா… கோவிந்தா…” னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே இருங்க. பெருமாள் உங்க கூடவே இருப்பார்.
- 🛕 மீனாட்சி அம்மன் வழிபாடு: மதுரை மீனாட்சி அம்மனை ஒரு முறை போய் தரிசனம் பண்ணிட்டு வாங்க. உங்க வாழ்க்கையில இருக்கிற குழப்பம் எல்லாம் தீர்ந்து தெளிவு பிறக்கும்.
- 🌱 தானம்: புதன் கிழமை பச்சை பயறு தானம் பண்ணுங்க. ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு உதவுங்க.
🏁 9. கெத்து காட்டுங்க!
கன்னி ராசி அன்பர்களே! 2026-ம் ஆண்டு கொஞ்சம் சவாலா இருந்தாலும், நீங்க புத்திசாலி. “புத்திமான் பலவான்” னு சும்மாவா சொன்னாங்க? 🧠
- ஜூன் மாசம் வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருங்க. 🤫
- ஜூனுக்கு மேல குரு பகவான் உச்சம் அடைந்து உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவார். 🚀
- ⚠️ அஸ்தம் நட்சத்திரக்காரங்க மட்டும் கொஞ்சம் “கேர்ஃபுல்”.
“எண்ணிய முடிதல் வேண்டும்…
நல்லவே எண்ணல் வேண்டும்…
திண்ணிய நெஞ்சம் வேண்டும்…
தெளிந்த நல் அறிவு வேண்டும்!”
மன உறுதியோட, பெருமாள் அருளோட
இந்த 2026-ஐ எதிர்கொள்ளுங்க. வெற்றி நிச்சயம்! 🏆
– வாழ்க வளமுடன்! –