💔 “இடி விழுந்த எஃபெக்ட்!”
‘ஜனநாயகன்’ ரிலீஸ் நிறுத்தம்! 🚫
கதறும் விநியோகஸ்தர்கள்… கலங்கும் ரசிகர்கள்! 😢⛈️
“வணக்கம் மச்சிஸ்!” 👋
தமிழகமே எதிர்பார்த்துக்கிட்டு இருந்த அந்த ஒரு நாள்… ஜனவரி 9, 2026. “தலைவன் வருவான்… திரையெல்லாம் தீ பிடிக்கும்”னு ஆவலோடு காத்துக்கிட்டு இருந்த தளபதி ரசிகர்களுக்கு, நேத்து ராத்திரி ஒரு பேரிடி செய்தி வந்துச்சு. ⚡
இது சாதாரணமா தள்ளிப்போன விஷயம் இல்ல பாஸ். சென்சார் போர்டு வச்ச செக், கோர்ட் கேஸ், ரீஃபண்ட் கலாட்டான்னு பெரிய ரணகளமே நடந்துட்டு இருக்கு. 🏛️💸
— KVN Productions (@KvnProductions) January 7, 2026
🛑 நள்ளிரவு அறிக்கை – தயாரிப்பாளர்களின் “கனத்த இதயம்”! 💔
எல்லாரும் விடிஞ்சா கொண்டாட்டம்னு நினைச்சிட்டு இருந்த நேரத்துல, படத்தை தயாரிச்ச கே.வி.என் புரொடக்ஷன்ஸ் சோசியல் மீடியால ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க. 💣
அவங்க என்ன சொல்றாங்கன்னா, இந்த முடிவு அவ்ளோ ஈஸியா எடுக்கப்பட்டது இல்லையாம். ஆனா சூழ்நிலை அப்படி அமைஞ்சிருச்சு. 😔
🎥 Fans Mind வாய்ஸ்
“நான் ஒரு தடவ சொன்னா…
நூறு தடவ சொன்ன மாதிரி…
ஆனா இப்போ ஒரு தடவ கூட சொல்ல முடியாம தள்ளிப் போயிருச்சே!” 😭💔
💸50 கோடி சுவாஹா! 🔥
(கண்ணீரில் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள்! 😭)
படம் ரிலீஸ் ஆகலைன்னா இங்கே லோக்கல்ல மட்டும் பிரச்சனை இல்ல. உலகம் முழுக்க வியாபாரம் படுத்துடுச்சு. 📉 ஹெச். வினோத் இயக்கத்துல உருவான இந்தப் படம், வெளிநாடுகள்ல மட்டும் அட்வான்ஸ் புக்கிங் மூலமா 50 கோடி ரூபாயை வாரிக்குவிச்சிருந்தது. 💰
இப்போ அந்தப் பணம் எல்லாம் என்ன ஆச்சு? ரீஃபண்ட் பண்ண வேண்டிய கட்டாயம்! 🛑
🇬🇧 லண்டன் நிலவரம்:
அஹிம்சா என்டர்டெயின்மென்ட் சோகம் 😢
யுகே (UK) விநியோகஸ்தரான அஹிம்சா என்டர்டெயின்மென்ட் ரொம்ப எமோஷனலா ஒரு லெட்டர் எழுதியிருக்காங்க. 📝
“நாங்க லியோ படத்துக்கு இணையா, இதுவரைக்கும் 65,000 டிக்கெட்களை வித்திருந்தோம். யுகே முழுக்க 260+ தியேட்டர்கள், ஆயிரக்கணக்கான காட்சிகள்னு பிளான் பண்ணி வச்சிருந்தோம். அதுவும் ராத்திரி 12:30 மணிக்கே ப்ரீமியர் ஷோ போட இருந்தோம்… எல்லாம் போச்சு!” 💔
🇺🇸 அமெரிக்கா & 🇲🇾 மலேசியா நிலவரம்:
- 🗽 அமெரிக்கா : பிரைம் மீடியா நிறுவனம், எல்லா தியேட்டர் ஓனர்களுக்கும், “டிக்கெட் பணத்தைத் திருப்பிக் கொடுக்க ஆரம்பிங்க”னு உத்தரவு போட்டுட்டாங்க. 💸
- 🏙️ மலேசியா: கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் , ஆன்லைன்ல புக் பண்ணவங்களுக்கு 14 நாளைக்குள்ள ஆட்டோமேட்டிக்கா பணம் வந்துரும்னு சொல்லிருக்காங்க. கவுண்டர்ல டிக்கெட் எடுத்தவங்க, நேர்ல போய் வாங்கிக்கணுமாம். 🏦
🇮🇳 நம்ம ஊரு நிலைமை:
பெங்களூரு விக்டரி சினிமாஸ் , வெள்ளிக்கிழமை காட்சிகள் அனைத்தும் ரத்துனு சொல்லிட்டு, ஜனவரி 8-ம் தேதி காலைல இருந்து கவுண்டர்ல பணத்தைத் திருப்பிக் கொடுக்குறாங்க. 🎟️🔙
🎶 விநியோகஸ்தர்கள் பாடும் சோக கீதம்:
“காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம்… 💰
(டிக்கெட் விற்ற போது)
திடீரென்று வந்ததடா…
தடையெனும் பாரம்! 🛑😞
(இப்போ ரீஃபண்ட் நேரம்)”
⚖️கோர்ட் படியில் ‘ஜனநாயகன்’ 🏛️
(என்னதான் பிரச்சனை? 🤔)
எல்லாம் சரி, ஏன் இந்தத் திடீர் தடை? வில்லன் யாரு? நம்ம சென்சார் போர்டு தான். 🚫 படத்துக்கு இன்னும் சர்டிபிகேட் கொடுக்கல. தயாரிப்பாளர்கள் ‘UA 16+’ சர்டிபிகேட் வேணும்னு கேட்டு மெட்ராஸ் ஹைகோர்ட் படியேறி இருக்காங்க. 👨⚖️
புதன்கிழமை இந்த வழக்கை விசாரிச்ச நீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வச்சிருக்காங்க . ⏳ அந்தத் தீர்ப்பு ஜனவரி 9-க்குள்ள வரும்னு எதிர்பார்க்கப்படுது.
🔥”இது தளபதியின் ஃபேர்வெல் டா!” 😭
கொதிக்கும் ரசிகர்கள்! 😡
இது வெறும் படம் இல்ல. தளபதி விஜய்யின் சினிமா வாழ்க்கையின் கடைசி அத்தியாயம்! 🎬 இதுக்கு அப்புறம் அவர் முழு நேரமா தமிழக வெற்றிக் கழகம் மூலமா அரசியல் களத்துல இறங்கப் போறாரு. 🚩
“தலைவன் அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடியே இவ்வளவு தடையா?”னு ரசிகர்கள் ஆவேசத்துல இருக்காங்க. 😤
⚠️ பிளாக் டிக்கெட் பாவம்:
இதுல கொடுமை என்னன்னா, பிளாக் மார்க்கெட்ல 5000 ரூபாய் வரைக்கும் கொடுத்து டிக்கெட் வாங்கினவங்க நிலைமை தான் பரிதாபம்! அவங்களுக்கு ரீஃபண்ட் கிடைக்குமான்னே தெரியல. 💸❓
🌟 நட்சத்திர பட்டாளம்:
ஹெச். வினோத் இயக்கத்துல, பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ்னு ஒரு பெரிய பட்டாளமே நடிச்சிருக்காங்க. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, தீவிரவாத நெட்வொர்க் மற்றும் ஊழல் அரசியல்வாதியை எதிர்க்கிற கதை இது. 👮♂️💣
🎥To Censor Board:
“இது ஜனநாயக நாடு தானே? 🗳️
ஒரு படத்தைக் கூட ரிலீஸ் பண்ண விட மாட்டீங்களா?” 🔥
🏁 நாளை விடியுமா? 🌅
(The Wait continues… ⏳)
இப்போதைக்கு எல்லாருடைய பார்வையும் மெட்ராஸ் ஹைகோர்ட் மேல தான் இருக்கு. நாளைக்கு (அல்லது இன்னைக்கு) வரப்போற அந்தத் தீர்ப்பு தான் ‘ஜனநாயகன்’ தலைவிதியைத் தீர்மானிக்கும். 🔨
“புதிய ரிலீஸ் தேதியை சீக்கிரமே அறிவிப்போம்னு தயாரிப்பாளர்கள் சொல்லிருக்காங்க.” 📢
🎥நம்ம ‘கத்தி’ விஜய் வாய்ஸ்ல:
“காத்திருந்தவன் கணக்கு பார்த்தா…
கறாராதான் இருக்கும்! 😎
கொஞ்சம் லேட் ஆனாலும்…
லேட்டஸ்ட்டா வருவோம்!” 💥🚀