🎬 பெங்களூரு ORR-ல் DXC டெக்னாலஜியின் ‘ரிஸ்க்’ ஆட்டம்! 🚧🚗
📍 களம்: பெங்களூரு, அவுட்டர் ரிங் ரோடு.
🚦 சூழல்: டிராஃபிக் நரகம்.
🏢 ஹீரோ/வில்லன்: DXC டெக்னாலஜி.
😓 பாதிக்கப்பட்டவர்கள்: 20,000 ஊழியர்கள்.
பெங்களூருனாலே “சில்க் போர்டு” டிராஃபிக் தான் ஃபேமஸ். அந்தப் பக்கம் போனா திரும்பி வர அடுத்த ஜென்மம் ஆகும்னு கதறுற ஐடி கம்பெனிகள் மத்தியில், ஒரு விசித்திரமான சம்பவம் நடந்திருக்கு. எல்லோரும் அவுட்டர் ரிங் ரோடை விட்டுத் தப்பிச்சு வைட்ஃபீல்டுக்கும், ஏர்போர்ட் ரோட்டுக்கும் ஓடிக்கிட்டு இருக்கிறப்போ, DXC டெக்னாலஜி மட்டும் “நாங்க அந்த டிராஃபிக் குகைக்குள்ள தான் போவோம்”னு ஒத்த கால்ல நிக்குது!.
🚚 எலக்ட்ரானிக் சிட்டி டூ பெல்லந்தூர்
DXC நிறுவனம் எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்த தன்னோட 20 ஏக்கர் பிரம்மாண்டமான கேம்பஸை, சத்வா குரூப்புக்கு 400 கோடி ரூபாய்க்கு வித்துட்டு, இப்போ பெல்லந்தூர் ஏரியாவில் இருக்கும் ‘பிரஸ்டீஜ் லேக்ஷோர் டிரைவ்’ -க்கு மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு இருக்கு.
👋 எதிர் திசையில் ஸ்விக்கி & பிளாக்பக்
இன்னொரு பக்கம் பார்த்தா, பெங்களூருவின் முன்னணி நிறுவனங்கள் எல்லாம் ORR-க்கு ‘குட்-பை’ சொல்லிக்கிட்டு இருக்காங்க.
- 🛵 ஸ்விக்கி : “இந்த டிராஃபிக் நமக்கு செட் ஆகாது”னு பெல்லந்தூர்ல இருந்து காலி பண்ணி வைட்ஃபீல்டுக்கு போயிட்டாங்க.
- 🚚 பிளாக்பக்: இவங்க சிஇஓ ராஜேஷ் ஒரு படி மேல போய், “இங்க இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சரியில்ல, ஊழியர்கள் கஷ்டப்படுறாங்க”னு சமூக வலைதளத்துல புலம்பிட்டாரு. உடனே ஆந்திரா அமைச்சர் நாரா லோகேஷ், “வாங்க வைசாக்குக்கு”னு இன்விடேஷன் வேற கொடுத்துட்டாரு!.
இப்படி ஊரே காலி பண்ணும்போது, DXC மட்டும் உள்ள போறது தான் இப்போ ஹாட் டாபிக்! இது சிக்கன நடவடிக்கையா? இல்லை விபரீத விளையாட்டா?
🏗️ பிரஸ்டீஜ் குரூப்பின் சபதம்
இந்தக் களேபரத்துக்கு நடுவுல, பிரஸ்டீஜ் குரூப் சிஇஓ ஜக்கி மர்வாஹா ஒரு நம்பிக்கை விதையைத் தூவுறாரு.
பிளாக்ஸ்டோன் நிறுவனமும் இங்கே 4.5 லட்சம் சதுர அடி இடத்தை வாடகைக்கு எடுத்திருக்கு.
✍️ ஐடி ஊழியனின் கவிதை
மழை வந்தால் வெள்ளம், வெயில் வந்தால் தூசி,
பெல்லந்தூர் சாலையில் போகுமா என் ஆயுசு?
ஆபீஸ் மாறுது… அட்ரஸ் மாறுது… ஆனா டிராஃபிக் மட்டும் மாறலையே எஜமானே! 🛑
கிரவுண்ட் ரியாலிட்டி என்னன்னா, அந்த பில்டிங் வேலை இன்னும் முழுசா முடியல. ஆறாவது மாடியில் ஒயரிங் வேலை, புட்டி வேலைனு தூசி பறக்குது.
“செலவைக் குறைக்க ஆபீஸை மாத்தலாம்… ஆனா ஊழியர்கள் நிம்மதியா ஆபீஸ் வந்து சேரலைன்னா, வேலையை யாரு பார்ப்பா?”
2026 டிசம்பர்ல மெட்ரோ வரும்னு சொல்றாங்க. அதுவரைக்கும் DXC ஊழியர்களுக்கு
“டிராஃபிக் ஜாம்” தான் தினசரி தியானம்! 🧘♂️🚗