டிசம்பர் 31, 2025 ராசிபலன் & பஞ்சாங்கம்! 🎉

📅 “கடைசி நாளுல ஒரு கச்சேரி!”

(2026-ஐ வரவேற்க நீங்க ரெடியா?)

வணக்கம் நண்பர்களே! 👋
“நேற்று என்பது முடிந்து போனது, நாளை என்பது நடக்கப் போவது, இன்று என்பது கையில் இருப்பது!” – ஆனா இன்னைக்கு சும்மா சாதாரண நாள் இல்ல. 2025-ம் வருஷத்தோட கடைசி நாள் . 🕛

இந்த வருஷம் நமக்கு நல்லா போச்சோ, இல்ல “சோதனையே தான்”னு போச்சோ, அதெல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு, 2026-ஐ வரவேற்க ரெடியாகுற நாள் இது.


🌟 இன்றைய பஞ்சாங்க ஹைலைட்ஸ்

  • 🗓️ தேதி: 31-12-2025 (டிசம்பர் 31)
  • 🧠 கிழமை: புதன் கிழமை – புதன் அறிவுக்காரன், சோ இன்னைக்கு மூளையை யூஸ் பண்ணுங்க!
  • 📜 தமிழ் தேதி: விசுவாவசு வருடம், மார்கழி 16.
  • நட்சத்திரம்: கார்த்திகை (இரவு 11.26 வரை).
    (முருகப்பெருமான் ஆசி உண்டு – கார்த்திகை விரதம்!)
  • 🌙 திதி: வளர்பிறை துவாதசி (இரவு 11.16 வரை). ஏகாதசி முடிஞ்சு வர்ற துவாதசி ரொம்ப விசேஷம்.
🎵 “மார்கழி திங்கள் அல்லவா… மத்தளம் கொட்ட அல்லவா!”

🕌 கோவில் ஸ்பெஷல்: சொத்து தகராறா?

இன்னைக்கு காலண்டர்ல ஒரு சூப்பர் தகவல் இருக்கு. “வீரவநல்லூர் பூமிநாதர் கோயில்” (திருநெல்வேலி பக்கம்). இந்த கோவிலோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா, “சொத்து பிரச்சனைகள் தீர்க்கும் ஆலயம்”. 🏞️

 👊“பங்காளி சண்டையா? பாகப் பிரிவினை தகராறா?
கோர்ட்டு கேஸுனு அலையாம,
பூமிநாதரை போய் பாருங்க.. பூமி பிரச்சனை தீரும்!” 🙏

⏳ நேரம் நல்லா இருக்கா பாஸ்?

எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குறதுக்கு முன்னாடி நேரம் பாக்குறது நம்ம பழக்கம். கடைசி நாள்ல எந்த தப்பும் பண்ணிடக் கூடாதுல? 😉

✅ நல்ல நேரம்

  • 🌞 காலை: 9.15 முதல் 10.15 வரை
  • 🌇 மாலை: 4.45 முதல் 5.45 வரை
🎉 டிப்ஸ்: நியூ இயர் பார்ட்டி பிளானிங் எல்லாம் இந்த டைம்ல பண்ணுங்க, சக்சஸ் ஆகும்!

✨ கௌரி நல்ல நேரம்:

  • 🕛 பகல்: 2.00 – 3.00
  • 🕕 மாலை: 6.30 – 7.30

🛑 கவனமா இருக்க வேண்டிய நேரம்

🐍 ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

(சாப்பிட்டுட்டு சும்மா ரெஸ்ட் எடுங்க, புதுசா எதுவும் ஆரம்பிக்காதீங்க). 🛌

☠️ எமகண்டம்: காலை 7.30 – 9.00

(ஆபிஸ் போற அவசரத்துல வண்டியை மெதுவா ஓட்டுங்க). 🏍️


⚠️ சந்திராஷ்டமம்: “வம்பை விலைக்கு வாங்காதீங்க!”

இன்னைக்கு சந்திராஷ்டமம் யாருக்குன்னா:
சித்திரை, சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு.

🤣 “நான் பேசுறத விட, பேசாம இருக்கறது தான் எனக்கும் நல்லது, ஊருக்கும் நல்லது” 🤐

நண்பர்களே! இன்னைக்கு வாயை கொடுத்து வம்பை வாங்காதீங்க. பாஸ் திட்டினாலும், மனைவி முறைச்சாலும் “ஸ்மைல் ப்ளீஸ்”னு போயிட்டே இருங்க. வண்டி ஓட்டும்போது கவனம் தேவை. 🚫🗣️

🔮 12 ராசிகளுக்கான  பலன்கள்

(இன்னைக்கு லக்கா? இல்ல பல்பூ-ஆ?)

♈ மேஷம் : சாந்தம் 🧘‍♂️

இன்னைக்கு நீங்க “அமைதிப்படை” சத்யராஜ் மாதிரி இருப்பீங்க. டென்ஷன் இல்லாம, ரிலாக்ஸா வருஷத்தை முடிப்பீங்க. பீஸ் ப்ரோ! ✌️

♉ ரிஷபம் : புகழ் 🌟

“உலகம் பிறந்தது எனக்காக!” இன்னைக்கு நீங்க என்ன செஞ்சாலும் பாராட்டு கிடைக்கும். ஆபிஸ்ல பாஸ் குட் புக்ல இடம்பிடிப்பீங்க. ஃபேமஸ் ஆகிடுவீங்க போங்க.

♊ மிதுனம் : சுகம் 🛌

உடம்புல இருந்த அசதி எல்லாம் போய், இன்னைக்கு தெம்பா ஃபீல் பண்ணுவீங்க. நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம்.. வாழ்க்கைனா இதுதான்யா! 🍗😴

♋ கடகம் : நலம் 🥗

ஹெல்த் நல்லா இருக்கும். ஆஸ்பத்திரி செலவு இருக்காது. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”னு ஆரோக்கியமா இருப்பீங்க.

♌ சிம்மம் : பயம் 🦁😨

என்ன பாஸ், சிங்கம் பயப்படலாமா? இன்னைக்கு சின்னதா ஒரு பதட்டம் இருக்கலாம். ஒருவேளை நியூ இயர் செலவை நெனச்சு பயமா இருக்குமோ? கவலைப்படாதீங்க, எல்லாம் சரியாகிடும். தைரியமா இருங்க!

♍ கன்னி : சிந்தனை 🤔

“யோசிக்கிறாய்… நீ யோசிக்கிறாய்!” இன்னைக்கு ஃபுல்லா 2026-ல என்ன பண்ணலாம்னு பிளான் போடுவீங்க. நல்ல ஐடியாக்கள் தோன்றும் நாள். 💡

♎ துலாம் : நிறைவு 😌

மனசுக்கு பிடிச்ச விஷயங்கள் நடக்கும். “போதும்டா சாமி”னு சலிச்சுக்காம, “திருப்தியா இருக்கு”னு சந்தோஷப்படுவீங்க.

♏ விருச்சிகம் : அமைதி 🕊️

மேஷம் மாதிரி நீங்களும் இன்னைக்கு காம்  மோடு தான். தியானம், கோவில்னு மனசை அமைதியா வெச்சுப்பீங்க.

♐ தனுசு : வருத்தம் 😢

“சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்”னு சோகமா இருப்பீங்க. சின்ன சின்ன ஏமாற்றங்கள் வரலாம். பட் டோண்ட் ஒர்ரி, நாளைக்கு விடியப்போறது புது வருஷம். சியர் அப்!

♑ மகரம் : நன்மை ✅

எதை தொட்டாலும் துலங்கும். கெட்டது விலகி நல்லது நடக்கும் நாள். எக்ஸாம் ரிசல்ட்டோ, லவ் ப்ரோபோசலோ.. இன்னைக்கு ட்ரை பண்ணுங்க. 🎯

♒ கும்பம் : தனம் 💰

“காசு பணம் துட்டு மணி மணி!” இன்னைக்கு கைக்கு காசு வரும். பெண்டிங் இருந்த பணம் வசூலாகும். அக்கவுண்ட்ல பேலன்ஸ் ஏறுனா சும்மாவா? பார்ட்டி தான்! 🎉

♓ மீனம் : மகிழ்ச்சி 😄

“ஆனந்தம்.. ஆனந்தம்.. பாடும்!” குடும்பத்தோட ஜாலியா டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. சிரிப்பும் கும்மாளமுமா நாள் போகும். 👨‍👩‍👧‍👦

📜 இன்றைய பொன்மொழி

“உப்பிட்டவரை உள்ளளவும் நினை” 🍚🙏


விளக்கம்: நமக்கு சோறு போட்டவங்களை, உதவி செஞ்சவங்களை உசுரு இருக்கற வரைக்கும் மறக்க கூடாது.

🎥  “நன்றி மறப்பது நன்றன்று!”

📲 Task: 2025-ல உங்களுக்கு யாரெல்லாம் உதவி செஞ்சாங்களோ, அவங்களுக்கு மறக்காம ஒரு “Thank You” மெசேஜ் தட்டி விடுங்க.


🔚

நண்பர்களே! டிசம்பர் 31 அன்னைக்கு கார்த்திகை விரதம் வேற இருக்கு, முருகனை கும்பிட்டுட்டு, பாதுகாப்பா நியூ இயரை கொண்டாடுங்க. 🦚

🚫 முக்கிய எச்சரிக்கை:

“குடி குடியை கெடுக்கும்”னு சும்மா சொல்லல,
குடிச்சுட்டு வண்டி ஓட்டாதீங்க. 🥃❌🚲

(போலீஸ் செக்கிங் கெடுபிடியா இருக்கும். நிம்மதியா வீட்ல ஃபேமிலியோட கொண்டாடுங்க!)

🎆 அட்வான்ஸ் ஹேப்பி நியூ இயர் 2026! 🎆

இந்த நாள் குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா, மறக்காம ஷேர் பண்ணுங்க.
புதிய வருடம் புது வெளிச்சத்தை தரட்டும்! ✨

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.