🚬 “தம்” அடித்தால் இனி ‘சங்கு’ தான்!
பிப்ரவரி 1 முதல் எகிறும் விலை! 🚭💸
(ஒரு ‘புகை’ச்சல் ரிப்போர்ட்)
வணக்கம் மக்களே! “சிகரெட் உடலுக்கு கேடு”னு சினிமா தியேட்டர்ல முகேஷ் சொல்றப்பல்லாம் கேட்காத நம்ம ஆளுங்க, இனிமே அந்த விலையை கேட்டாலே சிகரெட்டை தூக்கி போட்டுட்டு ஓடிடுவாங்க போல! 🏃♂️💨
மத்திய அரசு ஒரு மிகப்பெரிய “ஆப்பு” ரெடி பண்ணிருக்கு. 🔨
😱 ரூ.18 சிகரெட் இனி ரூ.72 ஆ?
₹18
₹72?! 💥
“என்னாமா இப்படி பண்றீங்களே மா?” னு அரசாங்கத்தை பார்த்து கேட்க தோணுதுல்ல? 🤯
📊 அரசாங்க கணக்கு :
- பழைய வரி (1000 சிகரெட்டுக்கு): ₹200 – ₹735
- புதிய வரி (பிப் 1 முதல்): ₹2,050 – ₹8,500 📈
(அடேங்கப்பா! இது சாதாரண உயர்வு இல்ல… படுபாதாள உயர்வு! 📉)
🎶 சோக கீதம்:
“காசு கரியாகுது… நுரையீரல் எரியுது…
புகை விட்டுப் பார்த்தா வாழ்க்கை புரியுது! 🚬
பதினெட்டு ரூபாய் என்பது பழங்கதை ஆச்சு,
எழுபத்திரண்டு ரூபாய் என்பது புதுக்கதை ஆச்சு! 💸
பத்த வைக்கும் நெருப்பு பாக்கெட்டை சுடுதே,
புகை பிடிக்கும் ஆசை இப்போ தவிடுபொடி ஆகுதே!” 🥺🔥
📏 நீளம் முக்கியம் பிகிலு!🚬
“சைஸ் டஸ் மேட்டர்”
சிகரெட் விலையை எப்படி முடிவு பண்றாங்க தெரியுமா? அதோட நீளத்தை வச்சு தான்! அரசாங்கம் இங்கயும் “ஸ்கேல்” வச்சு அளந்துட்டாங்க. 📏
🔹 65 மி.மீ வரை :
சின்ன சைஸ். 1000 சிகரெட்டுக்கு வரி ₹2,700 – ₹3,000 உயர்வு.
விலை ஏற்றம்: ஒரு குச்சிக்கு ₹2.70 வரை!
🔸 70 – 75 மி.மீ :
மீடியம் சைஸ்.
விலை ஏற்றம்: ஒரு குச்சிக்கு ₹7 வரை!
👑 75 மி.மீ-க்கு மேல் :
இதுதான் பணக்காரங்க ஊதுறது. வரி சும்மா தாறுமாறு!
விலை ஏற்றம்: ஒரு குச்சிக்கு ₹11 வரை! 💥
🤣“ஆஹா… ஒன்னு கூட உடம்புக்கு செட் ஆகாதே!
சின்னதா குடிச்சாலும் செலவு… பெருசா குடிச்சாலும் செலவு!” 🏃♂️
🛑 “மொத்தமா சோலி முடிஞ்சுது!”
- 🍃 மெல்லும் புகையிலை : வரி 25% ➡️ 100% உயர்வு!
- 💨 ஹுக்கா: வரி 25% ➡️ 40% உயர்வு!
- 🚬 பைப் சிகரெட் : இதுதான் ஹைலைட். 60% ➡️ 325% உயர்வு! 🤯
இதை பார்த்தா…
“தம்பி… டீ இன்னும் வரல” னு கேட்டுட்டு சும்மா உக்காந்திருக்க வேண்டியது தான் போல! ☕🤐
🤔 கம்பெனிகளின் பிளான் என்ன? 🧪
அரசாங்கம் வரியை ஏத்திடுச்சு. உடனே கம்பெனிகள் ரூ.18 சிகரெட்டை ரூ.72-க்கு விக்குமா? “வாய்ப்பு இல்ல ராஜா!” 🙅♂️
ஏன்னா, ஒரேடியா விலையை ஏத்துனா, குடிக்கிறவன் எல்லாம் பீடியை பத்த வச்சிட்டு போயிடுவான். அதனால கம்பெனிகள் என்ன பண்ணும்?
- 📉 கொஞ்சம் வரியை அவங்களே ஏத்துப்பாங்க .
- 📈 விலையை கொஞ்சம் கொஞ்சமா ஏத்துவாங்க.
- 💸 வாடிக்கையாளர்களுக்கு வலி தெரியாமலேயே பர்ஸை காலி பண்ணுவாங்க. (இதுக்கு பேரு தான் “ஸ்லோ பாய்சன்”).
🎬 “நம்மள சுத்தி நடக்குறது எதுவுமே நமக்கு தெரியல…
ஆனா எல்லாம் நம்மள காலி பண்ண தான் நடக்குது!” 🤯
🏥 நல்லதுக்கு தான் சொல்றோம்!
இந்தியால 10 கோடி பேர் புகை பழக்கத்துக்கு அடிமை. WHO விதிமுறை: 75% வரியா இருக்கணும். ஆனா இந்தியால 53% தான் இருக்கு. அதை சரி பண்ண தான் இந்த அதிரடி.
(⚠️ ரிஸ்க்: மக்கள் கள்ளச்சந்தை (Black Market) பக்கம் போவாங்களா? ங்குறது தான் கேள்வி.)
🏁 பிப்ரவரி 1-ம் தேதி வரைக்கும் தான் உங்க ராஜாங்கம். அதுக்கப்புறம்…
ஆனா அது கூடவே ஜிஎஸ்டி, கலால் வரினு எல்லாம் கூட்டமா வரும்!” 🦁🔥
“புகையை விட்டுவிடு நண்பா,
இல்லையெனில், உன் பணமும் புகையாய் போகும்! 💸
உடலும் மண்ணாய் போகும்! ⚰️
பிப்ரவரி ஒன்று சொல்லும் பாடம்,
இனி புகை பிடித்தால் பெரும் நஷ்டம்!” 🚭
இந்த புது வருஷத்துலயாச்சும் அந்த பாழாப்போன பழக்கத்தை விட்டுத் தள்ளுங்க. உடம்புக்கும் நல்லது, வீட்டுக்கும் நல்லது! 👍