பட்ஜெட் 2026: 42% நிதிப் பகிர்வு அதிர்ச்சி, சரிந்த பங்குச்சந்தை, காஞ்சிப்பட்டு

நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் 2026: காஞ்சிப்பட்டு… கரடி ஆட்டம்… கலங்கிய சந்தை!

டெல்லி செங்கோட்டை – காலை 10:30 மணி

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை என்றால் பங்குச்சந்தை விடுமுறை… நாடாளுமன்றம் அமைதி பூங்கா. ஆனால், பிப்ரவரி 1, 2026 அன்று டெல்லியின் சாலைகளே பரபரப்பில் திகுதிகுத்தன. 1999-க்கு பிறகு, ஒரு ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே இரண்டாவது முறை!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் “தஹி-சீனி” (சர்க்கரை கலந்த தயிர்) சாப்பிட்டுவிட்டு, நம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்குள் நுழைகிறார். கடந்த முறை பீகார் சேலை… இம்முறை நம்ம ஊரு ‘காஞ்சிபுரம் பட்டு’!

“நெய்யப்பட்டது காஞ்சிப் பட்டுதான்…
ஆனால் அதில்
மக்கள் எதிர்பார்ப்பு ஒட்டுமா?
இல்லை
மாநில உரிமைகள் வெட்டுமா?”

இந்தக் கேள்வியோடுதான் கேமரா நாடாளுமன்றத்திற்குள் செல்கிறது. கையில் சிவப்பு நிற டேப்லெட். முகத்தில் 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் கம்பீரம்.


இந்திய பங்குச்சந்தை union budget 2026

பங்குச்சந்தையின் மரண அடி!

சினிமாவில் ஹீரோ அறிமுகமாவதற்கு முன், ஒரு பெரிய சண்டை நடக்குமே… அதுபோல, நிதியமைச்சர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மும்பை தலால் ஸ்ட்ரீட்டில் ரத்தக் களரி!

நேரம்: நண்பகல் 12:24
சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சறுக்கல். நிஃப்டி 300 புள்ளிகள் காலி. முதலீட்டாளர்கள் தலையில் துண்டு போடும் நிலைமை. காரணம் என்ன?

🚨 முக்கிய காரணம்:

தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்பார்த்த அந்த “நிதிப் பகிர்வு” குண்டை, நிதியமைச்சர் மிக நைஸாகத் தூக்கிப் போட்டார்.

⚔️ மாநிலம் vs மத்திய அரசு – அனல் பறந்த டயலாக்! ⚔️

தமிழக அரசு (முதல்வர் ஸ்டாலின்):

“மேடம்… நாங்க வரி கட்டுறோம்… நிதி ஆணையம் சொன்னபடி 41% போதாது. அதை 50% ஆக உயர்த்திக் கொடுங்க. அது எங்க உரிமை!”

மத்திய அரசு (பட்ஜெட் அறிவிப்பு):

“ஸாரி பாஸ்! நிதிப் பகிர்வு 42% ஆகவே தொடரும். ஆனால் கவலைப்படாதீங்க… மாநிலங்களுக்கு 1.4 லட்சம் கோடி ஒதுக்குறோம் (ஆனா பர்சண்டேஜ் ஏறாது!).”

முதலீட்டாளர்கள் (பங்குச்சந்தை):

“அடடா… மாநிலங்களுக்கு காசு போகலைன்னா, அங்க வளர்ச்சி இருக்காது… வளர்ச்சி இல்லைன்னா எங்க லாபம்?” – (டம்மார் என விழுந்தது சென்செக்ஸ்!)

“கேட்டது ஐம்பது…
கிடைத்ததோ நாற்பத்திரண்டு!
பங்குச்சந்தையோ…
ஆனது இரண்டு துண்டு!”


ஆறுதல் தந்த அறிவிப்புகள்

சோகமான காட்சிகளுக்கு நடுவே, கொஞ்சம் சிரிக்க வைக்கும் காமெடி டிராக் போல, சில நடுத்தர மக்களுக்கான அறிவிப்புகள் வெளியாகின.

  • 🎓 மாணவர்களுக்கு ஜாக்பாட்: வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களே… இனி உங்கள் கல்விக் கடனுக்கான வரி 5% அல்ல, வெறும் 2% தான்! (பெற்றோர்கள் நிம்மதி பெருமூச்சு!)
  • 💸 வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும் பாசம்: மகனோ மகளோ வெளிநாட்டில் இருக்கிறார்களா? அவர்களுக்கு பணம் அனுப்பும்போது பிடிக்கப்படும் வரியும் குறைப்பு.
  • ஈ.வி (EV) பிரியர்கள்: லித்தியம் பேட்டரிக்கு இறக்குமதி வரி காலி! இனி எலக்ட்ரிக் வண்டி விலை குறையும்.

ஆனால், இதையெல்லாம் தாண்டி ஒரு “சைலண்ட் கில்லர்” அறிவிப்பும் இருந்தது.

⚠️ WARNING: Fake News

வருமானம் குறித்து தவறான தகவல் கொடுத்தால்…
100% அபராதம்!

(வாட்ஸ்அப் ஆடிட்டர்களுக்கு இது ஒரு செக் மேட்!)

மேக் இன் இந்தியா 2.0 – உலகை அதிரவைக்கும் திட்டம்!

ஆடை உலகம் – ‘ஃபைபர் டு ஃபேஷன்’

பங்குச்சந்தை ஒரு பக்கம் சரிந்தாலும், இந்தியாவின் பாரம்பரியமான ஒரு துறைக்கு உயிர் கொடுக்க நிதியமைச்சர் ஒரு மெகா பிளானை கையில் எடுத்தார். அதுதான் “Mega Textile Parks”.

“சீனா + 1”  – இதுதான் தாரக மந்திரம். உலகம் சீனாவை விட்டு வெளியேற நினைக்கும் போது, அந்த ஆர்டர்களை அள்ளத் துடிக்கிறது இந்தியா. வியட்நாம் மற்றும் வங்கதேசத்துக்கு டஃப் கொடுக்கப் போகிறது நம் ஊரு பருத்தி!

சாம்ர்த்த் 2.0  மற்றும் டெக்-ஈக்கோ  முன்னெடுப்புகள் மூலம், சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத ஆடை உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கோகுல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ், கே.பி.ஆர் மில், ராமாயண்ட் போன்ற ஜாம்பவான்கள் இனி உலக சந்தையில் இன்னும் வேகமாக ஓடுவார்கள்!

“நூலினை எடுத்து…
வாலினை ஒடிப்போம்!
சீனாவின் சந்தையை
இந்தியாவிற்குத் திருப்புவோம்!”


செமிகண்டக்டர் 2.0

செமிகண்டக்டர் மிஷன் 2.0

சில்லுகளின்றி  உலகம் இயங்காது! பட்ஜெட்டில் செமிகண்டக்டர் 2.0 திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? ரூ. 40,000 கோடி!

சி.ஜி பவர்  போன்ற பங்குகள் 6% வரை எகிறியது இந்த அறிவிப்பால்தான். இந்தியாவின் சிப் கனவு நனவாகப் போகிறது. இது வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல, இந்தியாவின் இறையாண்மை!

துறை ஒதுக்கீடு (கோடிகளில்)
செமிகண்டக்டர் 2.0 40,000
மின்னணு 40,000
பயோ ஃபார்மா சக்தி 10,000
சிறு, குறு தொழில் (MSME) 10,000

“ஷி” (SHE) – அவள் விஸ்வரூபம்

பெண்களைப் போற்றும் விதமாக ஒரு புதிய திட்டம் அறிமுகம்: “ஷி” (SHE). இதன் மூலம் பெண் தொழில்முனைவோருக்குத் தனி அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

முக்கிய அம்சம்: மகளிர் வழிநடத்தும் நிறுவனங்களை ஊக்குவிக்க “SHE-Mart” சில்லறை விற்பனை கடைகள் நாடு முழுவதும் அமைக்கப்படும். வீட்டின் நிர்வாகி மட்டுமல்ல, நாட்டின் நிர்வாகியாகவும் பெண்கள் மாறுவார்கள்!

“அடுப்பூதும் பெண்களுக்கு
அறிவுத் தொழில் ஏன் என்றார்கள்…
இன்று
நாடாளும் பெண்ணே
வணிகப் பாதை அமைக்கிறாள்!”

மேலும், கல்வி பயிலும் மாணவிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் விடுதிகள் கட்டப்படும் என்ற அறிவிப்பு, கல்விப் புரட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

தமிழ் மண்ணின் பெருமையும்… புல்லட் ரயில் கனவும்!

ஆதிச்சநல்லூர்
ஆதிச்சநல்லூர் முதல் பழவேற்காடு வரை!

பட்ஜெட்டின் ஒரு முக்கிய ஹைலைட் தமிழ்நாட்டின் தொன்மைக்குக் கிடைத்த அங்கீகாரம். ஆதிச்சநல்லூரில் கலாச்சார செழுமையை விளக்கும் வகையில் ஒரு மாபெரும் மையம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • சுற்றுலாத் துறை: பழவேற்காடு ஏரியில் பறவைகள் நோக்கும் சுற்றுலாத் தளம் மேம்படுத்தப்படும்.
  • கனிம ஆய்வு: தமிழ்நாடு, கேரளா மற்றும் ஒடிசாவில் அரிய வகை கனிமங்களை  ஆய்வு செய்யப் புதிய மையங்கள்.
  • ஆன்மீகச் சுற்றுலா: பொதிகை மலையில் ட்ரக்கிங்  வசதிகள் மேம்பாடு.

மின்னல் வேகப் பயணம் – 7 அதிவேக ரயில் தடங்கள்!

“நேரம் தான் காசு”  என்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. நாடு முழுவதும் 7 அதிவேக ரயில் தடங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் மிக முக்கியமானது: சென்னை – பெங்களூரு அதிவேக ரயில் பாதை!

மும்பை–பூனே, ஹைதராபாத்–பெங்களூரு வரிசையில் சென்னையும் பெங்களூருவும் இணையப்போகும் வேகம், தென்னிந்தியப் பொருளாதாரத்தையே புரட்டிப் போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தண்டவாளத் தடங்களில்
தாமதங்கள் இனி இல்லை!
காற்றைக் கிழிக்கும் வேகத்தில்
கனவுகள் நனவாகும் நாளை!”


பட்ஜெட் 2026 – ஒரு பார்வை

பட்ஜெட் உரையின் முடிவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டது போல, இது “வளர்ச்சி, ஒழுக்கம் மற்றும் எதிர்காலம்” நோக்கிய பயணம். 2026-27 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 4.3 ஆக இருக்கும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பலம்: தொழில்நுட்பம் (Semiconductor 2.0), பெண்கள் பாதுகாப்பு (SHE), நவீன உள்கட்டமைப்பு.

பலவீனம்: மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் (42%) எந்த மாற்றமும் இல்லை. தமிழக அரசின் 50% கோரிக்கை நிராகரிக்கப்பட்டது ஒரு வருத்தமான திருப்பம்.

முடிவு: முதலீட்டாளர்களுக்கு ஒரு “ரோலர் கோஸ்டர்” ரைடு; மாணவர்களுக்கும் பெண்களுக்கும் ஒரு “வெற்றிப் பாதை”!

“எண்கள் சொல்லும் கதையல்ல பட்ஜெட்…
எண்ணங்கள் சொல்லும் எதிர்காலம்!
சிலருக்குப் புன்னகை… சிலருக்குப் பாடம்…
இந்தியாவின் வளர்ச்சிக்கு இதுவே ஒரு ஆரம்!”

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.