காயத்தில் வீழ்ந்த கங்காரு படை
உலகக்கோப்பையில் ஆஸிக்கு அடுத்த இடி!
⚡அதிர்ச்சி அலைகள்
இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாகத் தொடங்கவிருக்கும் 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பை திருவிழா… மைதானங்கள் தயாராக இருக்கின்றன. ஆனால், நடப்பு சாம்பியன்களில் ஒருவரான ஆஸ்திரேலிய அணியின் முகாமிலோ இப்போது மயான அமைதி!
எதிரணி பேட்ஸ்மேன்களை தனது துல்லியமான யார்க்கர்களாலும், பவுன்சர்களாலும் மிரள வைக்கும் அந்த வேகப்பந்து வீச்சு அசுரன், ஜோஷ் ஹேசில்வுட் , உலகக்கோப்பைத் தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டார் என்ற செய்தி, கிரிக்கெட் உலகையே உலுக்கியுள்ளது.

களம் காணும் முன்பே சாய்ந்தது தூண், கலக்கத்தில் ஆழ்ந்தது கங்காரு படை!” 📉
📋மருத்துவ அறிக்கை
ஆஸ்திரேலியத் தேர்வுக்குழுத் தலைவர் டோனி டோட்மைட் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிகிறது.
காயம்: ‘அக்கில்லஸ்’ பிரச்சனை.
நிலை: அக்டோபர் 2025 முதல் பந்துவீசவில்லை.
🛑இரட்டைத் தாக்குதல்
ஏற்கனவே அணியின் முதுகெலும்பான கேப்டன் பேட் கம்மின்ஸ் முதுகு வலி காரணமாக இல்லை. இப்போது ஹேசில்வுட்டின் விலகல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அமைந்துள்ளது.
“கம்மின்ஸ் இல்லாத களம்… இப்போது ஹேசில்வுட் இல்லாத தடம்!
வேகங்கள் குறையலாம் – ஆனால், விவேகங்கள் குறையுமா?”
❓மாற்று வீரர் யார்?
“உடனடியாக மாற்று வீரரை அறிவிக்கப் போவதில்லை!” – இதுதான் ஆஸி நிர்வாகத்தின் அதிரடி முடிவு. போட்டியின் போக்கை வைத்தே முடிவு எடுக்கப்படும்.
🦁 நம்பிக்கை நாயகன்
கேப்டன் மிட்செல் மார்ஷ் உறுதியாக இருக்கிறார். “எங்களிடம் ஆழமான மாற்று வீரர்கள் (Bench Strength) உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்கள் மேத்யூ குன்னெமன் மற்றும் ஆடம் ஜம்பா கை கொடுப்பார்கள்!”
🔥 களம் தயார்…
கொழும்பில் முதல் போட்டி. களம் சுழலுக்குச் சாதகமாக இருக்கலாம். ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு பலவீனமடைந்திருக்கலாம். ஆனால், அவர்கள் காயப்பட்ட சிங்கங்கள்!