அமெரிக்கா, ரஷ்யா நடுவே இந்தியாவின் ராஜதந்திர ஆட்டம்

ட்ரம்ப் டீல், ரஷ்யாவின் கூலான பதில்: அமெரிக்கா, ரஷ்யா நடுவே இந்தியாவின் ராஜதந்திர ஆட்டம்

ட்ரம்ப் போட்ட கணக்கு… ரஷ்யாவின் ‘கூலான’ பதில்!

“எங்களை மிரட்ட முடியாது” – இந்தியாவின் ராஜதந்திர ஆட்டம்!

களம்
வாஷிங்டன் ➞ மாஸ்கோ (வழியாக டெல்லி)
முக்கியப் புள்ளிகள்
மோடி – ட்ரம்ப் – புதின்

உலக அரசியலில் இப்போது இந்தியா தான் ‘சென்டர் ஆஃப் அட்ராக்ஷன்’. அமெரிக்கா ஒரு பக்கம் இழுக்க, ரஷ்யா மறுபக்கம் நிற்க… நடுவில் நின்று கொண்டு, “என் வழி… தனி வழி” என்று கெத்து காட்டுகிறது இந்தியா. சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வீசிய ஒரு ‘கூக்ளி’ பந்தும், அதற்கு ரஷ்யா கொடுத்த ‘கூலான’ பதிலும் தான் இப்போது சர்வதேச மீடியாக்களின் ஹாட் டாபிக்.

“நண்பன் என்று யாரையும் நம்புவதில்லை,
பகைவன் என்று யாரையும் ஒதுக்குவதில்லை!
லாபம் எங்கே இருக்கிறதோ…
அங்கே திரும்பும் தேசத்தின் திசை!
இது மிரட்டலுக்குப் பணியாத பூமி,
ராஜதந்திரத்தின் புதிய சாமி!”

ட்ரம்ப் வீசிய ‘டீல்’

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் ஒரு அதிரடித் தகவலை வெளியிட்டார். “பிரதமர் மோடி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக வெனிசுலாவிலிருந்து வாங்க ஒப்புக்கொண்டார்” என்பதுதான் அந்தத் தகவல். இதற்குப் பரிசாகத்தான், இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 18% ஆகக் குறைத்தாராம் ட்ரம்ப். அதாவது, “ரஷ்யாவைத் கட் பண்ணு… பிசினஸை ஸ்டார்ட் பண்ணு” என்பதுதான் அமெரிக்காவின் கணக்கு.

ரஷ்யாவின் ‘கூல்’ ரியாக்ஷன்

இப்படி ஒரு செய்தி வந்தால், வழக்கமாக ஒரு நாடு பதறும். ஆனால் ரஷ்யா? மிகவும் நிதானமாக, “இதெல்லாம் எங்களுக்குப் புதுசு இல்லப்பா” என்பது போல ரியாக்ட் செய்துள்ளது. ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் சொன்ன பதில் மிகவும் பக்குவமானது:

“இந்தியா சுதந்திரமான நாடு. தங்களுக்குத் தேவையானதை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்க அவர்களுக்கு உரிமை உண்டு. இந்தியா எப்போதும் ஒரே இடத்தில் வாங்குவதில்லை. அதனால் இதில் எங்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. இது மாஸ்கோவிற்கு எதிரான நடவடிக்கையும் அல்ல”.

இருப்பினும், “எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து எங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் வரவில்லை” என்று ஒரு ‘முற்றுப்புள்ளி’ வைத்தார்.

நடைமுறைச் சிக்கல்

பேசுவதற்கு வேண்டுமானால் “ரஷ்யாவை நிறுத்துகிறோம்” என்று சொல்லலாம். ஆனால் கள நிலவரம் வேறு. இந்தியா தனது கச்சா எண்ணெய்த் தேவையில் 88% இறக்குமதி செய்கிறது. 2021-ல் வெறும் 0.2% ஆக இருந்த ரஷ்ய எண்ணெய் இறக்குமதி, 2022 உக்ரைன் போருக்குப் பிறகு ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ரஷ்ய கச்சா எண்ணெயை முழுமையாக மாற்றுவது இந்தியச் சுத்திகரிப்பு நிலையங்களுக்குச் சாத்தியமே இல்லாத ஒன்று என்று எரிசக்தி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி மாதத்தில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி நாள் ஒன்றுக்கு 1.1 மில்லியன் பீப்பாய்களாகச் சற்று குறைந்துள்ளது (முந்தைய மாதம் 1.21 மில்லியன்).

🔥 ஃப்ளாஷ்பேக் – அஜித் டோவலின் கர்ஜனை!

இந்தக் கதையின் உண்மையான ஹீரோயிசம் எங்கே இருக்கிறது தெரியுமா? சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தில்தான். 2025 செப்டம்பர் மாதம்… இந்தியா – அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை சூடுபிடித்திருந்த நேரம். அப்போது இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், தற்போதைய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவிடம் சொன்னதாகப் ப்ளூம்பெர்க்  வெளியிட்ட செய்தி சிலிர்க்க வைக்கும் ரகம்:

“அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது சகாக்களால் இந்தியாவை மிரட்ட முடியாது. நாங்கள் கடந்த காலங்களில் பல அமெரிக்க மிரட்டல்களைப் பார்த்தவர்கள். தேவைப்பட்டால், வர்த்தக ஒப்பந்தத்திற்காக ட்ரம்பின் பதவிக்காலம் முடியும் வரை காத்திருக்கவும் இந்தியா தயாராக இருக்கிறது”.

என்று டோவல் முகத்தில் அடித்தாற்போலக் கூறியிருந்தார். “எங்களுக்குத் தேவை மரியாதை, மிரட்டல் அல்ல” என்பதை இந்தியா அன்றே தெளிவுபடுத்திவிட்டது.

 இந்தியா யாருடைய பக்கம்?

இந்தியா அமெரிக்காவின் பக்கமும் இல்லை, ரஷ்யாவின் பக்கமும் இல்லை; இந்தியா இந்தியாவின் பக்கம்தான் இருக்கிறது! வெனிசுலாவிலிருந்து எண்ணெய் வாங்குவது ஒரு மாற்று ஏற்பாடே தவிர, ரஷ்யாவை முழுமையாகக் கழட்டி விடுவது அல்ல.

“ஆட்டம் காண்பது எண்ணெய் விலை மட்டுமல்ல… வல்லரசுகளின் ஈகோவும் தான்!”

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.