UN vs USA: சட்டத்தின் ஆட்சியா? வல்லரசுகளின் ஆட்சியா?

UN vs USA 2026

“சட்டம் முக்கியமா? இல்ல சக்தி முக்கியமா?” – அமெரிக்காவை பார்த்து நெஞ்சை நிமிர்த்திய ஐ.நா தலைவர்!

உலக அரசியல் மேடையில இப்போ ஒரு பெரிய “கிளாஷ்” போயிட்டு இருக்கு. ஒரு பக்கம் “உலகத்துக்கே நாங்க தான் தாதா”னு அமெரிக்கா முறுக்கிட்டு நிக்குது. இன்னொரு பக்கம், “தம்பி… சட்டம் எல்லாருக்கும் ஒண்ணுதான்” அப்படின்னு ஐ.நா சபை தலைவர் அன்டோனியோ குட்டரெஸ்  எச்சரிக்கை மணி அடிச்சிருக்காரு.


🎬”நான்தான் சட்டம்” – அமெரிக்காவின் ஆட்டம்

வெனிசுலா அதிபரைக் கடத்தினது, கிரீன்லாந்தை வளைக்கப் பார்க்குறதுனு அமெரிக்கா பண்றதெல்லாம் “ரவுடிசம்” லெவல்ல இருக்கு. இதைப் பார்த்துட்டு குட்டரெஸ் சும்மா இருக்க முடியுமா?

அவர் சொல்றது என்னன்னா:

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மைனு நாங்க சொல்றோம். ஆனா அமெரிக்காவோ, ‘நான் வச்சது தான் சட்டம்… என் வழி தனி வழி’னு சொல்லுது!”

சர்வதேச சட்டங்கள்  எல்லாம் குப்பைத் தொட்டிக்கு போயிருச்சாம். இப்போ நடக்குறது “சட்டத்தின் ஆட்சி”  இல்லையாம், “ஆட்சியின் சட்டம்”  தானாம்!

🧠 குட்டரெஸ் மைண்ட் வாய்ஸ்:

“பணம் இருந்தா படை வீரன் மட்டும் இல்ல…
பஞ்சாயத்து தலைவனும் பயப்படுறான்!”

🐢1945 மாடல் வண்டி… 2026 ரோடு!

ஐ.நா சபை ஆரம்பிச்சது 1945-ல. அப்போ இருந்த செட்டப் வேற. இப்போ 2026-ல பிரச்சனைகள் வேற. ஆனா, ஐ.நா சபையோட பாதுகாப்பு கவுன்சில்  இன்னும் அந்த பழைய பஞ்சாங்கத்தை வச்சுக்கிட்டுத் தான் ஓடிட்டு இருக்கு.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து – இந்த அஞ்சு நாடுகிட்ட மட்டும் தான் “வீட்டோ”  பவர் இருக்கு. இவங்க நினைச்சா எதை வேணாலும் தடுக்கலாம்.

📢 குட்டரெஸ் வேதனை: “உக்ரைன் போர்லயும் சரி, காசா போர்லயும் சரி… இந்த பெரிய நாடுகள் அவங்க சுயநலத்துக்காக வீட்டோ பவரை யூஸ் பண்ணி, அமைதிக்கு ஆப்பு வச்சிட்டாங்க!”

🔒 கவிதை: 🔒

ஐந்து பேர் கையில் உலகத்தின் சாவி,
பூட்டி வைப்பதோ ஏழையின் ஆவி!
நீதி தேவதை கண்ணைக் கட்டவில்லை,
வல்லரசு நாடுகள் கட்டிய வேலி!


🥊ட்ரம்ப் vs ஐ.நா

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சும்மாவே ஐ.நாவை வச்சு செய்வாரு. “ஏழு போர்களை நான் தனி ஆளா நிப்பாட்டினேன்… இந்த ஐ.நா சபை வேடிக்கை தான் பாக்குது”னு ட்ரம்ப் ஒரு டயலாக் விட்டாரு.

அதுக்கு குட்டரெஸ் கொடுத்த ரிப்ளை மரண மாஸ்:

“நாங்க களத்துல இறங்க ரெடி தான் பாஸ். ஆனா காசாவுல இஸ்ரேல் எங்களை உள்ளயே விடல. கேட் வாசல்ல பூட்டை போட்டுட்டு, ‘நீ உள்ள வரலையே’னு கேட்டா என்ன நியாயம்?”

உணவு கொடுக்க நாங்க ரெடி, ஆனா பெரிய இடத்து பிரஷர் எங்களை முடக்கிப் போட்டுடுச்சுனு ஓப்பனா உடைச்சுப் பேசிட்டாரு.

⚠️இறுதிக்கட்ட எச்சரிக்கை

குட்டரெஸ் பதவிக்காலம் இந்த வருஷத்தோட முடியுது. போறப்போக்கில அவர் உலகத்துக்கு ஒரு பாடம் சொல்லிட்டு போறாரு.

“சக்தி வாய்ந்தவங்களை பார்த்து பயந்து ஒதுங்கிப் போனா… இந்த உலகம் உருப்படாது. தட்டிக் கேட்க ஆள் இல்லனா, தப்பு பண்றவன் தலையில ஏறி உட்கார்ந்துருவான்!”

விஜய் பட பாணியில் சொல்லணும்னா:

“அமைதியா இருக்கிறவன் கோழை இல்ல…
ஆனா அநியாயத்தைப் பார்த்து அமைதியா இருந்தா,
அவனுக்குப் பேரு மனுஷனே இல்ல!” 🔥

வெனிசுலாவில் ஆட்சி மாற்றம், ஈரானில் போராட்டம், கிரீன்லாந்து மிரட்டல்னு உலகம் ஒரு “Chaos”  மோட்ல இருக்கு. “1945-ல கண்டுபிடிச்ச மருந்து, 2026-ல வந்த நோய்க்கு வேலை செய்யாது”னு சொல்லி, ஐ.நா சபையை மாற்றி அமைக்கணும்னு முழக்கமிட்டிருக்காரு.


🕊️சட்டம் மேலா? சக்தி மேலா?

ஐ.நா சபைங்கிறது வெறும் கட்டிடம் இல்ல, அது ஒரு நம்பிக்கை. ஆனா அமெரிக்கா போன்ற வல்லரசுகள் அந்த நம்பிக்கையை உடைச்சுட்டு இருக்காங்க.

குட்டரெஸ் சொல்றது ஒண்ணே ஒண்ணு தான்:

அதிகாரம் என்பது மிரட்டுவதற்கு அல்ல, அரவணைப்பதற்கு!
சட்டம் என்பது வளைப்பதற்கு அல்ல, வழி நடத்துவதற்கு!

இனிமேலாவது வல்லரசுகள் திருந்துமா? இல்ல “திரும்பவும் முதல்ல இருந்தா?”னு ட்ரம்ப் ஆரம்பிப்பாரா? 2026 ஒரு முக்கியமான வருஷமா இருக்கப் போகுது! 🌍

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.