ராஜ்கோட்டில் Ro-Ko தர்பார்! | India vs New Zealand ODI

India vs New Zealand ODI

🎬 ராஜ்கோட்டில் ‘ரோ-கோ’ தர்பார்! 👑

ஃபீவர் பீக் லெவல்ல இருக்கு! 🌡️🔥

  • 🏟️ இடம்: நிரஞ்சன் ஷா ஸ்டேடியம், ராஜ்கோட் (ரன் மெஷின் ஃபேக்டரி! 🏏)
  • நேரம்: ஜனவரி 14, 2026, மதியம் 1:30 மணி (ஆட்டத்துக்கு ரெடி! ⏳)

மச்சி, ரெடியா இருங்க! நம்ம ரோ-கோ (Ro-Ko) கேரவன் இப்போ ராஜ்கோட் வந்து இறங்கிருச்சு. 🚌 டிக்கெட்லாம் வித்துத் தீந்து, அரங்கம் ஹவுஸ்ஃபுல் ஆகப்போகுது.

ஏன்னு கேக்குறீங்களா? ஏன்னா நம்ம சீனியர் சிங்கங்கள் ரெண்டும், “வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் இன்னும் போகல!” (படையப்பா ஸ்டைல்! 😎) அப்டின்னு நிரூபிச்சிட்டு இருக்காங்க.

🔥ரோஹித் & கோலி 🦁

மார்க்கெட்டிங், டிஆர்பி எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், இவங்க ரெண்டு பேர பாக்குறதுக்காகவே கூட்டம் கூடுது. 🤩

👑 கிங் கோலி:

மனுஷன் வேற லெவல் ஃபார்ம்ல இருக்காரு. பரோடால செஞ்சுரி ஜஸ்ட் மிஸ், ஆனா ஃப்ளோ சும்மா ‘மெர்சல்’ ஆக இருந்துச்சு. 💥

🚀 ஹிட்மேன் ரோஹித்:

“ரோஹித் ஸ்லோ ஆயிட்டாரோ?” அப்படின்னு டவுட் பட்டவங்களுக்கு, போன மேட்ச்ல நியூசிலாந்து பவுலர் ஜேமிசனை இறங்கி போய் அடிச்சப்பவே தெரிஞ்சிருக்கும் – “நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!” (கபாலி ஸ்டைல்! 🕶️).

29 பால்ல 26 ரன் தான், ஆனா அதோட இம்பேக்ட் பெருசு. மனுஷன் செம்ம ஃபிட்டா, வெறியா இருக்காரு. 💪

🎭 டீம் செலக்ஷன் ட்விஸ்ட் 🎞️

இப்போ கதைல ஒரு சின்ன ட்விஸ்ட். போன மேட்ச்ல ஏன் நிதிஷ் குமார் ரெட்டிய பெஞ்ச்ல உக்கார வச்சாங்க? 🤔 2027 வேர்ல்ட் கப்புக்கு ஹர்திக் பாண்டியா ஃபிட்டா வருவாருன்னு குறி பாத்து சொல்ல முடியுமா என்ன? லாஜிக்கே இல்லாம நிதிஷை ஓரங்கட்டுனாங்க.

  • வாஷிங்டன் சுந்தர் (அவுட்): நம்ம தமிழ்நாட்டு பையன் காயத்தால வெளில போயிட்டாரு. 🤕
  • ⚠️ ஆயுஷ் பதோனி (இன்): சுந்தருக்கு பதிலா புதுசா டீம்ல வந்திருக்காரு, ஆனா வாய்ப்பு கிடைக்கிறது கஷ்டம் தான்.
  • நிதிஷ் ரெட்டி (என்ட்ரி): சுந்தர் இல்லாததால, நிதிஷ் இன்னைக்கு டீம்குள்ள வர்றது உறுதி.
    “வரல… வரலனு நெனச்சியா.. வந்துட்டேன்னு சொல்லு” ரேஞ்சுக்கு என்ட்ரி கொடுப்பார்னு எதிர்பார்க்கலாம்! 💥🏏

😈 நியூசிலாந்து (சைலண்ட் கில்லர்ஸ்)

எதிரணி என்னதான் ‘செகண்ட் ஸ்ட்ரிங்’ டீமா இருந்தாலும், அவங்கள சாதாரணமா எடை போட முடியாது. ⚖️ கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையில பரோடால நம்மள பயமுறுத்திட்டாங்க.

“புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” 🐅 – அவங்க எப்ப வேணாலும் திருப்பியடிப்பாங்க. ⚠️

📊 பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்

  • 🏟️ மைதானம்: ராஜ்கோட் பிட்ச் பத்தி சொல்லவே வேணாம், அங்க “ரன் மழை” தான் பொழியும்! 🌧️🏏
  • 📈 ஸ்கோர்: இங்கே ஆவரேஜ் ஸ்கோரே 322 ரன். சோ, இன்னைக்கு பேட்ஸ்மேன்களுக்கு கொண்டாட்டம் தான். 🎉
  • 🏰 வரலாறு: இந்தியாவுல இதுவரைக்கும் நியூசிலாந்து ஒரு ஒருநாள் தொடரை கூட ஜெயிச்சதில்ல. கோட்டை நம்ம கிட்ட தான்! 🇮🇳💪

🌟 நட்சத்திரப் பட்டாளம்

🇮🇳 டீம் இந்தியா (நம்ம பசங்க):

சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா (லோக்கல் பாய்! 🦁), நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

🇳🇿 நியூசிலாந்து:

டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், வில் யங், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மிட்செல் ஹே, மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஜக்கரி ஃபௌல்க்ஸ், கிறிஸ்டியன் கிளார்க், கைல் ஜேமிசன், ஆதித்யா அசோக்.

🎥

இந்தியா 1-0 ன்னு லீடிங்ல இருக்கு. இன்னைக்கு ஜெயிச்சா சீரிஸ் நம்ம பாக்கெட்ல! 🏆 வெடி வெடிக்க போது… ரோ-கோ ஷோவ பாக்க ரெடியா இருங்க!

“தலைவா… ஸ்டார்ட் கேமரா…
ஆக்‌ஷன்! 🏏🍿🎬”

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.