நாங்க நடிகர்கள் மாதிரி நடிக்கிறோம் – வங்கதேச கேப்டன் நஸ்முல் ஹுசைன் ஓபன் டாக்

Bangladesh Cricket Crisis

🎭 “நாங்க கிரிக்கெட் பிளேயர்ஸ் இல்ல…
நடிகர்கள்!” 😢

வங்கதேச கேப்டன் நஸ்முல் ஹுசைன் ஓபன் டாக்! 🎙️
உலகக்கோப்பை கனவில் விழுந்த இடி! 🇧🇩💔

“வணக்கம் மச்சிஸ்!” 👋

கிரிக்கெட்னா சும்மா பேட் பிடிச்சு சுத்துறது இல்ல, அது ஒரு எமோஷன்! ❤️ ஆனா இப்போ வங்கதேச கிரிக்கெட் டீம் நிலைமையைப் பார்த்தா, “பாவம் யா” னு சொல்லத் தோணுது. 😞

T20 உலகக்கோப்பை நெருங்கிட்டு இருக்கு. 🏆 ஆனா அந்த அணி வீரர்களுக்குப் பிராக்டிஸ் பண்றத விட, “தூக்கம் வராம தவிக்கிறது” தான் வேலையா போச்சு. 😴🚫

❓ ஏன்?

ஏன்னா, “இந்தியாவுல மேட்ச் நடந்தா நாங்க வர மாட்டோம்”னு வங்கதேச போர்டு (BCB) போர்க்கொடி தூக்கிருக்கு. 🇮🇳❌ இதனால பிளேயர்ஸ் ரொம்ப அப்செட். இது பத்தாதுனு, முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் மேல ஒரு பழியை வேற போட்டுட்டாங்க.

இதையெல்லாம் பார்த்துட்டுப் பொறுக்க முடியாத டெஸ்ட் கேப்டன் நஸ்முல் ஹுசைன், நேத்து பிரஸ் மீட்ல உடைஞ்சு பேசிட்டாரு. 🎙️💔

“நாங்க சும்மா நடிக்கிறோம் பாஸ்… உள்ளுக்குள்ள அழுதுக்கிட்டே வெளிய சிரிக்கிறோம்!” னு அவர் சொன்னது, கிரிக்கெட் உலகத்தையே உலுக்கியிருக்கு. 🌍

வாங்க, இந்த சோகக் கதையை சீன் பை சீனா  பார்ப்போம்! 👇

🎭 “முகம் மூடி கள்வர்கள்!” 😶

உலகக்கோப்பைக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு. ⏳ ஆனா டீம்ல ஒரு பயங்கரமான அமைதி. 🤫

🗣️ நஸ்முல் ஹுசைன் வாக்குமூலம்:

“நாங்க எப்போ உலகக்கோப்பைக்கு போனாலும், அதுக்கு முன்னாடி ஏதாவது ஒரு பிரச்சனை வந்துடுது. இது எனக்கு மூணாவது உலகக்கோப்பை. இது பிளேயர்ஸை ரொம்ப பாதிக்குது.” 📉

அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை தான் ஹைலைட்: 👇

“இப்போ நாங்க எப்படி இருக்கோம்னா, எதுவுமே நடக்காத மாதிரி நடிக்கிறோம். 🎭 நாங்க புரொபஷனல்னு காட்டிக்கிறோம். ஆனா உங்களுக்கே தெரியும்… நாங்க நடிக்கிறோம்னு! இது ஈஸி இல்ல!” 😓

🎥 “நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும்… 💔

ஆனா வெளிய சிரிச்சுக்கிட்டே நடிக்கிறேன் பாத்தியா… 🙂
அதுதான் கலை!” 😢👏

🎶 

“வேஷம்… எல்லாம் வேஷம்… 🎭
இந்த உலகம் ஒரு நாடக மேடை… 🌍
நான் ஆடுகிறேன் ஒரு பொம்மலாட்டம்!” 🧸

🤕மன உளைச்சல் மன்னர்கள்! 🧠💨

பிளேயர்ஸ் எல்லாரும் “மெண்டலி டிரெயின்ட்” ஆகி இருக்காங்களாம். 😓 அதாவது மூளையே வேலை செய்யாத அளவுக்கு டயர்ட்.

  • 🤔 குழப்பம்: “நாங்க இந்தியா போவோமா? போக மாட்டோமா?”
  • 🛡️ பயம்: “பாதுகாப்பு இருக்குமா?”
🗣️ நஸ்முல் ஆதங்கம்:

“எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும், அதை ஒதுக்கி வச்சுட்டு டீமுக்காக ஆடணும்னு நினைக்கிறோம். ஆனா சில விஷயங்கள் எங்க கையில இல்ல . சும்மா நடிக்குறது கூட இப்போ கஷ்டமா இருக்கு!” 😞

🎥

பைத்தியம் பிடிச்ச மாதிரி கத்தும் வங்கதேச பிளேயர்ஸ்:

“ஏன்டா எங்களை இப்படி பண்றீங்க? 😫
நிம்மதியா விளையாட விடுங்கடா!” 😠💥

🐍  “இந்திய ஏஜென்ட்” 🇮🇳

குரூரமான அரசியல்! 😈

இங்கதான் கதையில ஒரு வில்லன் வராரு. வங்கதேச கிரிக்கெட் போர்டு  டைரக்டர் எம். நஸ்முல் இஸ்லாம். 🤵

முன்னாள் கேப்டன் தமிம் இக்பால், “அரசியலை விடுங்க, கிரிக்கெட்டை பாருங்க”னு சொன்னதுக்கு, இந்த டைரக்டர் என்ன சொன்னாரு தெரியுமா?

“தமிம் இக்பால் ஒரு இந்திய ஏஜென்ட்!” 🇮🇳🐍

இதைக்கேட்டதும் டெஸ்ட் கேப்டன் நஸ்முல் ஹுசைனுக்கு சுர்ருனு கோவம் வந்துருச்சு. 😡

“ரொம்ப வருத்தமா இருக்கு (Very Sad). தமிம் பாய் எங்களை மாதிரி பசங்களுக்கு ரோல் மாடல். அவரைப் போய் இப்படி அசிங்கப்படுத்துறீங்களே?” 💔

🎥

தமிம் இக்பாலுக்காக நஸ்முல் பேசுறது:

“மானஸ்தன்டா… அவன் ஒரு மானஸ்தன்! 🦁
அவன போயி…
கூலிக்கு மாரடிக்கிறவன்னு சொல்லிட்டீங்களே!” 🔥😠

🛡️பாதுகாவலனா? துரோகியா? 🗡️

நஸ்முல் ஹுசைன் கிரிக்கெட் போர்டை பார்த்து ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க… அது சும்மா சப்புனு அறஞ்ச மாதிரி இருந்துச்சு. 👋💥

🗣️ நஸ்முல் ஆவேசம்:

“கிரிக்கெட் போர்டு எங்களுக்கு ஒரு பாதுகாவலன் மாதிரி இருக்கணும். பெத்தவங்க பிள்ளைகளைத் திட்டணும்னா வீட்டுக்குள்ள வச்சுத் திட்டணும். அதை விட்டுட்டு, ஊர் உலகம் முன்னாடி வச்சு அசிங்கப்படுத்தக் கூடாது. இதை ஒரு பிளேயரா நான் வன்மையா கண்டிக்கிறேன்!” 🚫

🎶

“சிங்கப்பெண்ணே… (இல்ல சிங்க மகனே)… 🦁
கூண்டிலடைக்க நினைக்கும்…
ஒரு கூட்டம் இங்கு இருக்கு!” 🕸️😠

வீரர்களுக்கு மரியாதை இல்லனா, அந்த விளையாட்டுல எப்படி வெற்றி கிடைக்கும்? 🤔

📜Pain of a Player 🏏

“மைதானம் எங்களை அழைக்கிறது, 🏟️
அரசியல் எங்களைத் தடுக்கிறது! ✋
நாட்டிற்காக ஆட வந்தோம்,
இன்று துரோகி பட்டம் சுமக்கிறோம்! 😞

சிரிப்பு என்பது முகமூடி, 🎭
கண்ணீர் என்பது நிஜவாடி! 😢
பாதுகாவலன் என்று நம்பினோம்,
இன்று அவனிடமே மிதிபட நின்றோம்!” 🇧🇩💔

🏁 வீரர்களா? அரசியல் பலியா?⚖️

உலகக்கோப்பை கனவு ஒரு பக்கம்… உள்நாட்டு அரசியல் ஒரு பக்கம். இதுக்கு நடுவுல சிக்கித் தவிக்கிற இந்த 15 வீரர்களை நினைச்சா பாவமா இருக்கு. 🥀

நஸ்முல் ஹுசைன் சொன்னது போல, அவங்க இப்போ கிரிக்கெட் விளையாடல… ஒரு பெரிய நாடகத்துல நடிச்சுக்கிட்டு இருக்காங்க. 🎬

“மனசு சரியில்லாதப்ப ஆடுனா, மேட்ச் எப்படி ஜெயிப்பாங்க?” 🤔🏆
🎥 

“நம்மள நம்ம ஆளுங்க தான்யா ஏமாத்துறாங்க! 😡
எதிரி கூட நேருக்கு நேர் மோதிடலாம்… ⚔️
ஆனா கூட இருந்தே குழி பறிக்கிறவங்கள…
என்ன பண்றது?” 💔🔪

“வங்கதேச அணியின் நிலைமை மாறுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்!
ஸ்டே ஸ்ட்ராங் டைகர்ஸ் ! 🐅💪”

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.