ஜனநாயகன் படத்திற்கு கிரீன் சிக்னல்: நீதிமன்ற தீர்ப்பு

ஜனநாயகன் கோர்ட் தீர்ப்பு

⚖️ “தலைவா… கோர்ட்லயும் கெத்து!” 😎

‘ஜனநாயகன்’ ரிலீஸுக்கு கிரீன் சிக்னல்… 🚦🎬
ஆனா ஒரு ட்விஸ்ட்! 🔄

“வணக்கம் மச்சிஸ்!” 👋

நேத்து நைட் பூரா சோகமா இருந்த தளபதி ரசிகர்களுக்கு, இன்னைக்கு காலையில ஒரு “மாஸ்” செய்தி வந்திருக்கு! 🤩 சென்னை உயர்நீதிமன்றம் ‘ஜனநாயகன்’ படத்துக்கு அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கு. 🔨

ஆனா, கிளைமாக்ஸ்ல வில்லன் எந்திரிக்கிற மாதிரி, ஒரு சின்ன ட்விஸ்ட்டும் இருக்கு. 🧐

வாங்க, கோர்ட்ல நடந்த அனல் பறக்கும் வாதங்களை சீன்-பை-சீனா (Scene-by-Scene) பார்ப்போம்! 👇

💥 நீதிபதியின் அதிரடித் தீர்ப்பு! 👩‍⚖️

இன்னைக்கு (ஜனவரி 9) காலையில நீதிபதி பி.டி.ஆஷா வழங்கிய தீர்ப்பு தளபதி ரசிகர்களுக்கு பால் வார்த்த மாதிரி இருந்தது. 🥛✨

📜 நீதிமன்ற உத்தரவு:

“தணிக்கை வாரியம் ஒப்புக்கொண்டபடி, ‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும்!” ✅

காரணம் என்ன? 🤔

படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஏற்கனவே ‘யு/ஏ’ (U/A) சான்றிதழ் கொடுக்க ஒத்துக்கிட்டாங்க. ஒரே ஒருத்தர் எதிர்ப்பு தெரிவித்தார்ங்கறதுக்காக, மொத்தப் படத்தையும் மறு ஆய்வுக்கு (Re-examination) அனுப்புனது தப்புனு நீதிபதி சொல்லிட்டாரு. 🚫

🎥 நீதிபதி மைண்ட் வாய்ஸ்

“மெஜாரிட்டி மக்கள் (உறுப்பினர்கள்) முடிவு பண்ணிட்டாங்க… 👥
நடுவுல புகுந்து தடுக்க நீங்க யாரு?” 😎🔥

🛑தணிக்கை வாரியத்தின் வாதம் – தவிடுபொடி! 🔨

தணிக்கை வாரியம் என்ன சொல்லுச்சுன்னா, “படத்துல மத ரீதியான காட்சிகளும், பாதுகாப்புப் படை சின்னங்களும் இருக்கு. அதனால மறு ஆய்வு பண்ணனும்”னு சொன்னாங்க. 🚫

👨‍⚖️ நீதிபதியின் பதிலடி:

“பெரும்பான்மை உறுப்பினர்கள் ஓகே சொன்னதுக்கு அப்புறம், மறு ஆய்வுக்கு அனுப்பும் அதிகாரம் தணிக்கை வாரியத் தலைவருக்குச் சட்டப்படி இல்லை” ❌

– அப்படின்னு சொல்லி, அந்த உத்தரவை ரத்து செஞ்சிட்டாரு. ✅

🎶 தளபதி ரசிகர்கள் 

“தீ… தீ… தளபதி… 🔥
தடைகளை உடைப்பது எங்கள் விதி!” 🚀

🔄இடைவேளைக்குப் பிறகு ட்விஸ்ட்! 😱

தீர்ப்பு வந்த சந்தோஷம் அடங்குறதுக்குள்ளயே, அடுத்த சில நிமிஷத்துல ஒரு “எதிர்பாராத திருப்பம்” நடந்துச்சு. 🌪️ தணிக்கை வாரியம் சும்மா இருக்கல. தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை எதிர்த்து, உடனே மேல்முறையீடு செய்ய முடிவு பண்ணிட்டாங்க. 📝

தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா தலைமையிலான முதல் பெஞ்ச் முன்னாடி போய், “இந்தத் தீர்ப்புக்குத் தடை விதிக்கணும், அவசர வழக்கா விசாரிக்கணும்”னு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் முறையிட்டாரு. 🏃‍♂️⚖️

⏳அடுத்து என்ன?🤔

மேல்முறையீட்டுக்கு வந்த அதிகாரிகிகிட்ட நீதிபதிகள், “முதல்ல வழக்கை தாக்கல் செய்யுங்க… அப்புறம் எப்போ விசாரணைனு சொல்றோம்”னு சொல்லிட்டாங்க. 📁

  • 🗓️ அரசு தரப்பு கோரிக்கை: திங்கட்கிழமை (ஜனவரி 12) விசாரிக்கணும்.
  • ⚖️ நீதிபதிகள் பதில்: “முதல்ல ஃபைல் பண்ணுங்க!” . ✋

📜  “நீதி வெல்லும்” ⚖️

“தணிக்கை என்னும் பெயரிலே,
தலைவன் படத்தைத் தடுக்காதே! 🚫
நீதிமன்றம் சொன்னது நீதியடா,
தடைகள் எல்லாம் தூசியடா! 🌬️

மேல்முறையீடு செய்தாலும்,
மேலிருக்கும் இறைவன் அவன் பக்கம்! 🙏
ஜனநாயகன் வருவான்…
சரித்திரம் படைப்பான்!” 🎬🔥

🏁 தடையா? தீர்ப்பா? 🥊

இப்போதைக்கு, ரவுண்ட் 1-ல் ‘ஜனநாயகன்’ வெற்றி! 🏆 தனி நீதிபதி சான்றிதழ் கொடுக்கச் சொல்லிட்டாரு.

ஆனா, மேல்முறையீட்டு வழக்கு என்னாகப் போகுதுங்கறதப் பொறுத்துதான் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம் ஆகும். 🗓️

“இன்னைக்கு (வெள்ளிக்கிழமை) படம் ரிலீஸ் ஆக வேண்டியது, ஆனா இப்போதைக்கு வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு.” ⏳

🎥 நம்ம ‘மெர்சல்’ விஜய் ஸ்டைல்ல:

“நீங்க மல்லுக்கட்ட நிக்கிறது…
ஆளப்போறான் தமிழன் கிட்ட! 😎🐂
சீக்கிரம் சர்டிபிகேட்டக் கொடுங்க பாஸ்!” 📝

“வெயிட் பண்ணுங்க மச்சிஸ்…
நல்லதே நடக்கும்! 🤞✨”

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.