வங்கதேசத்தில் தொடரும் கும்பல் வன்முறை: மிதுன் சர்க்கார் மரணம்

🚨 “திருட்டுப் பட்டம்… துரத்திய கும்பல்!” 🏃‍♂️😰

கால்வாயில் குதித்து உயிரை விட்ட மிதுன் சர்க்கார்!
வங்கதேசத்தில் தொடரும் மரண ஓலம்! 🇧🇩💔

“வணக்கம் மச்சிஸ்!” 👋

“பக்கத்து வீட்டுல தீ பிடிச்சா… நம்ம வீட்டுக்கும் அனல் அடிக்கும்”னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க? 🔥 வங்கதேசத்துல இப்போ நடக்குற கொடுமைகளைப் பார்த்தா, மனசு பத்திகிட்டு எரியுது.

தினமும் ஒரு செய்தி… தினமும் ஒரு மரணம். ⚰️ இன்னைக்கு வந்த நியூஸ் இன்னும் சோகம். ஒரு 25 வயசு இளைஞன், கும்பலுக்குப் பயந்து கால்வாயில் குதிச்சு உயிரை விட்டிருக்கான். அவன் பேரு மிதுன் சர்க்கார் .

❓ நெஞ்சை உலுக்கும் கேள்வி:

அவன் செஞ்ச தப்பு என்ன? அவன் ஒரு இந்துவா பிறந்தது தானா? 🤔

வாங்க, இந்தத் துயரச் சம்பவத்தை கொஞ்சம் ஆழமா பார்ப்போம். 👇

🏃ஓடு மிதுன் ஓடு… 🌑

சம்பவம் நடந்தது செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6). பண்டார்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மிதுன் சர்க்கார். திடீர்னு ஒரு கும்பல் அவரைத் துரத்துது. 🏃‍♂️💨

👁️ காரணம்:

“திருட்டு சந்தேகம்”. கையில கட்டையோடயும், கல்லோடயும் ஒரு கும்பல் வெறி பிடிச்சு துரத்துனா, ஒருத்தன் என்ன பண்ணுவான்? உயிர் பயத்துல ஓடுவான்.

மிதுனும் ஓடினாரு. தப்பிக்க வழி தெரியாம, முன்னாடி இருந்த ஒரு கால்வாயில குதிச்சாரு. 🌊

“தண்ணியிலாவது தப்பிச்சிரலாம்”னு நினைச்சிருப்பாரு. ஆனா விதி அங்கே முடிஞ்சது. செவ்வாய்க்கிழமை மத்தியானம் போலீஸ் அவரோட சடலத்தைத்தான் மீட்டெடுத்தாங்க. 😔🚔

🎥 “எங்க அப்பாவ கொல்றதுக்குன்னே ஒரு கும்பல் அலையுது சார்… 😭
நாங்க என்ன சார் தப்பு பண்ணோம்?”

(இங்க மிதுன் கேட்டதும் அதே கேள்வி தான்! 💔)

🩸இது முதல் முறை இல்ல… ⚰️

மிதுன் சர்க்கார் மரணம் ஒரு தனி சம்பவம் இல்ல பாஸ். கடந்த சில நாட்களாவே வங்கதேசம் ஒரு “ரத்த பூமியா” மாறிட்டு இருக்கு. 😰

  • 📅 நேற்று (ஜனவரி 5/6):
    1. ஜெஸ்ஸூர்: பத்திரிகை ஆசிரியர் ராணா பிரதாப் சுட்டுக் கொலை. 🔫
    2. நரசிங்டி: மளிகை கடைக்காரர் சரத் மணி சக்ரவர்த்தி வெட்டிக் கொலை. 🔪
  • 🕯️ ஜனவரி 3: ஷரியத்பூர்ல கோகோன் சந்திர தாஸ் (50) எரித்துக் கொலை. 🔥
  • 🕯️ டிசம்பர் 24: ராஜ்பாரில அம்ரித் மண்டல் அடித்துக் கொலை . 👊
  • 🕯️ டிசம்பர் 18: மைமன்சிங்ல தீபு சந்திர தாஸ் (25) அடித்துக் கொல்லப்பட்டு, தீ வைப்பு. 😓

“இப்படி வரிசையா கொலைகள் நடக்குது. இதைத் தடுக்க யாருமே இல்லையா?”

🎶“உத்தமர்கள் இங்கு சாவது… 🥀
எந்தன் உள்ளம் வேகுது…
நியாயம் என்பது…

ஏட்டினில் உள்ளதோ?” 🎵📖

🗳️தேர்தல் பயமா? இனவெறியா? 🤔

பிப்ரவரி 12, 2026. அன்னைக்குத் தான் வங்கதேசத்துல நாடாளுமன்றத் தேர்தல். ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததுக்கு அப்புறம் நடக்குற முதல் தேர்தல் இது. 🗓️

இந்தத் தேர்தலுக்கு முன்னாடி, சிறுபான்மையினரை (இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள்) பயமுறுத்தத்தான் இந்தத் தாக்குதல்கள் நடக்குதா? 🛑

📊 இந்து பௌத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் ரிப்போர்ட் (Dec only):

  • ⚠️ 51 குறிவைக்கப்பட்ட தாக்குதல்கள்.
  • ☠️ 10 படுகொலைகள்.
  • 🔥 கொள்ளை, பாலியல் வன்கொடுமை, தீ வைப்பு… லிஸ்ட் நீளுது!
🎥“அரசியல் பண்றீங்களாடா… 🤨
இல்ல…

அப்பாவிங்க உயிர வச்சு வியாபாரம் பண்றீங்களா?” 🔥🤬

📜 ஓடும் உயிர் ✍️

“கும்பல் ஒன்று துரத்துது, காரணம் ஏதும் சொல்லாமல்! 🏃‍♂️
கால்வாய் நீர் அணைக்குது, காப்பாற்ற வழி இல்லாமல்! 🌊
ஓட்டு போட விரல்கள் வேண்டும்,
ஆனால் வெட்டப்படுவது தலைகள்! 🗳️🔪
மனிதம் எங்கே போனது?
வங்க மண்ணில் ரத்தக் கறைகள்!” 🇧🇩🩸

🌍உலகம் என்ன செய்யுது? 🌐

மனித உரிமை ஆர்வலர்கள் என்ன சொல்றாங்கன்னா, “இது சும்மா விபத்து இல்ல… இது ஒரு சிஸ்டமேட்டிக் ஃபெயிலியர் “. 📉

⚠️ சிறுபான்மையினர் கதறல்:

தேர்தல் நெருங்க நெருங்க, “எங்க உயிருக்கு என்ன உத்தரவாதம்?”னு மக்கள் கதறாங்க. சர்வதேச சமூகம் அறிக்கை விடுறதோட நிறுத்திக்காம, ஏதாவது ஆக்ஷன் எடுக்கணும். 🇺🇳

🎥“தப்பு பண்றவன் மட்டும் குற்றவாளி இல்ல…
அதைப் பார்த்துட்டு சும்மா இருக்கிறவனும்…

குற்றவாளி தான்!” 😡🫵

🏁“குற்றவாளி யார்? ஓடியவனா… வேடிக்கை பார்த்த உலகமா?” ❓⚖️

மிதுன் சர்க்கார்… வெறும் 25 வயசு. எவ்வளவோ கனவுகள் இருந்திருக்கும். ஒரு கும்பலின் வெறிக்கு அவன் பலியாகிட்டான். ⚰️

தேர்தல் முக்கியம் தான். ஆனா அதைவிட முக்கியம் மனித உயிர். பிப்ரவரி 12-க்குள்ள இன்னும் எத்தனை உயிர்கள் போகப்போகுதோ? இந்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கு. ❓

“வன்முறை ஒழியணும்… மனிதம் தழைக்கணும்!” 🕊️
🎶“செல்லாதே செல்லாதே…

எனைத் தனியே விட்டு செல்லாதே…” 💔

(உறவுகளை இழந்தவர்களின் கதறல் இது)

இறந்த ஆத்மாக்கள் சாந்தியடையட்டும்.
நீதி வெல்லட்டும்! 🙏🕯️🇧🇩

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.