வெனிசுலா ஆயில் வேட்டை: ட்ரம்பின் அதிரடி ஆபரேஷன்

🛢️ “ஆயில் வேட்டை!” 🕵️‍♂️

வெனிசுலாவில் ட்ரம்பின் அதிரடி ஆபரேஷன்!
🇺🇸🇻🇪🔥

“வணக்கம் மச்சிஸ்!” 👋

உலக அரசியல் களத்துல இப்ப ஓடிக்கிட்டு இருக்குற படம் “வெனிசுலா ஃபைல்ஸ்”. 🎬 இந்த படத்துல ஹீரோ யாரு, வில்லன் யாருனு தெரியல. ஆனா, டைரக்டர் நம்ம அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான்! 👔

🚨 பிளாஷ்பேக்:

திடீர்னு ஒரு ராத்திரி… ஒரு மிலிட்டரி ஆபரேஷன்… வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தூக்கப்பட்டார். இப்ப அவர் அமெரிக்காவுல “டிரக் டிராஃபிக்கிங்” கேஸ்ல கம்பி எண்ணிட்டு இருக்காரு. 🚓⛓️

சரி, மதுரோ போனதுக்கப்புறம் டிரம்ப் என்ன சொல்றாரு தெரியுமா?

“தம்பி… அந்த 50 மில்லியன் பேரல் எண்ணெயை
அப்படியே பார்சல் பண்ணுங்க!” 📦⛽

🎬ட்ரம்பின் மாஸ் என்ட்ரி & ஆயில் டீல்! 🤝

மதுரோவை தூக்கின கையோட, டிரம்ப் அவரோட சோஷியல் மீடியாவுல (Truth Social) ஒரு பதிவைப் போட்டாரு. அதைப் பார்த்தா, ‘சிவாஜி’ படத்துல ரஜினி கணக்கு சொல்ற மாதிரி இருக்கு! 📝

🗣️ ட்ரம்பின் பஞ்ச்:

  • 🛢️ டீல்: அமெரிக்காவுக்கு 30 முதல் 50 மில்லியன் பேரல்  கச்சா எண்ணெய்!
  • 💰 விற்பனை: இதை மார்க்கெட் விலைக்கு விப்போம்.
  • 🤝 லாபம்: அந்தப் பணம் என் கண்ட்ரோல்ல இருக்கும். அது வெனிசுலா மக்களுக்கும், அமெரிக்க மக்களுக்கும் பயன்படும்!
🎥 Trump Mode:

“நோ மணி நோ ஹனி… 💵
இட்ஸ் ஆல் அபௌட் மணி!
ஆயில் இஸ் பேக்!” 😎🔥

டிரம்ப் கணக்கு: “வெனிசுலா எண்ணெய் மார்க்கெட்டுக்கு வந்தா, உலகத்துல ஆயில் விலை குறையும். அமெரிக்காவுக்கு லாபம்!” 📉🇺🇸

⏳18 மாசமா? 10 வருஷமா?  🚧

டிரம்ப் என்ன சொல்றாருன்னா, “இன்னும் 18 மாசத்துல வெனிசுலால அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் கொடி கட்டிப் பறக்கும். சும்மா ஜெட் வேகத்துல ஆயில் எடுப்போம்”னு சொல்றாரு. 🚀

🏥 இடைவேளை ட்விஸ்ட் :

“பாஸ்… வெனிசுலா ஆயில் இண்டஸ்ட்ரி இப்போ ஐசியூ-ல இருக்கு. 🚑 அதை சரி பண்ணி, பழையபடி எண்ணெய் எடுக்கணும்னா சும்மா இல்ல… 10 வருஷம் ஆகும்! பல ஆயிரம் கோடி செலவாகும்!” 💸

  • 🛑 சிக்கல் 1: வெனிசுலா எண்ணெய் கொஞ்சம் திக்கானது. சுத்திகரிக்கிறது கஷ்டம்.
  • ⚙️ சிக்கல் 2: அங்க இருக்கிற மெஷின் எல்லாம் துருப்பிடிச்சு போயிருக்கு .
🎶எண்ணெய் Version:

“அம்மாடி இதுதான் காதலிக்க நேரமா?
(இல்ல ஆயில் எடுக்கிற நேரமா? 🤔)
இன்ப்ராஸ்ட்ரக்சர் எல்லாம் டேமேஜ் ஆச்சே…
தாங்குமா?” 🎵🏗️

👮புது வரவு & பழைய வழக்கு 📜

மதுரோ போன இடத்துக்கு இப்போ வந்திருக்கிறது யாரு? டெல்சி ரோட்ரிக்ஸ் . இவங்க தான் இப்போ இடைக்கால அதிபர். 👩‍⚖️

🕰️ ஃப்ளாஷ்பேக் :

வெனிசுலால 303 பில்லியன் பேரல் எண்ணெய் வளம் இருக்கு (World’s #1). 🥇 ஒரு காலத்துல அமெரிக்க கம்பெனிகள் அங்க ஆயில் எடுத்துட்டு இருந்தாங்க.

  • 📅 1976: வெனிசுலா அதை தேசியமயமாக்கியது .
  • 📅 2007: ஹியூகோ சாவேஸ் வெளிநாட்டு கம்பெனிகளைத் துரத்திட்டாரு. 🚪

“எங்க சொத்தை  அவங்க பிடுங்கி வச்சிருக்காங்க. அதுக்குத்தான் இந்த நடவடிக்கை” – அமெரிக்கா தரப்பு.
(குறிப்பா, ConocoPhillips கம்பெனிக்கு $8.7 பில்லியன் பாக்கியாம்! 💰)

🎥USA:

“செஞ்சிட்டான்… வச்சு செஞ்சிட்டான்! 👊
எங்க பொருள எடுத்துக்கிட்டு…
எங்களுக்கே டாட்டா காட்டுறியா?” 🔥👋

🏢கார்ப்பரேட் கம்பெனிகளின் நிலைப்பாடு 🤝

இப்போ அமெரிக்காவுல இருக்கிற பெரிய எண்ணெய் நிறுவனங்கள் என்ன நினைக்கிறாங்க? 🤔

  • செவ்ரான்: இவங்க மட்டும்தான் இப்போதைக்கு அங்க ஓரளவு வேலை செய்றாங்க.
    “நாங்க சேஃப்டியா, சட்டப்படி வேலை செய்றோம்”னு ரொம்ப உஷாரா அறிக்கை விட்டிருக்காங்க. ✅
  • 🧐 கோனோகோ ஃபிலிப்ஸ் :
    “நாங்க நிலைமையை வேடிக்கை பாக்குறோம் (Monitoring). இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது” 🤐
  • 😶 எக்ஸான் : பதிலே சொல்லல.
    (மைண்ட் வாய்ஸ்: “ஆளை விடுங்கடா சாமி!” 🏃‍♂️)

காரணம்: அங்க இன்னும் ஒரு நிலையான கவர்மெண்ட் இல்ல. டிரம்ப் சொன்ன மாதிரி உடனே முதலீடு செஞ்சு, ஆட்சி மாறினா என்ன பண்றதுங்கற பயம் அவங்களுக்கு இருக்கு. 😨

🎶 கார்ப்பரேட் Version:

“மின்சார கண்ணா… (வெனிசுலா மண்ணா)… ⚡
கொஞ்சம் நீ சும்மா இரும்மா… ✋
(அவசரப்பட்டு இன்வெஸ்ட் பண்ண முடியாது!)” 🎵🚫

📜 கருப்பு தங்கம்🛢️

“மண்ணுக்கு அடியில் கருப்புத் தங்கம், ⚫
மேலே நடக்குது அதிகார யுத்தம்! ⚔️
தலைவர்கள் மாறுவர், காட்சிகள் மாறும்,
ஆனால் மக்களின் பசி மட்டும் தீராது ஏறும்! 🍽️

பேரல்கள் கணக்கில் பேரம் நடக்குது, 💰
விலையைக் குறைக்க வியூகம் வகுக்குது! 📉
வல்லரசு கையில் லகான் இருக்குது,
வெனிசுலா எதிர்காலம் எங்கே போகுது?” 🤔🇻🇪

🧠இது சாத்தியமா? 🤔

டிரம்ப் சொல்ற மாதிரி 18 மாசத்துல எல்லாம் மேஜிக் பண்ண முடியாதுனு அனலிஸ்ட் சொல்றாங்க. 📉

  • வீக் இண்டஸ்ட்ரி: வெனிசுலா எண்ணெய் துறை ரொம்ப வீக்.
  • 💰 பயம்: அமெரிக்க கம்பெனிகள் உடனே பல பில்லியன் டாலர்களைக் கொட்ட யோசிப்பாங்க.
  • ⚖️ தேவை: “நிலையான ஆட்சி” ரொம்ப முக்கியம்.

ஆனா, டிரம்ப் ஒரு பிசினஸ்மேன். “எதுவும் முடியாதுனு இல்ல”ங்கறது அவர் பாலிசி. 👔💼

🎥Trump Attitude:

“நான் யாருனு எனக்குத் தெரியும்…
நான் என்ன செய்யப்போறேன்னு எனக்கே தெரியும்! 😼
வாட்ச் அவுட் !” 😎👉

🏁 🎬

மொத்தத்துல, இந்த ஆபரேஷன் ஒரு “ஹாலிவுட் படம்” மாதிரி நடந்திருக்கு. ஒரு பக்கம் மதுரோ ஜெயில்ல. 🚓 இன்னொரு பக்கம் 50 மில்லியன் பேரல் எண்ணெய் அமெரிக்காவுக்கு வரப்போகுது. 🛢️

🤔 நமக்கு என்ன லாபம்?

உலக சந்தையில எண்ணெய் விலை குறைஞ்சா, பெட்ரோல் விலை குறையலாம். ⛽📉 ஆனா அது நடக்குமான்னு பொறுத்திருந்து தான் பார்க்கணும்.

“படம் ரிலீஸ் ஆகிடுச்சு… ஆனா ரிசல்ட் வர டைம் ஆகும்!” ⏳

🎥

“ஆயில் கேம் இஸ் ஆன்! 🎮🛢️
இனிமே தான் ஆட்டமே சூடு பிடிக்கும்!
பி ரெடி ஃபோர் தி ஷோ!” 🔥🚗

“பெட்ரோல் பங்க்ல மீட் பண்ணுவோம் மச்சிஸ்!” 😂⛽👋

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.