📱 “வில்லன் கையில இல்ல… உங்க வீட்டு சோபாவுல இருக்கான்!” 😲
குழந்தைகளின் இதயத்தை குறிவைக்கும் செல்போன்!💔🚫
“வணக்கம் மச்சிஸ்!” 👋
எல்லாரும் எப்படி இருக்கீங்க? வாழ்க்கை சும்மா ‘ஜெட்’ வேகத்துல போயிட்டு இருக்கு. ஆனா, நம்ம வீட்டுச் சுட்டிக்குழந்தைங்க வாழ்க்கை எந்த வேகத்துல போயிட்டு இருக்குன்னு கவனிச்சீங்களா? 🤔
காலையில எழுந்தா ஆன்லைன் கிளாஸ், மதியம் ஹோம்வொர்க் பிரேக்ல கேம்ஸ், ராத்திரி தூங்க போறப்ப யூடியூப் வீடியோஸ்… இப்படி 24 மணி நேரமும் ஸ்கிரீன் முன்னாடிதான் நம்ம பசங்க தவம் கிடக்குறாங்க. 🧘♂️📱
“எப்பா… இவன் ராத்திரி பூராம் முழிச்சுகிட்டே இருக்கான்…
இவன் மனுஷனா இல்ல பேயா?” 😨👻
(ஆனா இங்க பேய் இல்ல பாஸ், அது “ஸ்கிரீன் டைம்” என்கிற மாயாவி! 🧛♂️)
இப்போ ஒரு புது ஆய்வு வெளியாகி இருக்கு. அது சொல்ற செய்தியை கேட்டா, உங்க நெஞ்சு ‘பக்’க்குனு ஆகிடும். 💓
குழந்தைகள் எக்ஸ்ட்ராவா பாக்குற ஒவ்வொரு மணி நேர ஸ்கிரீன் டைமும், அவங்க இதயத்தோட ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்குதாம்! 💣
🩺ஆபரேஷன் இதயம்!
இது சும்மா வாட்ஸ்அப் வதந்தி இல்ல மக்களே. டென்மார்க் நாட்டுல நடந்த ஒரு பயங்கரமான ஆய்வு (Danish longitudinal cohorts). கிட்டத்தட்ட 1000 குழந்தைகள் மற்றும் டீனேஜ் பசங்களை வச்சு இந்த டெஸ்ட்டை பண்ணிருக்காங்க. 🧪
📊 ஆய்வு சொல்லும் அதிர்ச்சி உண்மைகள்:
- 👶 ஆபத்தின் அளவு: 6 முதல் 10 வயசு குழந்தைங்க, தேவையில்லாம ஒரு மணி நேரம் எக்ஸ்ட்ரா போன் பார்த்தா கூட, அவங்க இதய நோய் வருவதற்கான ஆபத்து கூடுதாம். 📈
- 👦 டீனேஜ் திக் திக்: 18 வயசு பசங்களுக்கு இந்த ரிஸ்க் இன்னும் அதிகம். அவங்க பிற்காலத்துல இதய நோயால பாதிக்கப்படுறதுக்கான வாய்ப்புகள் இந்த ஸ்கிரீன் டைமால அதிகமாகுது. 💔
- 🩸 ரத்த ஜாதகம்: ரத்தத்துல இருக்கிற 37 வகையான பயோமார்க்கர்ஸ் வெச்சு, ஒரு “ஸ்கிரீன் டைம் கைரேகை” மாதிரியே கண்டுபிடிச்சுட்டாங்களாம். போன் பாக்குறதால உடம்புல ரசாயன மாற்றமே நடக்குதாம்! 🧬
“பக்கம் வந்து… கொஞ்சம் பக்கம் வந்து… 📱
யாரும் பார்க்காமலே…
கண்ணை பறிக்கிறாயே!” 👁️❌
(இங்க கண்ணை மட்டும் இல்ல, இதயத்தையும் பறிக்குது இந்த போன்! 🫀)
😴தூக்கம் போச்சு… ஆரோக்கியம் போச்சு! 📉
இந்த வில்லன் தனியா வரல. அவனுக்கு ஒரு கூட்டாளி இருக்கான். அவன் பேருதான் “தூக்கமின்மை” . 🥱
நம்ம ஊருல ராத்திரி டின்னர் சாப்பிடும் போது டிவி ஓடும். சாப்பிட்ட அப்புறம் பெட்ரூம்ல போன் ஓடும். இந்த ஸ்கிரீன்ல இருந்து வர்ற நீல வெளிச்சம், “தூங்குடா தம்பி”னு சொல்ற ஹார்மோனை Melatonin வரவிடாம தடுக்குது. 🛑
சரியான தூக்கம் இல்லாத குழந்திகளுக்குத் தான் இந்த இதய பாதிப்பு ரொம்ப அதிகமா இருக்காம்.
✅ நல்லா தூங்குனா, இந்த பாதிப்பை 12% வரை குறைக்க முடியுமாம்!
“தூக்கத்த கெடுத்தா…
துக்கம்தான் மிஞ்சும் கண்ணா!” 😴💔
🇮🇳 இது இந்தியாவுக்கான ‘வேக் அப்’ கால்! ⏰
“ஏங்க, இது ஏதோ வெளிநாட்டுல நடந்த ஆய்வு தானே?”னு நீங்க நினைக்கலாம். ஆனா மேட்டர் நம்ம ஊருக்குத்தான் ரொம்ப முக்கியம். 🚨
2020-க்கு அப்புறம் ஆன்லைன் கிளாஸ்னு சொல்லி, நம்ம பசங்க கையில போனைக் கொடுத்துட்டோம். இப்போ டியூஷன், ஹோம்வொர்க்னு சொல்லி எப்பவும் ஆன்லைன்ல தான் இருக்காங்க. 💻
🚫 ஆபத்துகள் :
- 🔸 சும்மா உட்கார்ந்து போன் பாக்குறதால இதயத்தோட எடை கூடுதாம்!
- 🔸 இதயத்தின் அமைப்பு மாறுதாம். 🫀
- 🔸 சின்ன வயசுலயே ஒபிசிட்டி மற்றும் இன்சுலின் பிரச்சனை! 💉
“கையில் உலகம் என்கிறாய்…
கண்களைக் கெடுத்துக் கொள்கிறாய்! 📱👀
துடிக்கும் இதயத்தை மறந்து…
திரையில் மூழ்கித் தொலைகிறாய்! 🌊
விழித்துக் கொள் என் சின்னக் கண்மணியே…
இல்லையேல் நோய் வரும் உன் முன்னாடியே!” 🏥🚫
🛡️அப்போ என்னதான் தீர்வு? ✅
ஹீரோ என்ட்ரி கொடுக்கிற நேரம் வந்தாச்சு! 🦸♂️ பெற்றோர்களாகிய நீங்க தான் அந்த ஹீரோஸ். நம்ம குழந்தைகளைக் காப்பாத்த, சில சூப்பர் டிப்ஸ் இதோ:
படிப்பு போக, பொழுதுபோக்குக்கு 2 மணி நேரத்துக்கு மேல போன் தரவே கூடாது.
ரெண்டு மணி நேரம் தான்! ✌️
அதுக்கு மேல நோ ஸ்கிரீன்!” 😎🚫
சாப்பிடுற இடம் 🍽️, சாமி கும்பிடுற இடம் 🙏, பெட்ரூம் 🛌… இங்கெல்லாம் போனுக்கு அட்மிஷன் கிடையாது! “டீ குடிக்கும் போது நோ போன்”னு ஒரு ரூல் வைங்க.
தூங்க போறதுக்கு 1 மணி நேரத்துக்கு முன்னாடியே ஸ்கிரீன் ஆஃப். கதை சொல்லுங்க! 📖
🎶 “ஆராரிராரோ… நான் இங்கே பாட…
தாயே நீ கண்ணுறங்கு… என்னோடு வா!” 😴
சும்மா உட்கார்ந்து இருந்தா வியாதி தான் வரும். ஸ்கிப்பிங், டான்ஸ், ஓடிப் பிடிச்சு விளையாடுங்க. 🏃♂️
🎥 “வெயிலோடு விளையாடி… வெயிலோடு உறவாடி…” ☀️
- 👨👩👧👦 5. நீங்க தான் ரோல் மாடல்: நீங்க எப்பவும் போனை நோண்டிக்கிட்டு இருந்தா, அவங்களும் அதான் செய்வாங்க. ஃபேமிலி டைம்ல போனத் தூக்கி போடுங்க.
- 🎨 6. மாற்று வழிகள்: படம் வரைதல், கிராஃப்ட், கதை எழுதுதல் – மூளைக்கு வேலை கொடுங்க! 🧠
🏁 ஒரு மாற்றம்… பெரிய பாதுகாப்பு ❤️
இந்த ஆய்வு நம்மள பயமுறுத்துறதுக்காக இல்ல, உஷார்ப்படுத்துறதுக்காக! 🚨 நம்ம பசங்களோட இதயம், வருங்காலத்துல பத்திரமா இருக்கணும்னா, இன்னைக்கே இந்தச் சின்ன மாற்றங்களைச் செய்யணும்.
“நம்ம ஹார்ட் ஸ்ட்ராங்கா இருக்கணும்னா, போனை குறைக்கணும் செல்லம்”னு அன்பா சொல்லுங்க. 🥰
“வாழ்க்கைல பயம் இருக்கலாம்…
ஆனா அது நம்ம குழந்தைகளோட ஆரோக்கியத்து மேல இருக்கக் கூடாது! 🙅♂️
Be Smart, Save Heart!” ❤️✨