இந்தியாவுக்கு ‘நோ’ சொன்ன வங்கதேசம்

🏏 “எல்லை தாண்ட மாட்டோம்!”

இந்தியாவுக்கு ‘நோ’ சொன்ன வங்கதேசம்
🇧🇩⚡🇮🇳

வணக்கம் மச்சிஸ்! கிரிக்கெட் உலகம் இப்போ ஒரு பெரிய “சஸ்பென்ஸ் த்ரில்லர்” படம் பார்த்துட்டு இருக்கு. 🍿

பிப்ரவரி 2026-ல டி20 உலகக்கோப்பை திருவிழா ஆரம்பிக்கணும். “எல்லாரும் பேட், பாலோட வாங்கப்பா”னு ஐசிசி அழைப்பிதழ் வச்சா, வங்கதேச கிரிக்கெட் போர்டு மட்டும்…
“வர முடியாது! அது எங்களுக்கு சேஃப் இல்ல!” னு முகத்தில அடிச்ச மாதிரி சொல்லிட்டாங்க. 😱🚫

இது சும்மா ஒரு விளையாட்டு அறிவிப்பு இல்ல. இந்தியா – வங்கதேசம் உறவுல விழுந்த பெரிய விரிசல். இதோட பின்னணி, அரசியல், ஐபிஎல் பஞ்சாயத்துனு எல்லாத்தையும் பிரிச்சு மேய்வோம் வாங்க! 👇

🚫ஆரம்பமே அதிரடி🔥

எல்லாம் அமைதியா தான் போயிட்டு இருந்துச்சு. திடீர்னு ஐபிஎல் பக்கம் ஒரு பூகம்பம். 🏟️

🟣 KKR பஞ்சாயத்து:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டீம்ல வங்கதேசத்தின் ஸ்டார் பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் இருந்தாரு. திடீர்னு பிசிசிஐ கண்ணசைக்க, கேகேஆர் நிர்வாகம் முஸ்தபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிச்சுட்டாங்க.

இதை பார்த்த வங்கதேச கிரிக்கெட் போர்டுக்கு ஈகோல தீ பத்திடுச்சு. 🔥😡
“எங்க மெயின் பிளேயரை நீங்க கழட்டி விடுவீங்களா? அப்போ நாங்க மட்டும் உங்க ஊருக்கு வந்து விளையாடணுமா?” னு ஒரு அவசர மீட்டிங்கை போட்டாங்க.

🎥📞 “அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர்!
இனிமே பாரு என் ஆட்டத்த!” 😎🔥

⚔️அரசியல் ஆடுகளம்🔥

வெறும் கிரிக்கெட் மட்டும் காரணம் இல்ல பாஸ். 2024-ல வங்கதேசத்துல நடந்த அரசியல் மாற்றம் தான் மெயின் வில்லன். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தப்பிச்சு இந்தியா வந்ததுல இருந்தே அங்க ஒரு புகைச்சல். 😤

சமீபத்துல வங்கதேசத்துல நடந்த வன்முறையில ஒரு இந்து நபர் கொல்லப்பட்டது, மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலைனு பிரச்சனை பெருசாகி, “இந்தியாவுக்கு எதிரான மனநிலை” அங்க தீயா பரவிருச்சு.

⚠️ “நாங்க இந்தியா வந்தா எங்க உயிருக்கு உத்தரவாதம் இல்லை” னு பிசிபி  சொல்லுது.

🎶 “எங்க ஏரியா… உள்ள வராத… 🚫

எங்க ஏரியா… உள்ள வராத…
பகைவனுக்கருள்வாய்… நன்னெஞ்சே… 🙏
இங்கே பகைவன் புகைவன்… எல்லாம் ஒன்றே!” 🎵


(வங்கதேசம் வாய்ஸ்: “நாங்க இந்தியா பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டோம். எங்க மேட்சை வேற நாட்டுக்கு மாத்துங்க!”)

📅குழப்பத்தில் ஐசிசி🤷‍♂️

பிப்ரவரி 7-ம் தேதி உலகக்கோப்பை ஆரம்பிக்குது. வங்கதேச அணிக்கு செட் பண்ணி வச்சிருந்த ஒரிஜினல் பிளான் இதோ: 👇

  • 🗓️ பிப் 7: வெஸ்ட் இண்டீஸ் (கொல்கத்தா)
  • 🗓️ பிப் 9: இத்தாலி (கொல்கத்தா)
  • 🗓️ பிப் 14: இங்கிலாந்து (கொல்கத்தா)
  • 🗓️ பிப் 17: நேபாளம் (மும்பை)

🤔 வங்கதேசம் டிமாண்ட்:

“பாகிஸ்தான் எப்படி ஸ்ரீலங்கால ஆடுறாங்களோ, அதே மாதிரி எங்க மேட்சையும் நியூட்ரல் வென்யூ மாத்துங்க”னு ஒற்றைக்காலில் நிக்கிறாங்க!

🎥 ஐசிசி ரியாக்ஷன்:

“என்னென்ன சொல்றான் பாருங்க…
கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றான்!” 🙆‍♂️🤣

(ஆனா வங்கதேசத்துக்கு இது கம்பி கட்டுற கதை இல்ல, உசுரு பயம்! 😰)

🦁படையப்பா… ஆனா படை மட்டும் தான் இருக்கு!

இந்தியா வர மாட்டோம்னு சொல்லிட்டாலும், “நாங்க விளையாட ரெடி”னு சொல்லி 15 பேர் கொண்ட ஸ்குவாட் அறிவிச்சுட்டாங்க. 🏏

  • 🧢 கேப்டன்: லிட்டன் தாஸ்
  • 🎯 முக்கிய புள்ளி: முஸ்தபிசுர் ரஹ்மான்
    (இவரைச் சுத்தி தான் இப்போ கதையே ஓடுது! 🔥)
  • 👥 மற்றவர்கள்: தஸ்கின் அஹ்மது, ஷோரிஃபுல் இஸ்லாம், மஹெதி ஹசன்.
“படை கிளம்ப தயார்… ஆனா களமிறங்க தான் இடம் இல்லாம நிக்குது! 🏟️❌”
📜“அரசியல் சதுரங்கத்தில் உருளுது பந்து, ♟️
விளையாட்டு வீரர்களுக்கு ஏனடா இந்தத் தொந்தரவு? 😟
கொல்கத்தா மைதானம் காத்துக் கிடக்கு,

வங்கத்துப் புலிகளோ வேலி போட்டுத் தடுக்கு! 🐅
பாதுகாப்பு முக்கியம்தான் மறுக்கவில்லை,
ஆனால் ஒற்றுமை இல்லையேல் விளையாட்டில் சுவையில்லை!” 🇧🇩💔

🏁என்ன தான் நடக்கும்? 🤔

இப்போ பந்து ஐசிசி கோர்ட்ல இருக்கு. 🎾

  • 1️⃣ ஆப்ஷன் A: வங்கதேசம் கேட்ட மாதிரி இடத்தை மாத்தணும் (இது லாஜிஸ்டிக்ஸ் படி ரொம்ப கஷ்டம்).
  • 2️⃣ ஆப்ஷன் B: வங்கதேசத்தை சமாதானப்படுத்தி இந்தியா வர வைக்கணும். 🤝

🎥 “இங்க நான் சொல்றது தான் சட்டம்…
நான் சொல்றது தான் ரூல்ஸ்! 😎
(இது ஐசிசி மைண்ட் வாய்ஸ்).

ஆனா அதை உடைப்பேன்!” னு வங்கதேசம் நிக்குது. 🔥🔨

பிப்ரவரி மாசம் நெருங்குது… இதுல யார் ஜெயிக்க போறாங்க? கிரிக்கெட்டா? இல்ல ஈகோவா?

“வெயிட் பண்ணி பார்ப்போம்… ஆட்டம் இப்போ தான் சூடு பிடிச்சிருக்கு!” 🔥🍿

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.