🎬லங்காவை ‘துவம்சம்’ செய்த சிங்கப்பெண்கள்! 🦁🔥🏏
(5-0 White Wash )
வணக்கம் மக்களே! 👋
நம்ம இந்திய மகளிர் அணி ஸ்ரீலங்காவை 5-0 என வைட்வாஷ் செய்து, கிரிக்கெட் உலகத்தையே திரும்பி பார்க்க வச்சிருக்காங்க. சும்மா ஜெயிச்சோம்னு இல்லாம, சாதனைப் புத்தகத்தையே கிழிச்சு புதுசா எழுதியிருக்காங்க. 📚✨
🌪️ தீப்தி சர்மா: விக்கெட் மெஷின்
தீப்தி சர்மா சும்மா “சைலண்ட் கில்லர்” மாதிரி. ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் சாதனையை முறியடிச்சு, உலகத்துலயே அதிக T20 விக்கெட் (152) எடுத்த வீராங்கனை என்ற பெருமையை தட்டி தூக்கிட்டாரு! 🏆
T20 வரலாற்றில் 1000 ரன்கள் + 150 விக்கெட்டுகள் எடுத்த உலகின் முதல் பிளேயர் (ஆண்/பெண் இருபாலரிலும்) இவங்க தான்.
ஆல்-ரவுண்டர்னா சும்மாவா? 😎
சாதனைப் புத்தகத்தில் உன் பெயரை பொறித்தாய்! ✍️
ஆயிரம் ரன்களும் உன் பேட்டில் அடக்கம்,
தீப்தி நீ களமிறங்கினால் எதிரணிக்கு நடுக்கம்! 😨”
இவங்க ரெக்கார்டை உடைக்க இனி எவனாச்சும் பிறந்தா தான் உண்டு!”
👑 ஸ்மிருதி மந்தனா: ரன் மெஷின்
2025 வருஷம் முழுசாவே ஸ்மிருதிக்கு தான்! ஒரே வருஷத்துல 1703 ரன்கள் குவிச்சு, ஒரு காலண்டர் இயர்ல அதிக ரன் அடிச்ச சாதனைய செஞ்சிருக்காங்க. 🔥
- சர்வதேச கிரிக்கெட்ல 10,053 ரன்கள்! (Fastest to 10k in just 280 innings). 🏎️
- T20-ல மட்டும் 4102 ரன்கள் (Balls faced: 3227 – வேகம்னா விவேகம்!).
பத்தாயிரம் ரன்கள் கடந்த வேகக்காரி! 🏃♀️
நீ அடித்த எண்பது சிக்ஸர்கள் விண்ணை பிளக்கும், 🏏
உன் ஆட்டத்தை கண்டால் விசில்கள் பறக்கும்! 😙”
10,000 ரன்ஸ் அடிச்ச ஸ்மிருதி மந்தனா கெத்தா வந்துட்டேன்னு சொல்லு!”
🤝 ஷஃபாலி & ஸ்மிருதி: அதிரடி கூட்டணி
(The 3000 Club Legends)
ஓப்பனிங்ல இறங்கி 4வது மேட்ச்ல இவங்க ரெண்டு பேரும் ஜோடி சேர்ந்து அடிச்சது 162 ரன்கள்! இது தான் இந்தியாவோட ஹையஸ்ட் பார்ட்னர்ஷிப். 🚀
T20-ல மொத்தமா 3107 ரன்கள் சேர்த்து, 3000 ரன்களை கடந்த உலகின் முதல் ஜோடி ஆகிட்டாங்க! 🌏🤝
- தொடர்ந்து மூன்று அரைசதம் (50s)! 🏏
- இந்த சீரிஸ்ல மட்டும் 241 ரன்கள் .
💀“ஆரம்பிச்சாலே அதிரடி தானா?
(Shafali & Smriti): Sir, just look at the stats… 3107 runs partnership! This is pure business!” 😎
🔥 கேப்டன் ஹர்மன்பிரீத் & டீம் இந்தியா:
தி வின்னர்ஸ்!
💥 221 / 2 💥
இது தான் இந்திய மகளிர் அணியின் அதிகபட்ச T20 ஸ்கோர்! (அடிச்ச அடியில் ஸ்ரீலங்கா கதிகலங்கி போயிட்டாங்க 🤯)
79 வெற்றிகள்! 🏆
(ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் – 76 வெற்றிகள் சாதனையை முறியடிச்சுட்டாரு. Most Successful Captain in T20 History!)
மைதானத்தில் கண்டது வெற்றியின் யோகம்! ✨
இருநூற்றி இருபது ஒன்று ரன்கள் குவிப்பு, 🏏
உலக அரங்கில் இதுவே இந்தியாவின் சிறப்பு! “
🗣️“எத்தனை தடவ சொன்னாலும் புரியாதா உனக்கு? இந்தியா கிட்ட வச்சுக்காதனு…
நாங்க அடிச்சா தாங்க மாட்ட… 5-0 னு ஓடவிட்டுட்டோம்ல!” 😂
🏁 புள்ளிவிவரங்கள் பொய் சொல்லாது! பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங்னு எல்லாத்துலயும் பட்டைய கிளப்பி, “நாங்க வேற மாரி” னு நிரூபிச்சுட்டாங்க.
“Records are meant to be broken…
ஆனா இந்த டீம் செட் பண்ண ரெக்கார்டை உடைக்க ரொம்ப வருஷம் ஆகும் பாஸ்!” 🚀