2026 தனுசு ராசி : புதையல் யோகம்

🏹 2026 தனுசு ராசி பலன்

“அதிர்ஷ்டம்னா என்னனு தெரியுமா?” 💎💰
(இது சாதாரண வருஷம் இல்ல, ‘புதையல்’ கிடைக்கிற வருஷம்!)

 🐍“நேரம் நல்லா இருந்தா… ஓடுற பாம்பை கூட மிதிக்கலாம்னு சொல்லுவாங்க…
ஆனா தனுசுக்கு இந்த வருஷம் பாம்பே வந்து படமெடுத்து ஆடும்!” 🐍💃

வணக்கம் தனுசு ராசி அன்பர்களே! 👋
நீங்க எப்பவுமே எதார்த்தவாதி. “உழைச்சா தான் சோறு, அதிர்ஷ்டம் எல்லாம் சும்மா”னு பேசுற ஆளுங்க நீங்க. ஆனா, 2026-ம் ஆண்டு உங்க கொள்கையையே மாத்தப் போகுது. 😲

“சார்… நான் லாட்டரி சீட்டே வாங்கல.. ஆனா எனக்கு எப்படி சார் பரிசு விழுந்துச்சு?” – னு நீங்களே ஆச்சரியப்படுற அளவுக்கு அதிசயங்கள் நடக்கப் போகுது. ✨


🏹 தனுசு ராசிக்கான பிரத்யேக கவிதை

“குறி தவறாத வில்லே –
இனி குறைகள் எல்லாம் தீரும்! 🎯

எட்டில் குரு உச்சம் –
உனக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் மிச்சம்! 🍯

கடல் தாண்டி செல்வாய்…
கனவு மாளிகை கட்டுவாய்… 🏰

தனுசு ராசி சிங்கமே…
இனி தரணியை நீ ஆளுவாய்! 🦁”

🪐 1. கிரகங்களின் ஆட்டம்: “புதையல் யோகம்!”

👑 விபரீத ராஜயோகம்: குரு பகவான் 8-ம் இடத்துல போய் மறையறாரேனு பயப்படாதீங்க. அவர் அங்கே “உச்சம்”  ஆகிறார். இதுதான் இந்த வருஷத்தோட ஹைலைட்!

💸காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது

ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட், ஏன் சிலருக்கு பூர்வீக சொத்து, உயில் சொத்துனு எதிர்பார்க்காத இடத்துல இருந்து பணம் கொட்டும். இது “டபுள் தமாக்கா “ வருஷம். 🧨

குரு பார்வை ➡️ குடும்பம் (2) & சுகம் (4) = சுக்கிர திசை தான்! 🏘️🚗

✈️ 2. வெளிநாடு & பயணம்
(“நினைச்சாலே பறக்கலாம்!”)

ஜோதிடர்கள் இந்த வருஷம் தனுசுக்கு கொடுத்திருக்கிற டைட்டில் “பரதேச யோகம்”. நீங்க வெளிநாடு போகணும்னு நினைச்சா மட்டும் போதும், விசா வீடு தேடி வரும். 🛂

  • 🎓 மாணவர்கள்: ஆஸ்திரேலியா, கனடா, லண்டன்னு நினைச்ச இடத்துல சீட் கிடைக்கும். இது உங்களுக்கு பொன்னான நேரம்.
  • 💼 வேலை: “இங்க வேலை செஞ்சது போதும்”னு நினைக்கிறீங்களா? ஃப்ளைட் ஏறுங்க. அங்க போய் செட்டில் ஆகி, அங்கேயே சொத்து வாங்குற அளவுக்கு யோகம் இருக்கு. 🏠🌏

🎶 “உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக!” 🌍


💎 3. சொகுசு வாழ்க்கை
(“ராஜ வாழ்க்கை!”)

🏰 குரு பார்வை (4-ம் இடம்):

இதுவரைக்கும் சாதாரண பட்டன் போன் யூஸ் பண்ணவங்க, ஐபோன் (iPhone) வாங்குவீங்க. 📱 வாடகை வீட்டுல இருந்தவங்க, சொந்த லக்சூரியஸ்  வீடு வாங்குவீங்க.

🎨 இன்டீரியர் & கார்: வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கிறதுல இருந்து, சோபா செட் மாத்துறது வரைக்கும் அழகுபடுத்துவீங்க. புது கார் வாங்குற யோகம் உறுதி! 🚗✨

👩‍🦰 பெண்களுக்கு:

“இவ்வளவு நாள் என் பேச்சை யாரும் கேட்கலையே”னு வருத்தப்பட்டீங்கல்ல? இனி உங்க ராஜ்யம் தான். கணவர் உங்க பேச்சை கேட்பார். 👑


❤️ 4. காதல் & திருமணம்
(“காதல் கைகூடும்!”)

5-ம் அதிபதி செவ்வாய் உச்சம்! + குரு பார்வை = வெற்றி!

  • 💑 காதல் திருமணம்: வீட்ல எதிர்ப்பு இருந்தாலும், குரு பார்வையால சமாதானம் ஆகி, டும் டும் டும் கொட்டும். 🎺
  • 💍 மறுமணம்: விவாகரத்து ஆகி தனிமையில் இருப்பவர்களுக்கு, ஒரு நல்ல துணை அமைந்து வாழ்க்கை செட்டில் ஆகும்.

🎼 “கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே…
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்!”

🤫 5. ஒரு சின்ன எச்சரிக்கை
(“சீக்ரெட் முக்கியம் பிகிலு!”)

எல்லாம் நல்லா இருந்தாலும், ஒரு சின்ன இடத்துல நீங்க உஷாரா இருக்கணும். குரு 8-ம் இடத்துல இருக்கறதால, “ரகசியம்” ரொம்ப முக்கியம். 🤐

🛑 அட்வைஸ்:

“நீங்க என்ன பிளான் பண்ணாலும், அது நடந்து முடியுற வரைக்கும் வெளில சொல்லாதீங்க.
சொன்னா திருஷ்டி பட்டு காரியம் கெட்டுடும்.” 🧿

🩺 ஆரோக்கியம்:

4-ம் இடத்துல சனி பகவான் (அர்த்தாஷ்டம சனி). வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், அஜீரண கோளாறு வரலாம்.

🚫 No: பாஸ்ட் ஃபுட், காரமான உணவு.
Yes: தயிர் சாதம், லெமன் ரைஸ் (சாத்வீகமா சாப்பிடுங்க). 🍚🍋

🙏 6. பரிகாரம் & ஆன்மீகம்
(“குருவே சரணம்!”)

  • ⛩️ புளியறை தட்சிணாமூர்த்தி: தென்காசி பக்கம் இருக்கிற இந்த கோயிலுக்கு ஒரு முறை போயிட்டு வாங்க. இது தனுசு ராசிக்காரங்க கண்டிப்பா போக வேண்டிய தலம்.
  • 🍌 மஞ்சள் & கொண்டைக்கடலை: வியாழக்கிழமை மஞ்சள் வாழைப்பழம் சாப்பிடுங்க. வெள்ளை கொண்டைக்கடலையை வேக வச்சு தானம் கொடுங்க.
  • 🎵 லட்சுமி அஷ்டகம்: தினமும் காலையில யூடியூப்ல கேளுங்க. பணம் தடையில்லாம வரும். 💰
  • 🤐 மௌன விரதம்: வியாழக்கிழமை கொஞ்ச நேரம் மௌன விரதம் இருங்க. மனசு ஒருநிலைப்படும்.

🚀 7. எகிறி அடிக்கிற நேரம்!

தனுசு ராசி நண்பர்களே! 2026-ம் ஆண்டு உங்க வாழ்க்கையில ஒரு “மைல்கல்”. 🏁

👨‍👩‍👧‍👦 குடும்பம் சேரும்
🏠 சொத்து சேரும்
✈️ வெளிநாட்டு யோகம்

 🎬வாழ்க்கைல ஜெயிக்கிறதுக்கு மூணு விஷயம் தேவை.
திறமை, தன்னம்பிக்கை, அப்புறம் கொஞ்சம் அதிர்ஷ்டம்.
இந்த வருஷம் அந்த மூணுமே உங்ககிட்ட இருக்கு!” 🤩

இனி என்ன? கலக்குங்க! 2026 உங்களின் பொற்காலம்! ✨

– வாழ்க வளமுடன்! 🌿 –

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.