2026 கன்னி ராசி:தாறுமாறு தக்காளி சோறு!

♍ 2026 கன்னி ராசி பலன்

“தாறுமாறு தக்காளி சோறு!” 🍅🍚
(அஸ்தம் உஷார்… சித்திரை ஜோர்!)

🤣 “எதையும் பிளான் பண்ணி செய்யணும்…
பிளான் பண்ணாம பண்ணா இப்படித்தான்!”

வணக்கம் கன்னி ராசி நண்பர்களே! 👋
எப்பவுமே “பர்ஃபெக்ஷன்”  பார்க்கும் கன்னி ராசி நேயர்களுக்கு, பிறக்கப்போகும் 2026-ம் ஆண்டு ஒரு “ரோலர் கோஸ்டர் ரைடு” மாதிரி இருக்கப் போகுது. 🎢

போன வருஷம் (2025) நம்புனவங்க கழுத்த அறுத்துருப்பாங்க. நண்பனுக்கு கடன் வாங்கி கொடுத்து நீங்க கடன்காரனா ஆகியிருப்பீங்க. “நண்பேன்டா!” னு சொல்லி முதுவுல குத்துன கதை எல்லாம் முடிஞ்சு போச்சு. 🔪💔

இப்போ 2026-ல நீங்க எப்படி இருக்கணும்? கிரகங்கள் என்ன சொல்லுது? வாங்க ஒரு ரவுண்டு போவோம். 👇


😴 1. களம் எப்படி இருக்கு?
(“தூக்கம் வருமா…?”)

இந்த வருஷம் உங்க ராசிக்கு 12-ம் வீட்ல ஞானகாரகன் கேது உட்கார்ந்து இருக்கார். 6-ம் வீட்ல ராகு இருக்கார். 7-ம் வீட்ல (களத்திர ஸ்தானம்) சனி பகவான் ஆட்சி பண்ணிட்டு இருக்கார்.

🎶“தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே…”

🛑 ஆனா ரியாலிட்டி என்ன?

உங்களுக்கு அந்த பாட்டு செட் ஆகாது. ராத்திரி 2 மணி வரைக்கும் கண்ணு முழிச்சுக்கிட்டு, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Reels) தள்ளிக்கிட்டே இருப்பீங்க. 📱

“கையில போன்… கண்ணுல தூக்கம் இல்ல…” 😵

🧘 கேதுவின் பிளான்:

கேது மோட்ச காரகன். அவன் தூக்கத்தை கெடுத்து, உங்களை தியானம், யோகா, ஆன்மீகம் பக்கம் திருப்ப பார்ப்பான்.

  • நீங்க போனை நோண்டுனீங்கன்னா 👉 உடம்பு கெட்டுப்போகும்.
  • கண்ணை மூடி தியானம் பண்ணுனீங்கன்னா 👉 ஞானி ஆகிடுவீங்க.

சாய்ஸ் உங்களோடது! ✨

⭐ 2. நட்சத்திர பலன்கள்
(“யாரு அந்த தாறுமாறு?”)

2026-ல கன்னி ராசிக்குள்ள இருக்கிற மூணு நட்சத்திரங்களுக்கும் ஒரே பலன் கிடையாது. இதுல ஒருத்தர் மட்டும் ரொம்ப உஷாரா இருக்கணும். 🧐

✅ உத்திரம் & சித்திரை:

நீங்க தப்பிச்சிட்டீங்க! உங்களுக்கு “கேட் திறந்திருக்கு”. நினைச்சதை சாதிக்கலாம். வண்டி, வாகனம், வீடு வாங்குற யோகம் உண்டு. 🚗🏠

🌟 குறிப்பா செவ்வாய் திசை நடக்குற சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு, “தொட்டதெல்லாம் துலங்கும்”.
🚨 Warning Alert!

⚠️ அஸ்தம் நட்சத்திரம்:

இந்த வருஷத்தோட “தாறுமாறு” நீங்க தான். சந்திர திசை நடக்கும் அஸ்த நட்சத்திரக்காரர்கள் ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்.

🤣 வடிவேலு பாணி அட்வைஸ்:
“வேணாம்… வலிக்குது… அழுதுருவேன்!”

எந்த ரிஸ்க்கும் எடுக்காதீங்க. புதுசா எதையும் ட்ரை பண்ணாதீங்க. யாராச்சும் உதவி கேட்டா கூட, செய்ய போய் நீங்க மாட்டிக்காதீங்க. ஒரு பள்ளம் இருக்கு, அதுல விழுந்துராம ஓரமா போங்கன்னு சொல்றது பயமுறுத்துறதுக்காக இல்ல, பாதுகாப்புக்காக! 🛡️


💏 3. காதல் & குடும்பம்
(“வெள்ளைக் கொடி பறக்கட்டும்!”)

ஏழாம் இடத்துல சனி. இதுக்கு பேரு கண்டக சனி. சனி பகவான் களத்திர ஸ்தானத்துல உட்கார்ந்து என்ன செய்வார்? புருஷன்-பொண்டாட்டிக்குள்ள சும்மா “டாம் அண்ட் ஜெர்ரி”  மாதிரி சண்டை மூட்டி விடுவார். 🐭🐱

🎬 “பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டு ஜெயிச்சவனும் இல்ல…நெருப்புல இறங்கி பிழைச்சவனும் இல்ல!”

🏳️ 2026 ஸ்ட்ராட்டஜி: “வெள்ளைக் கொடி”

  • துணைவியார் என்ன சொன்னாலும் “சரிங்க, ஓகேங்க” னு சொல்லுங்க.
  • எதிர்த்து பேசினீங்க… வக்கீல் நோட்டீஸ் தான் மிச்சம். ⚖️
  • காதல்ல கூட ஈகோ பார்க்காதீங்க. “மௌனம் சம்மதம்” மட்டும் இல்ல, மௌனம் தான் இப்ப உங்க ஆயுதம். 🤫
📅 சித்திரை மாசத்துக்கு அப்புறம் பிரச்சனைகள் குறையும். ஜூன் மாசத்துக்கு மேல குரு பகவான் 9-ம் பார்வையா உங்க ராசியை பார்க்கும்போது, குடும்பத்துல குதூகலம் பிறக்கும். ✨

🏥 4. ஆரோக்கியம்
(“உடலும் உள்ளமும்!”)

6-ம் வீட்ல ராகு. தோல் நோய் , ஹார்மோன் பிரச்சனை ,காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள் வரலாம். 🤧

📜“சுவர் இருந்தால் தான் சித்திரம்…
சுகம் இருந்தால் தான் சரித்திரம்!”

💊 சின்னதா ஒரு சளி பிடிச்சா கூட உடனே டாக்டரை பாருங்க. “தனக்கு தானே வைத்தியம்” பார்க்காதீங்க.

குறிப்பா, மன அழுத்தம் (Stress) அதிகமாகும். வெளியில சிரிக்கிற மாதிரி இருப்பீங்க, ஆனா உள்ளுக்குள்ள எரிமலை வெடிச்சுக்கிட்டு இருக்கும். 🌋

 😎“பாக்கத்தான் நான் சாது…
மிரண்டு எழுந்தா நான் பூதம்!”

அப்படின்னு கத்தத் தோணும். ஆனா கத்தாதீங்க. யோகா பண்ணுங்க. மனசை ரிலாக்ஸா வச்சுக்கோங்க. 🧘‍♂️


💼 5. வேலை & தொழில்
(“இடம் மாறினால் யோகம்!”)

கன்னி ராசிக்காரங்க எப்பவுமே பர்பெக்ஷன் பார்ப்பீங்க. வேலையை நேசிப்பீங்க. “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” னு சொல்றது உங்களுக்கு தான் பொருந்தும். 👔

🚀 கெரியர் ஹைலைட்ஸ் (2026):

  • வேலை மாற்றம், இட மாற்றம், தொழில் மாற்றம் உறுதியா நடக்கும்.
  • ✈️ வெளிநாடு போற யோகம் பிரகாசமா இருக்கு.
  • 💻 ஐடி (IT) ஃபீல்டுல இருக்கிறவங்களுக்கு ரெஃபரன்ஸ் மூலமா நல்ல வேலை கிடைக்கும்.

⚠️ கடன் எச்சரிக்கை:

தொழில்ல யாரையும் நம்பி கடன் கொடுக்காதீங்க. 6-ம் இடத்து ராகு “கடன் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது”. கொடுத்தா திரும்பாது, வாங்கினா கட்ட முடியாது. 🚫


🤫 6. வெற்றி ரகசியம்

இந்த வருஷம் நீங்க ஜெயிக்கணும்னா ஒரு ரகசியம் இருக்கு. எதையும் வெளில சொல்லாதீங்க.

🎵 
“யாரிடமும் சொல்லாதே… எவரிடமும் சொல்லாதே…”பாட்டு மாதிரி, உங்க பிளானை மனசுக்குள்ளயே வைங்க. 🔒

💡 கோல்டன் டிப்ஸ்:

“எந்த விஷயத்தை நீங்க சீக்ரெட்டா வச்சிருக்கீங்களோ, அது ஜெயிக்கும். எதை ஊருக்கெல்லாம் டண்டோரா போடுறீங்களோ, அது புஸ்ஸுனு போயிடும்.” 🤐

🎓 7. மாணவர்களுக்கு
(“கவனம் சிதறல்!”)

படிப்புல கன்னி ராசி பசங்க கெட்டி. ஆனா இந்த வருஷம் சனி பகவான் 3-ம் பார்வையா 4-ம் இடத்தைப் பார்க்கிறார். படிப்புல பிரேக் விழலாம். 📉

👨‍🏫 அட்வைஸ்:

“கனவு காணுங்கள்” னு கலாம் ஐயா சொன்னாரு. ஆனா நீங்க கனவு மட்டும் கண்டுட்டு இருக்காம, புத்தகத்தை திறந்து வச்சு படிங்க.

📵 செல்போனை தூக்கி தூர போடுங்க!
Good News: ஆராய்ச்சி படிப்பு, மெடிக்கல், சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் படிக்கிறவங்களுக்கு குரு பகவான் ஜூன் மாசத்துக்கு மேல பெரிய உதவியா இருப்பார்.

🙏 8. பரிகாரம்
(“சரணம் சரணம்!”)

பிரச்சனைகள் இருந்தாலும் சமாளிக்க கடவுள் இருக்கார். கன்னி ராசிக்கு இந்த வருஷம் கை கொடுக்கப் போற தெய்வம் மீனாட்சி அம்மன் மற்றும் பெருமாள்.

  • 🕉️ பெருமாள் சரணாகதி: தினமும் காலையில “விஷ்ணு சகஸ்ரநாமம்” கேளுங்க. அல்லது “கோவிந்தா… கோவிந்தா…” னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே இருங்க. பெருமாள் உங்க கூடவே இருப்பார்.
  • 🛕 மீனாட்சி அம்மன் வழிபாடு: மதுரை மீனாட்சி அம்மனை ஒரு முறை போய் தரிசனம் பண்ணிட்டு வாங்க. உங்க வாழ்க்கையில இருக்கிற குழப்பம் எல்லாம் தீர்ந்து தெளிவு பிறக்கும்.
  • 🌱 தானம்: புதன் கிழமை பச்சை பயறு தானம் பண்ணுங்க. ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு உதவுங்க.

🏁 9. கெத்து காட்டுங்க!

கன்னி ராசி அன்பர்களே! 2026-ம் ஆண்டு கொஞ்சம் சவாலா இருந்தாலும், நீங்க புத்திசாலி. “புத்திமான் பலவான்” னு சும்மாவா சொன்னாங்க? 🧠

  • ஜூன் மாசம் வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருங்க. 🤫
  • ஜூனுக்கு மேல குரு பகவான் உச்சம் அடைந்து உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவார். 🚀
  • ⚠️ அஸ்தம் நட்சத்திரக்காரங்க மட்டும் கொஞ்சம் “கேர்ஃபுல்”.

 “எண்ணிய முடிதல் வேண்டும்…
நல்லவே எண்ணல் வேண்டும்…
திண்ணிய நெஞ்சம் வேண்டும்…
தெளிந்த நல் அறிவு வேண்டும்!”

மன உறுதியோட, பெருமாள் அருளோட
இந்த 2026-ஐ எதிர்கொள்ளுங்க. வெற்றி நிச்சயம்! 🏆

– வாழ்க வளமுடன்! –

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.