2026 கும்ப ராசி பலன்: கும்பம் வெல்லும்!

🏺 2026 கும்ப ராசி பலன்

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?”
– ராகு, சனி ஆட்டம்… தப்பிக்க சரணாகதியே வழி! –

🧘‍♂️ தாரக மந்திரம்:

“எந்த நிலை வந்தாலும் கலங்காதிரு…
உன்னை உலகம் மதிக்கும் படி வாழ்ந்து விடு!”

வணக்கம் கும்ப ராசி உறவுகளே! 👋
வாழ்க்கைங்கிறது ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு மாதிரி. மேல போகும், கீழ வரும். தலை சுத்தும், ஆனா கடைசியில ஒரு த்ரில் இருக்கும். கும்ப ராசி அன்பர்களுக்கு கடந்த சில வருஷமாவே வாழ்க்கை அப்படித்தான் போயிட்டு இருக்கு.

🕶️ “வாழ்க்கை ஒரு வட்டம்… இதுல ஜெயிக்கிறவன் தோப்பான், தோக்குறவன் ஜெயிப்பான்!”

என்று சொன்ன மாதிரி, 2026-ம் ஆண்டு உங்களுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையா அமையப் போகுது. ஆனா, நிஜத்தை நாம ஒத்துக்கிட்டுதான் ஆகணும். இது சாதாரண வருஷம் இல்ல. ஒரு “சர்வைவல் த்ரில்லர்”  படம் மாதிரி. ஆபத்து இருக்கு, திருப்பங்கள் இருக்கு, ஆனா கிளைமாக்ஸ்ல நாம தான் ஜெயிக்க போறோம். 💪


🐍 1. களம் எப்படி இருக்கு?
(“பாலில் விழுந்த விஷப்பூச்சி…”)

ஜோதிட ரீதியா பார்த்தா, இப்ப உங்க ராசிக்குள்ள (லக்னத்தில்/சந்திரனில்) ராகு உட்கார்ந்து இருக்கார். இதை ஜென்ம ராகு-னு சொல்றோம். அதே நேரம், உங்க ராசிநாதன் சனி பகவான் இரண்டாம் வீட்ல (வாக்கு ஸ்தானம்) உட்கார்ந்து பாத சனியா வேலை செய்றார்.

🥛 “ஒரு பாத்திரத்துல சுத்தமான பால் இருக்கு… அது மேல ஒரு விஷப்பூச்சி ஊர்ந்து போனா எப்படி இருக்கும்?”

அப்படித்தான் இப்ப உங்க மனநிலை. வாழ்க்கை நல்லாதான் போற மாதிரி இருக்கும். ஆனா மனசுக்குள்ள ஒரு இனம் புரியாத பயம். “எவனோ நமக்கு செய்வினை வச்சுட்டான்… நம்மள சுத்தி சதி நடக்குது…” அப்படின்னு தோணிக்கிட்டே இருக்கும்.

🎵 “மயக்கமா கலக்கமா… மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்…
வாசல் தோறும் வேதனை இருக்கும்…
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை!”

(படம்: சுமைதாங்கி)

ராகுங்கிறது ஒரு மாயை. இல்லாத பிரச்சனையை இருக்கிற மாதிரி காட்டி, உங்களை பயமுறுத்துவார். தூக்கம் வராது. ஆனா பயப்படாதீங்க. இது கிரகங்களின் விளையாட்டுன்னு புரிஞ்சுகிட்டாலே பாதி பிரச்சனை சால்வ் ஆகிடும்.


🙊 2. குடும்பம் & பேச்சு
(“வாயை மூடி பேசுங்க பாஸ்!”)

இரண்டாம் இடத்துல சனி. இதுக்கு பேரு வாக்கு சனி. நீங்க நல்லதுக்கே பேசினாலும், அது எதிராளிக்கு வில்லங்கமா தெரியும். நீங்க “சாப்பிட்டியா?”-னு அன்பா கேட்பீங்க. ஆனா எதிராளிக்கு “இவன் ஏன்டா நம்மள கேள்வி கேட்குறான்?”னு தோணும்.

🤣“இவன் வாயத் திறந்தாலே லாரி டயரு வெடிக்குதுடா… சும்மா இரும்மா!”

குறிப்பா கணவன்-மனைவிக்குள்ள ஈகோ சண்டை வரும். ஏழாம் இடத்துல கேது இருக்கறதால, சின்ன சந்தேகத்தைக் கூட ஊதி பெருசாக்குவீங்க.

🎶 “சண்டை போடாமல்… எதுவும் நடக்காது
சண்டையில்லாமல்… உலகம் இயங்காது…”

🤐 2026 தாரக மந்திரம்: “மௌனம்”

இந்த பாட்டு கேக்க நல்லா இருக்கும். ஆனா வீட்ல இந்த பாட்டை ஓட விட்றாதீங்க. குடும்பத்துல நிம்மதி வேணும்னா, யார் என்ன சொன்னாலும், “சரிங்க, பாத்துக்கலாம்ங்க”ன்னு போயிக்கிட்டே இருங்க. இல்லன்னா, “குடும்பம் ஒரு கோவில்”-னு இருந்த வீடு, “மல்யுத்த களம்” ஆகிடும்.

🦁 3. ஆறுதல் தரும் குரு
(“சிங்கம் சிங்கிளா வருது!”)

“சார், எல்லாமே நெகட்டிவ்வா சொல்றீங்களே… நல்லது நடக்காதா?” அப்படின்னு நீங்க கேட்கிறது எனக்கு கேட்குது. 👂

கவலைப்படாதீங்க. “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?”-னு மீசை முறுக்குற நேரம் இது. ஏன்னா, ஆண்டின் தொடக்கத்துல குரு பகவான் 5-ம் இடத்துல இருந்து உங்க ராசியை பார்க்கிறார். குரு பார்வை கோடி நன்மை. ✨

🔥 “ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா…
என் பேச்ச நானே கேட்க மாட்டேன்!”

அதே மாதிரி, குரு பகவான் உங்களை காக்க முடிவு பண்ணிட்டார். ஜூன் மாசம் வரைக்கும் குரு பலம் உங்களுக்கு இருக்கு. எவ்ளோ பெரிய பிரச்சனை வந்தாலும், ஒரு கவசம் மாதிரி குரு உங்களை காப்பாத்துவார். 🛡️

⚠️ Note: ஜூன் மாசத்துக்கு மேல குரு 6-ம் இடத்துக்கு போறார். அப்போ கொஞ்சம் உஷாரா இருக்கணும். கடன் வாங்குறத குறைக்கணும்.

🏥 4. ஆரோக்கியம்
(“உடலும் உயிரும்…”)

உடம்பு தான் பாஸ் சொத்து. ஜென்ம ராகுவும், பாத சனியும் சேர்ந்து உடம்புல சின்ன சின்ன உபாதைகளை தருவாங்க. குறிப்பா கேஸ்ட்ரிக் பிரச்சனை , மூட்டு வலி, முதுகு வலி வரும்.

🚫 உணவு எச்சரிக்கை:

சாப்பிடுற சாப்பாட்டுல விஷம் கலக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதாவது கெட்டுப்போன உணவை சாப்பிட்டு அவஸ்தை படாதீங்க.

👩‍⚕️ தாயார் உடல்நிலை  மேல தனி கவனம் வேணும். அம்மாவுக்கு சின்னதா ஒரு சர்ஜரி அல்லது மருத்துவ செலவு வரலாம்.

🌿 சித்தர் பாடல் (திருமூலர்):

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்…
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்…
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே…
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!”

திருமூலர் சொன்ன மாதிரி, உடம்பை வளர்க்கறதுல கவனம் செலுத்துங்க. கண்டதை தின்னா, கண்ட இடத்துல வலி வரும். சுய வைத்தியம் பார்க்காதீங்க. 💊

✈️ 5. தொழில் & வெளிநாடு
(“வெற்றி கொடி கட்டு!”)

இவ்வளவு நேரம் பயமுறுத்திட்டேனே… இப்போ ஒரு மெகா குட் நியூஸ். இந்த 2026-ல கும்ப ராசிக்காரங்க கெத்து காட்டப் போற இடம் எது தெரியுமா? வேலை மற்றும் தொழில்! 💼

🌍 வெளிநாடு கனவு :

விசா கிடைக்கலையா? இந்த வருஷம் ட்ரை பண்ணுங்க… ராகு பகவான் அந்நிய தேசத்துல யோகத்தை அள்ளி கொடுப்பார். ✈️

🔥 “வெற்றி கொடி கட்டு…
படைக்கும் வரைக்கும்… நமக்கேது ஓய்வு?
பக்கம் வந்து நிற்கும்… வெற்றியின் தீவு!”

வேலையில்லாதவங்களுக்கு வேலை கிடைக்கும். ஆனா, உள்ளூர்ல இருக்கிறத விட வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு போறவங்களுக்கு யோகம் டாப் டக்கரா இருக்கும்.

⚙️ சனியின் ரூல்: “உழைப்பவன் என்றும் உயர்ப்பான்”. சனி பகவான் கஷ்டத்தை கொடுத்தாலும், உழைப்புக்கு ஏத்த ஊதியத்தை கண்டிப்பா கொடுப்பார்.

⚠️ பிசினஸ் அலர்ட்:

“ஆசை ரம்பம்… அதுல ஆடுனா என்ன லாபம்?”னு பேராசை படாம, கிடைக்கிற லாபத்தை வச்சு சேமிங்க. வீடு, கார் வாங்குறதுக்கு லோன் போடலாம். தப்பு இல்ல.


🎓 6. மாணவர்களுக்கு
(“கனவு காணுங்கள்!”)

📱 கவனச் சிதறல்:

படிக்கிற பசங்களுக்கு ராகு கொஞ்சம் கவனச் சிதறலை கொடுப்பார். (இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்னு நேரத்தை வீணடிக்க வைப்பார்).

🔬 ஆனா ஆராய்ச்சி படிப்பு , மெடிக்கல், கெமிக்கல் படிக்கிறவங்களுக்கு இது பொன்னான நேரம்.

🚀 அப்துல் கலாம் ஐயா வாக்கு:

“கனவு காணுங்கள்!”

ஆனா அந்த கனவை நனவாக்க, தூக்கத்தை தியாகம் பண்ணி படிக்கணும். 📚

🙏 7. ஆன்மீகம் & பரிகாரம்
(“சரணாகதி ஒன்றே வழி!”)

சரி, இப்போ பிரச்சனைய சமாளிக்க என்ன வழி? ஜோதிடர் மணி சார் சொன்ன மாதிரி, ஒரே வழி “சரணாகதி”.

“நான் தான் பெரிய ஆளு, என் அறிவு பெரியது” அப்படின்னு நினைச்சீங்கன்னா, சனி தலையில தட்டுவார். “எல்லாம் நீயே, உன் சித்தம் என் பாக்கியம்”னு கடவுள் கால்ல விழுந்தா, தூக்கி நிறுத்துவார். 🙌

🎵 எம்.எஸ். அம்மா பாடிய வரிகள்:

“குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா…
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா…
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் ஆனாலும்…
எனக்குக் குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!”

இந்த பாட்டுல இருக்கிற வைப்ரேஷன், உங்க மன அழுத்தத்தை போக்கிடும். கண்ணீர் விட்டு அழுது பிரார்த்தனை பண்ணுங்க. கண்ணீருக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். 💧

✨ கண்டிப்பா செய்ய வேண்டிய பரிகாரங்கள்:

  • 🛕 ஆதி கும்பேஸ்வரர்: கும்பகோணம் போய் கும்பேஸ்வரரையும், மங்களாம்பிகையையும் தரிசனம் பண்ணுங்க. (கும்ப ராசிக்குரிய கோவில்).
  • 🐍 ராகு-கேது சாந்தி: காளஹஸ்தி, திருப்பாம்புரம் அல்லது திருநாகேஸ்வரம் போய் ஒரு முறை தரிசனம் பண்ணிட்டு வாங்க. ராகுவோட உக்கிரம் குறையும்.
  • 🔱 கந்த சஷ்டி கவசம்: “காக்க காக்க கனகவேல் காக்க…” இதை தினமும் கேளுங்க. ராகுவோட விஷத் தன்மை உங்க உடம்பை அண்டாது.
  • 🪔 விளக்கு பூஜை: சனிக்கிழமை தோறும் 19 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்க. ராகு காலத்துல துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு போடுறது மனசுக்கு பெரிய ரிலாக்ஸ் கொடுக்கும்.
  • 🤲 தானம்: “அன்னதானம் போடு… அது அழுக்காக்குற மனச துடைக்கும்”. முடிஞ்ச வரைக்கும் கருப்பு உளுந்து, கொள்ளு தானம் பண்ணுங்க.

🏁 8. இன்னும் என்ன தோழா…?

கும்ப ராசி நண்பர்களே, 2026 ஆரம்பம் கொஞ்சம் சோதனை மாதிரி தெரிஞ்சாலும், முடிவு சாதனையாதான் இருக்கும். 🏆

🎼 ஏ.ஆர். ரஹ்மான் வரிகள்:

“எல்லா புகழும் இறைவனுக்கே…
நீங்க நினைச்சது நடக்கும் வாழ்க்கையிலே!”

ராகு மனசைக் குழப்புவார், சனி சோம்பேறித்தனத்தை கொடுப்பார். ஆனா, நீங்க சுறுசுறுப்பா இருந்து, இறைவனை கெட்டியா பிடிச்சுக்கிட்டா, இந்த 2026-ம் ஆண்டு உங்க வாழ்க்கையில ஒரு மறக்க முடியாத வெற்றி ஆண்டா மாறும்.

🏺 தைரியமா இருங்க…
கும்பம் வெல்லும்! தெம்பு கூடும்! 💪

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.