“குடிமகன்களுக்கு மட்டுமல்ல…”
குடும்பஸ்தர்களுக்கும் ஆபத்து! 👨👩👧👦
கல்லீரலைத் தின்னும் அமைதி அரக்கன்! (Fatty Liver)
Lancet Report – 2026 Alert
🕵️♂️ கண்ணுக்குத் தெரியாத எதிரி
ஆண்டு 2026. வீதிகளில் நடமாடும் மக்களில் 10 பேரை வரிசையாக நிறுத்துங்கள். அதில் 4 பேரின் உடலில் ஒரு “டைம் பாம்” சத்தமில்லாமல் ஊடுருவிக் கொண்டிருக்கிறான்!
‘தி லான்செட்’ எச்சரிக்கை: இது நோய் அல்ல… இது ஒரு “அமைதியான தொற்றுநோய்” !
“சத்தம் போடாமல் கொல்லும் அரக்கன் இவன்…
உடலுக்குள் ஊடுருவும் விஷம் இவன்!
வலிகள் எதுவும் தருவதில்லை – ஆனால்
வாழ்க்கையை மெல்லத் தின்பவன்!” 🦠
🎭வில்லன் யார்?
🍷 பழைய வில்லன்
“சார் சரக்கு அடிப்பாரா?” – மதுபானம் மட்டுமே காரணம் அல்ல!
🍰 புதிய வில்லன்
இனிப்பு, நொறுக்குத் தீனி, சோம்பேறி வாழ்க்கை!
MASLD: மது அருந்தாதவர்களுக்கும் வரும் ஆபத்து.
“நான் தண்ணியடித்ததே இல்லை டாக்டர்…” என்று பெருமையாகச் சொல்பவர்களையும் இந்த நோய் விட்டுவைக்கவில்லை!
பின்னே ஏன் இந்தத் தண்டனை? – உன் பிரியாணிப் பசியே இதற்கு முதல் வினை!” 🍗
📊 அதிர வைக்கும் புள்ளிவிவரம்
- 🔍 ஆய்வு: CSIR & Phenome India (7,700+ பேர்).
- 📈 முடிவு: 38.9% பேருக்குக் கல்லீரலில் கொழுப்பு!
- ⚠️ அபாயம்: பலருக்கு ‘ஃபைப்ரோசிஸ்’ தொடங்கிவிட்டது. கல்லீரல் கல்லாக மாறுகிறது!
👻 ஆபத்தின் பயணம்
ஆரம்பத்தில் வலி இருக்காது. வாந்தி இருக்காது. ஆனால் உள்ளே…
கொழுப்பு ➡️ வீக்கம் ➡️ வடு ➡️ சிரோசிஸ்/கேன்சர் .
🛡️ தடுப்புச் சுவர்: தப்பிக்க வழியுண்டா?
எடையைக் குறையுங்கள்
உடல் எடையில் 5-10% குறைந்தாலே, கல்லீரலில் உள்ள கொழுப்பு காணாமல் போய்விடும்.
உணவை மாற்றுங்கள்
சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு Good-Bye! காய்கறிகள், பழங்களைச் சேருங்கள்.
வியர்க்க விறுவிறுக்க நடங்கள்
உடற்பயிற்சிதான் கல்லீரலைக் காக்கும் கவச குண்டலம்.
லான்செட் ஆய்வு ஒரு அபாயச் சங்கு ஊதியிருக்கிறது. நாவின் ருசிக்காக நாம் சாப்பிடும் ஒவ்வொரு முறையற்ற உணவும், நம் கல்லீரலில் விழும் ஒவ்வொரு அடி.
விழித்துக் கொள்வோம்… நோயின்றி வாழ்வோம்!
“உணவே மருந்தென்று வாழ்ந்த இனம்…
இன்று உணவே விஷமென்று மாறும் கணம்!
கல்லீரலைக் காப்போம் கரங்கள் கோர்த்து – இனி
கவலை இல்லா வாழ்வு வாழ்வோம் பார்த்து!” 🌿