உலோகங்கள் காட்டிய ருத்ரதாண்டவம்… சரிந்த ஆட்டோ சாம்ராஜ்யம்

27 January 2026 stock market

🎬  இன்றைய பங்குச்சந்தை கிளைமாக்ஸ் ரிப்போர்ட்! 📈📉

🐂 களம்: தலால் ஸ்ட்ரீட்.

⚔️ சூழல்: காளைகளுக்கும் கரடிகளுக்கும் நடந்த உக்கிரமான போர்.

🦸‍♂️ ஹீரோஸ் : ஹோம் ஃபர்ஸ்ட், கரூர் வைஸ்யா, ஜிண்டால் ஸ்டெயின்லெஸ்.

😈 வில்லன்ஸ் : எம் அண்ட் எம், ஏசியன் பெயிண்ட்ஸ்.

இன்றைய வர்த்தகக் களத்தில் உலோகப் பங்குகள் தீயாய் வேலை செய்தன. ஆனால், ஆட்டோமொபைல் மற்றும் பெயிண்ட் நிறுவனங்கள் கரடியின் பிடியில் சிக்கித் தவித்தன. வாங்க, இன்றைய ஆட்டத்தின் ஹைலைட்ஸைப் பார்ப்போம்!

🔥 சிகரம் தொட்ட சிங்கங்கள்!

  • 🏆 இன்றைய நாளின் “மேன் ஆஃப் தி மேட்ச்” யாருனு கேட்டா, அது ஹோம் ஃபர்ஸ்ட் தான். சும்மா 12.48% எகிறி, ரூ. 1,251.70-ல் கெத்தா நிக்குது!.
  • 🏦 அடுத்ததா நம்ம ஊரு வங்கி கரூர் வைஸ்யா . “சின்ன பேங்க்னு நினைச்சியா?”னு கேட்குற மாதிரி 10.19% உயர்ந்து, ரூ. 292.55-க்கு விஸ்வரூபம் எடுத்திருக்கு.
  • 🔩 ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் சும்மா விடுமா? இரும்பு மனிதனா மாறி 8.59% லாபத்தைக் கொடுத்திருக்கு.

🔩 உலோகங்களின் ஊழித்தாண்டவம்!

இன்னைக்கு மெட்டல் செக்டார்ல பட்டாசு வெடிச்சது. எதை எடுத்தாலும் லாபம் தான்!

  • 🏗️ ஹிந்துஸ்தான் காப்பர் : 4.90% உயர்வு.
  • 🏗️ JSW ஸ்டீல்: 4.44% வளர்ச்சி.
  • 🏗️ SAIL: 4.38% ஏற்றம்.
  • 🏗️ வேதாந்தா : 3.11% லாபம்.
  • 🏗️ நால்கோ : 3.76% உயர்வு.

🦅 அதானியின் அதிரடி!

அதானி குரூப் பங்குகள் இன்னைக்கு பீனிக்ஸ் பறவை மாதிரி எழுந்து நின்னது.

  • அதானி என்டர்பிரைசஸ்: 5.11% உயர்வு.
  • அதானி எனர்ஜி: 4.48% ஏற்றம்.
  • அதானி போர்ட்ஸ்: 4.24% வளர்ச்சி.
  • அதானி கிரீன்: 3.40% லாபம்.

💔 சரிந்த சாம்ராஜ்யங்கள்

எல்லாரும் சிரிக்கும்போது சிலர் அழத்தானே வேண்டும்? இன்னைக்கு அடி வாங்கியது ஆட்டோமொபைல் ஜாம்பவான்கள்.

  • 🔻 மஹிந்திரா அண்ட் மஹிந்திரா : பிரேக் பிடிக்காம சறுக்கி, 4.19% நஷ்டத்துல முடிஞ்சது.
  • 🔻 கோடக் மஹிந்திரா பேங்க்: 3.14% சறுக்கல்.
  • 🔻 ஏசியன் பெயிண்ட்ஸ் : கலர் மங்கிப்போய் 2.81% குறைஞ்சிருக்கு.
  • 🔻 மாருதி சுஸுகி: 1.42% இறக்கம்.
  • 🔻 ரிலையன்ஸ்: லேசான சறுக்கல் (-0.08%).

✍️ சந்தை கவிதை

இரும்பும் உருக்கும் இன்று தங்கம், வங்கித் துறையில் கரூர் சிங்கம்!
அதானிப் பங்குகள் ஏறுமுகம், ஆட்டோ பங்குகள் இறங்குமுகம்!
ஏற்றம் இறக்கம் சகஜமப்பா, நாளைப் பொழுதும் விடியுமப்பா! 🌤️

🔥 “சந்தையில் எவன் ஏறுவான், எவன் இறங்குவான்னு கணிக்கவே முடியாது… ஆனா இன்னைக்கு ‘மெட்டல்’ பக்கம் நின்னவன் ராஜா, ‘ஆட்டோ’ பக்கம் போனவன் கூஜா!” 👑

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.