2026 மிதுனம் – இப்போ நம்ம டைம்! ♊️🔥

2026 மிதுன ராசி பலன்கள்

“வாத்தி ரைடு… இனிமேல் நான் தான் லீடு!” ♊️🔥

வணக்கம் மச்சிகளா! (மிதுன ராசி சொந்தங்களே!)

எப்படி போச்சு 2025? “அட போங்க பாஸ்… ஃபர்ஸ்ட் ஆஃப் சும்மா இழுவையாவும், செகண்ட் ஆஃப் கொஞ்சம் பரவாயில்லாமலும் போச்சு”னுதானே சொல்றீங்க? கவலைப்படாதீங்க.

சினிமாவுல ஹீரோவுக்கு ஆரம்பத்துல தான் அடி மேல அடி விழும். ஆனா கிளைமாக்ஸ்ல, அந்த ஹீரோ எழுந்து வந்து அடிக்கிற அடி இருக்கே… தியேட்டரே அதிரும்ல? அந்த மாதிரி ஒரு அதிரடி ஆட்டத்தை தான் இந்த 2026-ம் வருஷம் உங்களுக்கு கொடுக்கப் போகுது.

நம்ம ராசி நாதன் புதன் ஒரு பக்கம் இருக்க, ஆட்டம் காட்டுற கிரகங்கள் எல்லாம் இப்ப உங்களுக்கு “ஜால்ரா” போடுற இடத்துக்கு வந்துட்டாங்க. குறிப்பா சொல்லணும்னா, இது உங்களுக்கு ஒரு “லைஃப் சேஞ்சிங் “ வருஷம்.

வாங்க, ஒவ்வொரு ஏரியாவா பிரிச்சு மேஞ்சுருவோம்! 👇

🦁 1. கெரியர் & வேலை: “சிங்கம் சிங்கிளா களம் இறங்குது!”

வேலைக்கு போற மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வருஷம் ஒரு “பாகுபலி” மொமெண்ட் தான். ஏன்னா, கர்மகாரகன் சனி பகவான் உங்க ராசிக்கு 10-ம் இடத்துல (தொழில் ஸ்தானம்) வந்து அரியாசனம் போட்டு உட்கார்ந்துட்டாரு.

🚀 பதவி உயர்வு :போன வருஷம் வரைக்கும், “எவ்ளோ தான்டா உழைக்கிறது? மாடு மாதிரி உழைச்சாலும், பேரு என்னமோ பக்கத்து சீட்டுக்காரனுக்கு தான் போகுது”னு புலம்பித் தவிச்சீங்களா? அந்த கதை எல்லாம் இனி கட்! இந்த 2026-ல உங்க உழைப்புக்கான “ரெகக்னிஷன்” தேடி வரும். உங்க பாஸ் உங்களை கூப்பிட்டு, “நீ இல்லாம இந்த கம்பெனி இல்லப்பா”னு சொல்லி ஒரு பெரிய பதவியை கொடுப்பாரு.
💰 சம்பள உயர்வு:பதவி மட்டும் இல்ல, பர்ஸுல கனமா சம்பளமும் ஏறும். டிசிக்னேஷன் மாறும், கூடவே உங்க கெத்தும் மாறும்.
🎓 புது அனுபவம்:வேலை தேடிட்டு இருக்கிற ஃப்ரெஷர்ஸுக்கும், வேலை மாறணும்னு நினைக்கிறவங்களுக்கும் இது செம்ம டைம். புதுசா நிறைய கத்துப்பீங்க, நிறைய அனுபவம் கிடைக்கும்.
⚖️ வழக்குகள் காலி:ஆபீஸ்ல உங்க மேல எவனாவது பழி போட்டு, கோர்ட் கேஸ்னு போயிருந்தா, அந்த கேஸ் எல்லாம் தவிடு பொடியா ஆகிடும். வெற்றி உங்க பக்கம் தான்!

✈️🌍 2. ஃபாரின் சான்ஸ்: “பிளைட் ஏறப்போறோம்… டாட்டா காட்டப்போறோம்!”

வெளிநாட்டு மோகம் இருக்கிற மிதுன ராசி இளசுகளுக்கு இது ஒரு “ஜாக்பாட்” வருஷம். ஏன்னா, ராகு பகவான் உங்க ராசிக்கு 9-ம் இடத்துல (பாக்கிய ஸ்தானம்) இருக்காரு.

🛂 விசா ஓகே:பாஸ்போர்ட்ல தூசி தட்டி வைங்க. விசா கிடைக்குமா கிடைக்காதானு இழுபறியா இருந்த நிலைமை மாறி, “வெல்கம் டூ அமெரிக்கா/கனடா”னு கூப்பிடுவாங்க.
🏡 PR & குடியுரிமை:ஏற்கனவே வெளிநாட்டுல வேலை பார்த்துட்டு, “எப்போடா இந்த நாட்டு சிட்டிசன்ஷிப் கிடைக்கும்?”னு ஏங்கிட்டு இருக்கிறவங்களுக்கு, இந்த வருஷம் PR  கன்ஃபார்ம். உங்க வேலைக்கு ஒரு நிரந்தரத் தன்மை கிடைக்கும். செட்டில் ஆகப்போறீங்க பாஸ்!

🏠🔑 3. சொந்த வீடு & சொத்து: “வாடகை வீட்டுக்கு குட்-பை!”

“சொந்தமா ஒரு வீடு இல்லையே”ங்கிற ஏக்கம் இந்த வருஷத்தோட தீரப்போகுது. சனி பகவான் 10-ம் இடத்துல இருக்கறதால, பூர்வீக சொத்துல வீடு கட்டுற யோகம் உண்டாகும்.

🏦 கடன் வாங்கியாவது வாங்குங்க:உங்ககிட்ட கையில காசு இல்லைனாலும் பரவாயில்லை, பேங்க்ல லோன் போட்டாவது ஒரு சின்ன இடத்தையோ, ஃப்ளாட்டையோ வாங்கிப் போடுங்க. ஏன்னா, இது நிலத்துல முதலீடு செய்ய வேண்டிய நேரம்.
📜 விழியாத சொத்து விற்கும்:ரொம்ப வருஷமா “இந்த இடத்தை விக்க முடியலையே”னு முடங்கிப் போய் கிடந்த சொத்து, ராகு பகவான் அருளால நல்ல விலைக்கு வித்துத் தீரும். அந்த காசு உங்க கஜானாவை நிரப்பும்.

💰📉 4. பணம் & பொருளாதாரம்: “கடன் சுமை குறையும்!”

பணப்புழக்கம் இந்த வருஷம் தாராளமா இருக்கும். தொழில்ல நல்ல லாபம் கிடைக்கும். இதனால என்ன நன்மைனா, கழுத்தை நெரிச்சுகிட்டு இருந்த பழைய கடன்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா அடைச்சு முடிப்பீங்க.

“அப்பாடா… இப்போ தான் மூச்சு விட முடியுது”னு ஒரு நிம்மதி பெருமூச்சு விடுவீங்க. உங்க பொருளாதார நிலைமை (Financial Status) இந்த வருஷம் ஒரு படி மேல தான் போகும்.

👨‍👩‍👧‍👦🏔️ 5. குடும்பம் & சந்தோஷம்: “கொடைக்கானல் டூர் ரெடி!”

குரு பகவான் உங்க ராசிக்கு 2-ம் இடத்துல (குடும்ப ஸ்தானம்) உச்சம் அடையப் போறாரு. குடும்பத்துல இத்தனை நாளா இருந்த சண்ட சச்சரவு எல்லாம் பனி போல விலகிடும்.

🚌 சுற்றுலா:குரு 2-ம் வீட்டுக்கு வந்தா என்ன நடக்கும்? குடும்பத்தோட ஜாலியா டூர் போவீங்க. அதுவும் குறிப்பா “கொடைக்கானல், ஊட்டி” மாதிரி குளிர் பிரதேசங்களுக்கு போயி என்ஜாய் பண்ற வாய்ப்பு அமையும்.
👶 மழலைச் செல்வம்:ரொம்ப வருஷமா தொட்டில் ஆட்ட காத்திருந்த தம்பதிகளுக்கு, இந்த 2026-ல அழகான குழந்தை பிறக்கும் யோகம் இருக்கு. வீடே மகிழ்ச்சியல நிறையும்.

⚠️ 6. கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்

எல்லாமே பாசிட்டிவ்வா சொன்னா எப்படி? கொஞ்சம் உஷாரா இருக்க வேண்டிய இடங்களையும் தெரிஞ்சுக்கணும்ல?

👥 உடன்பிறப்புகள் :கேது பகவான் 3-ம் இடத்துல இருக்காரு. இதனால அண்ணன், தம்பி, தங்கச்சி கூட சின்ன சின்ன ஈகோ கிளாஷ் (Ego Clash) வரலாம். “பங்காளி சண்டை”னு பெருசாக்காம, நீங்க கொஞ்சம் விட்டு கொடுத்து போறது நல்லது.
🛑 முயற்சிகள் :ஏதாவது புதுசா ஆரம்பிச்சா, “இன்னைக்கு வேணாம், நாளைக்கு பாத்துக்கலாம்”னு ஒரு சோம்பேறித்தனம் வரும். பாதியிலேயே நிப்பாட்ட தோணும். கேது உங்களை முடக்க பாப்பாரு, ஆனா நீங்க “நெருப்புடா” மோட்-ல ஆக்டிவ்வா இருக்கணும்.
👴 அப்பா உடல்நிலை:9-ம் இடத்துல ராகு இருக்கறதால, அப்பாவோட உடல்நிலையில கொஞ்சம் அக்கறை காட்டுங்க. சின்னதா மருத்துவ செலவு வைக்க வாய்ப்பு இருக்கு. அதே மாதிரி அப்பா கூட சின்ன கருத்து வேறுபாடுகள் வரலாம், வாயை கொடுத்து வம்பை விலைக்கு வாங்காதீங்க.

😎 7.கடைசி ஸ்பார்க்!

மொத்தத்துல சொல்லணும்னா… 2025-ல நீங்க பட்ட கஷ்டத்துக்கு எல்லாம், கடவுள் மொத்தமா சேர்த்து வச்சு செய்யப்போற “செட்டில்மென்ட்” தான் இந்த 2026.

மே மாசத்துக்கு அப்புறம் உங்க கிராஃப் (Graph) சர்ர்ர்னு மேல ஏறப்போகுது. வேலை, தொழில், பணம், வீடுனு எல்லாத்துலயும் நீங்க ஒரு “கிங் மேக்கரா” வலம் வரப்போறீங்க. சின்ன சின்ன தடைகள் வந்தாலும், அதை தூக்கி சாப்பிட்டுட்டு போயிட்டே இருங்க.

🙏 தடையை உடைக்கும் வழி

பெருசா ஒன்னும் இல்ல பாஸ்…

  • 🛕 முடிஞ்சா அப்பப்போ கோயிலுக்கு போயிட்டு வாங்க.
  • 👴 குருமார்கள், வயசானவங்களுக்கு உதவுங்க.
  • 🌳 அரச மரத்துக்கு தண்ணி ஊத்துங்க.

“துணிஞ்சு நில்லு… துயரம் வெல்லு…
இனி மிதுனம் தான் கெத்து!” 🔥🚀

DINESH KARTHIK

We deliver news as cinema, blending honest storytelling and independent journalism to present bold, factual stories that inform, inspire, and challenge mainstream narratives worldwide.